Thursday, December 31, 2009

திருக்குறள்:176 (நல்லருள் வேண்டின் பிறன்பொருள் வேட்காதே...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 176

நல்லருள் வேண்டின் பிறன்பொருள் வேட்காதே...

In English

அருள் வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள் வெஃகிப்
பொல்லாத சூழ, கெடும்.

பொழிப்புரை :
[தெய்வ] அருளை விரும்பி நல்லாற்றின் கண் நிற்பவன், பிறர் பொருள் மேல் வேட்கை கொண்டு பொல்லாத வழிகளை எண்ணி அணுகினால், [அவனது நோக்கமும் வழியும் வாழ்வும்] கெடும்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
அருளை விரும்பி நல்வழியின் பால் நிற்பவன், பிறர் பொருள் மேல் வேட்கை கொண்டு பொல்லாதவற்றைச் சூழக் கொண்டால், அவனது நோக்கமும் வழியும் கெடும்.

நல்வழியில் நின்று அருளை விரும்புவோன், பிறர் பொருளை வேட்கை கொண்ட எண்ணம் உண்டான உடனேயே கெட்டு விடுகின்றான். அதாவது அவனது நல்லற வழியினின்று தவறி விட்டான் என்பது உறுதி. அதிலும் அவ்வேட்கையின் பால் பொல்லாதவை சூழ என்றால் தீதான வழிமுறைகளைக் கைக் கொண்டால், அணுகினால் அவனது நோக்கமும், வழியும், வாழ்க்கையும் கெடும் என்பது பொருள்.

அறநெறியை விடுத்து பிறர் பொருள் வேட்கை கொண்ட எண்ணத்தாலேயே ஒருவன் வழி தவறிவிடுவதால் அவன் இலக்கையோ, நலத்தையோ அடைவதில்லை என்பது சொல்லாமலேயே தெளிவாக இருக்கையில் மீண்டும் அதை வள்ளுவர் வலியுறுத்த வேண்டியதன் அவசியம் யாது? அவன் முழுவதுமாகக் கெட்டழிவான் என்பதை வலியுறுத்தவா? அது மட்டும் அல்ல.

அருள் எனும் கருணையைக் காட்ட நல்வழி நாடியவன், பிறர் பொருளை அபகரித்து அக்கருணையைத் தொடர எண்ணினால், அதன் பயனால் பொல்லாதவை சூழ நின்று கெட்டொழிவான் என்பது பொருள். அதாவது காசுக்கு வாங்காத கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதால் அருள்தான் வருமா? பிறன் பொருளைக் கொள்ளை அடிப்பது பிறருக்கு உதவத்தான் என்பதால் அவர் செய்யும் தீய அறம் புனிதமாகி விடுமா? அவருக்கு எந்தப் புண்ணியமும் வாராது என்பது பொருள்.

பிறரை ஏமாற்றி, வஞ்சித்து அல்லது துன்புறுத்தி அல்லது அபகரித்து அப் பொருளைக் கொண்டு மற்றோர் பால் காட்டும் கருணை என்பது நல்லறம் அல்ல என்பதே இங்கே புதைந்துள்ள பொருள்.

கொள்ளை அடித்துக் கோவில் கட்டுவதும், ஊரார் சொத்தைத் திருடி ஏழைகளுக்கு உதவுகிறேன் என்பதும் எப்படி என்றால் தனக்குச் சாதகமற்ற நீதிபதியைக் கொன்றுவிட்டு நீதி தழைக்கும் என்பது போலாகும். மேலும் தங்கள் தேவைகளுக்கும், வருமானத்திற்கும் திருமண மண்டபங்களைக் கட்டுவோர் பொது நலத்திற்காகக் கட்டியதாய்ப் புழங்காங்கிதம் அடைவது போல் ஆகும்.

அருள் என்பது நோக்கம் என்றால் நல்ல அறவழிதான் சாலை. புற வழிகளிலோ, குறுக்கு வழிகளிலோ, அபகரிப்புகளிலோ அதை அடைந்து விட முடியாது.

நல்லறத்தால் வேண்டிய தெய்வத்தின் நல்லருள் சிக்கிவிட்டால் வேண்டும் மா பொருள் கிட்டாதுதான் போய்விடுமோ? பிறகு பிறன் பொருள் வேட்கை எதற்காக? பக்தியில் முக்தி நிச்சயம் என்றால், பாவ வழிகள் எதற்காக? நல்லாற்றின் வழியால் நன்மை விளைவது நிச்சயமே. இயற்கையால் பழம் கனியக் காத்திருப்பதை விடுத்து அடித்து பழுக்க வைத்தால் பழுக்குமா அன்றில் இனிக்குமா? தேவை நல்லறத்தின் பால் பொறுமையும், திட நம்பிக்கையுமே.

தெய்வத்திடம் நல்லருளை நல்லறத்தை ஒழுகித்தான் பெற இயலும். பறிக்க இயலாது. அஃதல்லாது பிறன் பொருளை அபகரிக்கும் குறுக்கு வழியோ, திருட்டு வழியோ அருளைப் பெற உருப்படும் வழியோ, உய்விக்கும் வழியோ அல்ல. அவை திசை திருப்பி தீமையை மட்டுமே நல்கும்.

குறிப்புரை :
நல்லருள் வேண்டுவோர் பிறன் பொருளை அபகரித்து உய்விக்க எண்ணினால் தமது இலக்கும், வழியும், வாழ்வும் கெட்டு அழிவைதையே பயனாய்ப் பெறுவார்கள்.

அருஞ்சொற் பொருள் :
அருள் - கருணை, கனிவு,
ஆறு - வழி, பக்கம், உபாயம், இயல்பு, விதம்

ஒப்புரை :

திருமந்திரம்: 1245.
பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

திருமந்திரம்: 1438.
வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேனி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

திருமந்திரம்: 2648
உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்:

கள்வன் கடியன் கலதியிவன் என்னாத
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233

பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234

ஔவையார். ஆத்திசூடி:
87. மனந்தடு மாறேல்.
102. உத்தம னாயிரு.

ஔவையார். நல்வழி:
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 176

Wishing Grace should not Covet...
In Tamil

aruL veHki, ARRinkaN ninRAn, poruL veHkip
pollAtha sUza, kedum.

Meaning :
That who wishes the God's grace through virtuous path, when covets and approaches by wrong deeds, his goal, direction and life will get ruined.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
That who stands on virtuous path wishing the God's grace, when gets covetous and encircled by wrong activities, his goal, way and life will get ruined.

One who wishes the grace of God, on his covetousness on wealth of others instantly gets spoilt. It is sure and certain that he has failed from his virtuous path. Further to that when he is surrounded with bad and wrong deeds and approaches the evil ways, his goal of grace, his virtuous path and his life will go ruined is the meaning.

While it is very obvious and certain that one loses his goal, path and life immediately on ignoring his virtuous path coveting on others wealth, what is that necessary for Valluvar to emphasize it again? Is it to emphasize that he will get ruined in totality? Not only is that the answer.

That who adopted the good virtues to show or get the kindness or the graciousness, when tries to continue it through covetousness he will stand encircled by the evils and will get ruined completely is the meaning. For instance when one breaks a coconut for the street Ganesha God, without paying its cost to the owner, will that fetch him God's blessings? Will the robbing others goods though claimed only to help the others be a sacred act? No. Such wrong deeds will never get any grace is the meaning.

By cheating and deceiving or extorting others and using that goods to others is not the good virtue is the implicit meaning here.

Constructing temples through plundering, helping the poor through robbing others and such activities are like killing the non favorable judge and claiming that the justice will prevail. Also it is like the people who construct the community halls for their own earnings and benefits and amusing themselves that they are doing the public service.

If the grace is the motto then the right path is only the good virtues. It cannot be achieved through other ways, short cuts or by any covetousness.

When the grace of God is bestowed won't it help to achieve the required wealth as well? Then why should one get covetous? Why the sinner ways if the liberation is certain through devotion?
The good virtues only yield goodness. Instead of waiting the fruit to ripe by natural ways, if one makes through beating, will it ripe or be sweeter? Therefore only the requisites here are the patience and strong belief and trust on the good virtues.

The grace from the God is only possible through adopting the good virtues sincerely. It cannot be attained by snatching. Therefore without that way all other ways like covetous activities and stealing cannot be fruitful or materialistic. They can only divert the direction and yield only the evils.

Message :
That who desires grace of the God when covets on others and takes ill deeds will get ruined their goal, path and life.

***

1 comments:

UthamaPuthra said...

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு 2010ன் நல் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், வளமும் பொங்கிப் பெருக்கட்டும்.

My heartiest wishes to you all for a happy, prosperous and wonderful new year 2010.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...