Saturday, January 2, 2010

திருக்குறள்:179 (வேட்காதோரைச் சார்வாள் திருமகள்...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 179

வேட்காதோரைச் சார்வாள் திருமகள்...

In English

அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு.

பொழிப்புரை :
அறம் [இஃதென] அறிந்து பிறர் பொருளை வேட்காத அறிவு உடையாரைச் சேரும்; [அவர்தம்] திறம் அறிந்து ஆங்கே திருமகள்.

விரிவுரை :
அறம் ஈதென்று அறிந்து பிறர் பொருளை வேட்காத அறிவு உடையாரை அவர்தம் திறத்தை அறிந்து ஆங்கே திருமகள் சேர்வாள்.

பிறன் பொருளை வேட்காமை அறமென்றே அறிந்து நிற்பவர் பால், அவர் தம் தகுதிக்கேற்ப திருமகள் அவர்களைச் சென்றடைவாளாம். பிறன் பொருளை வேட்காதவவரைத் திருமகள் சார்ந்து பயன் தருவாள் என்றால் மிகவும் பொதுவானதாக ஆகி விடும். இதில் அத்தகையோருக்கும் அவரவர் நேர்மைத் தகுதிக்கேற்ப நிற்பாள் என்று கூறுவதே சிறப்பானது, கவனத்தில் கொள்ள வேண்டியது.

அறம் ஈதென்ற தெளிவுற்ற மதியொடு, இதுவே கொள்கையென்ற திடமுற்ற மனதொடு, நேர்மைத் திறத்தொடு, தமது ஆற்றலால் செயல் ஆற்றுபவரைத்தானே வெற்றித் திருமகள் பற்றி நிற்பாள். கவனம் சிதைவுறாத மனமும், நல்லறம் செலுத்தும் சாலையுமே பயமற்ற செல்வத்தைக் கொடுக்கும். அதிருஷ்டமும், வெற்றியும் முன்வினையோ, பின்வினையோ எதாக இருந்தாலும் அவை நல்லெண்ணத்தால் மட்டுமே கை கூடும். வெற்றிக்கு உளவியலாளர்கள் கூறும் வழியும் இதுவே ஆகும். நல்லறத்தால் வரும் நல்லெண்ணமும், சிதறாத கொள்கைப் பிடிப்பும், இலக்கின் தெளிவும் வெற்றியைப் பெற்றுத் தரும். வெற்றிகள் இருக்குமிடமே திருமகள் இருக்குமிடம்.

முன்னேற விளைபவர் குறுக்குவழியால் பிறரின் திறமையைத் திருடி மேல் வர எண்ணினால் அவமானங்களையும், துன்பத்தையும் தான் இறுதியில் சந்திக்க வேண்டி இருக்கும். திசை மாறிய மனது இறுதி இலக்கை அடைவதும் இல்லை; தீய வழிகள் என்றைக்கும் சிறப்பை நல்குவதுமில்லை.

திருமகள் சென்ற இடமெல்லாம் செல்வ வளத்தையும் நலத்தையும் அள்ளிக் கொடுக்கும் தெய்வம் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். எனவே பிறன் பொருள் வேட்காமை என்பது சென்ற குறளில் சொன்னது போல் செல்வத்தின் சுருங்காமை அதாவது வற்றாமையை மாத்திரம் அல்ல வளத்தையும் கொடுக்கும் என்பது இங்கே தெளிவு.

குறிப்புரை :
பிறன் பொருள் வேட்கா நன்மக்கள் பால் அவர் தம் தகுதிக்கேற்ப திருமகள் சென்றடைவாள்.

அருஞ்சொற் பொருள் :
திறம் - கூறு, வகை, இயல்பு, சார்பு, சுற்றம், வழிமுறை, திறமை, ஆற்றல், சக்தி, சிறப்பு, மேன்மை, நேர்மை, நல்லொழுக்கம், கற்பு.

ஒப்புரை :

திருமந்திரம்: 1835
கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே.

திருமந்திரம்: 1843
காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

திருமந்திரம்: 2518
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் :

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

ஔவையார். மூதுரை:
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29

ஔவையார். நல்வழி:
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 179

Fortune benefits the non-covetous...




In Tamil

aRan aRinthu veHkA aRivu udaiyArch chErum
thiRan aRinthu AngkE thiru.

Meaning :
The Goddess of Luck reaches out appropriate to their uprightness to those wise who understood that as the righteous virtue and are free from covetousness.

Explanation :

The Goddess of fortune joins appropriate to their just to those wise who learnt that as the virtue and stood free from the covetousness on others.

It is said that the Goddess of fortune reaches out to those who believe that as the righteous virtue and follow the non covetousness sincerely. It would have been simpler if it was stated as the Goddess of fortune would join those with non covetous. Here it is mentioned specifically as 'depending upon their uprightness' or 'appropriate to their excellence / ability ' is very special and worth notable.

The Goddess of victory will join only those who accomplish the work with the clear mind about the virtue, strong commitment to the policy, sincere uprightness, determination and effort. Only the un-deviated mind and the good virtuous path can give the wealth of no fear. Luck and victory is possible only by positive thinking even though through the deeds of current or previous. This is the method prescribed by the psychologist to be successful in life. The good thinking coming out of good virtues, complete involvement and clear goals attains the victory. And the victorious place is supposed to be where Goddess of victory resides.

Those who aim the success in life, if they think of choosing the short cut through stealing others efforts have to face only the anguish and disgrace at the end. The deviated mind never reaches the destination as well. The evil ways never yield prosperity or eminence.

We already know that the Goddess of luck wherever reaches bestows the wealth and goodness in abundance. Therefore the non covetousness not only ensures the wealth not shrinking as said the previous Kural but also grows appropriately is made more clear here.


Message :
Appropriate to their just the Goddess of Fortune joins them that who are free from covetousness.

***

Friday, January 1, 2010

திருக்குறள்:178 (குன்றாமை வேண்டின் வேட்காமை நன்று...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 178

குன்றாமை வேண்டின் வேட்காமை நன்று...

In English

’அஃகாமை செல்வத்திற்கு யாது?’ எனின், வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்.

பொழிப்புரை :
’வற்றாமை செல்வத்திற்கு எது?’ என்றால், வேட்காமை வேண்டும் பிறன் கைப் பொருள்.

விரிவுரை :
ஒருவனுடைய செல்வம் குன்றாமல் இருக்க வழி எது என்றால், அவன் பிறன் கைப் பொருளைக் கவர எண்ணாது இருத்தலே ஆகும்.

தீதை எண்ணினால் அல்லது தீதைச் செய்தால் இருப்பதும் அழிந்து போகும் என்பது கருத்து.

நாம் பிறருக்கு எதைச் செய்ய எண்ணுகின்றோமோ அதுவே நமக்கு நடக்கும். காரணம் நாம் எதை ஆழ்ந்து எண்ணுகின்றோமோ அது நமது ஆழ் மனத்தில் பதிந்து விடுகின்றது. தெரிந்தோ, தெரியாமலோ, பிறருக்கோ, தனக்கோ என்றெல்லம் பகுத்தறியாத ஆழ்மனம் நமது எண்ணத்தின் விருப்பத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டு விடுகின்றது. அதை வஞ்சகமே இல்லாது தனக்கே விளைவித்தும் விடுகின்றது.

இதைத்தான் ’கெடுவான் கேடு நினைப்பான் தனக்கே வரும் பெரும் கேடு’ என்றும் சொல்வார்கள்.

எப்போதும் நற் சிந்தனையோடு திகழ வேண்டும், ஆசையற்று இருத்தல் வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திச் சொல்பவை இதற்காகத்தான்.

அதைப் போலவே பிறர் பால் செய்யும் தீமை, பின்விளைவைச் செய்யாது விட்டு விடுமா? பிறர்பால் முற் பகல் செயின், பிற் பகல் தமக்குத் தாமே வரும். எளியவனைக் கொள்ளை அடித்தால், வலியவனால் வஞ்சிக்கப் படுவாய். ஏமாற்றியவன் நிச்சயம் பெரும் ஏமாற்றத்தைச் சந்திப்பான். இதுதான் இயற்கை வாழ்வுச் சுழற்சி முறை.

அள்ளிக் கொடுக்கின்ற வள்ளல்கள் குறைப் படுவதுமில்லை அவர்களின் வளம் குன்றிப் போவதுமில்லை. அவர்கள் பால் வளம் நிறைவதற்குக் காரணம் கொடுக்கக் கொடுக்கக் குறையாது; மாறாகக் கூடும் என்பதே சூட்சுமம். தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றைப் போல எங்கே வழங்கும் மனது இருக்கிறதோ ஆங்கே வளமும் வந்து நிறைகின்றது.

மனதால், எண்ணத்தால், காயத்தால் நன் நெறி நிற்பவர்களுக்கு, நன்மையே நடக்கும். தீமை நெஞ்சினர் தீதையே பெறுவர்.

ஆதலால் தன் பொருள் குன்றாமை வேண்டுவோர் மறக்காமல் கடைப் பிடிக்க வேண்டியது பிறர் பொருளை வேட்காமையே.

குறிப்புரை :
தமது பொருள் வளம் குன்றாமை வேண்டின் செய்ய வேண்டியது பிறர் பொருள் விரும்பாமையே.

அருஞ்சொற் பொருள் :
அஃகு - சுருங்கு, குறை, வற்று
அஃகாமை - சுருங்காமை, குறையாமை, வற்றாமை

ஒப்புரை :

திருமந்திரம்: 1702
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

திருமந்திரம்: 1834
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே.

திருமந்திரம்: 2640
விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
32. பிரார்த்தனைப் பத்து :

அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487

வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488

மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 489

ஔவையார். ஆத்திச் சூடி:
41. கொள்ளை விரும்பேல்.
48. சூது விரும்பேல்.
55. தானமது விரும்பு.
57. தீவினை யகற்று.
72. நேர்பட வொழுகு.
87. மனந்தடு மாறேல்.
102. உத்தம னாயிரு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
63. புலையும் கொலையும் களவும் தவிர்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 178

Covetous not for shrink not...




In Tamil

'aHkAmai selvattiRku yAthu?' enin, veHkAmai
vENdum piRan kaip poruL.

Meaning :
What protects one’s own wealth shrink means, he must not covetous on others goods.

Explanation :

How to protect one’s own wealth un-shrunk means that not covetously covering others goods.

Evil thought or evil doings only destroys one's own prosperity is the meaning.

Whatever we wish to do to others will happen to us. Reason is that whatever we keep thinking gets automatically registered in our subconscious mind. Without rationalizing the thoughts either for self or for others the subconscious mind just gets impressed only by the wishes. Later without any hindrance it executes but of course for the self.

This is what proverbially they say as 'keduVan kEdu ninaippAn; thanakkE varum perum kEdu', which means that who thinks the bad will get ruined; and that too with a bigger ruin for the self.

This is the same reason for all emphasizing to keep thinking the good and to omit the desires.

Similarly, will that evil deeds made to others keep quiet without making any consequences to the self? Again the proverb in Tamil "muRpahal seying piRpahal thAmE vaRum", which means whatever made in the forenoon, will have its consequences to the self in the afternoon. Therefore whatever done to others will be returned to the self in multitudes in very short time. If you cheat the lesser privileged, you will get cheated by the stronger sooner. Deceived will surely suffer through the bigger deceit. These are the natural law of cycles.

Those philanthropists who donate in abundance never complain nor go shrunk. The reason and secret behind their success of wealth is by donating the prosperities does not diminish but only grows. It is like the well which keeps secreting the water as long as it is drawn, where there is a giving heart it gets replenished with more wealth.

Those who stand through good virtues by heart, mind and the soul get only good things where as those with bad mind get only ill.

Therefore those who wish un-shrunk wealth should follow without fail is no covetousness on others properties.


Message :
All that who desire undiminished wealth should do is only not to covet on others wealth.

***

திருக்குறள்:177 (அபகரித்த வளத்தால் நலம் இராது...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 177

அபகரித்த வளத்தால் நலம் இராது...

In English

வேண்டற்க, வெஃகி ஆம் ஆக்கம் - விளைவயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன்!

பொழிப்புரை :
வேண்டற்க, பிறன் பொருளை வேட்கையால் பெறும் ஆக்கத்தை; அவ் விளைவையின் பயன் மாட்சிமைக்கு அரிதானது ஆகையினால்.

விரிவுரை :
பிறன் பொருளைக் கவர்ந்து பெறும் வளத்தால் வரும் பயனில் மகிமை என்பது இருக்காது என்பதால் அதை வேண்டாது இருக்கவும்.

பிறன் பொருளை அபகரிப்பதாலேயே மாட்சிமை என்பது கிடையாது. இதில் அதன் விளைவால் கிட்டும் பயனில் எப்படி மகிமை கிட்டும்?

திருடிச் சேர்த்தவையால் நன்மையோ, பெருமையோ, அமைதியோ ஏதும் வருவதில்லை. அஃது பிறருக்குத் துன்பம் விளைவிப்பதோடு, சேர்ந்தாரையும் இகழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். எனவே அதன் விளைவால் மதிப்போ, மேன்மையோ, புகழோ ஏதும் வாராது. மாறாக இகழ்ச்சியும், அவமதிப்பும், மரியாதைக் குறைவும் தான் உண்டாகும்.

வருகின்ற வழி நல் வழி அன்றேல் வந்தவை தங்குவதும் இல்லை. தங்கினாலும் அவை நன்மை விளைவிப்பதும் இல்லை. நன்மை தருவது போல் தோன்றினாலும் அவை நீண்ட நாள் தாங்குவதில்லை. வெளிப்படையான இன்பத்தையோ, அமைதியையோ, கௌரவத்தையோ, நிம்மதியையோ அவை ஒரு போதும் வழங்குவதுமில்லை.

பிறன் பொருளை வேட்கை கொண்டு அபகரித்தல் என்பது வெற்றியுமல்ல. அஃது வீரச் செயலும் அல்ல. ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் சமூகம் பாராட்டும் செயலும் அல்ல. அத்தகைய பொருள் ஈட்டம் வாழ்வை வளப்படுத்துவதும் இல்லை. நல்ல காரியத்திற்குப் பயன் படுவதுமில்லை.

ஆதலினால் பிறன் பொருளை விரும்பி வளம் பெற நினைத்தல் பேதைமை. அத்தகைய தீய வழியினை வேண்டாமையே நன்று.

குறிப்புரை :
பிறன் பொருளை அபகரித்துப் பெறும் மகிமை அற்ற வளத்தை வேண்டாமையே நன்று.

அருஞ்சொற் பொருள் :
மாண்டல் - மாட்சிமைப் பட்டது, மகிமைப் பட்டது

ஒப்புரை :

திருமந்திரம்: 1462
விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே.

திருமந்திரம்: 1535
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியு முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

திருமந்திரம்: 2258
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்துலம் அந்தன வாமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376

புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377

ஔவையார். கொன்றை வேந்தன்:
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை (பழிச்சொல்)
31. சூதும் வாதும் வேதனை செய்யும்

ஔவையார். நல்வழி:
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 177

Covetous deeds yield no goodness...




In Tamil

vENdaRka, veHki Am Akkam - viLaivayin
mANdaRku arithu Am payan!

Meaning :
Desire not the gain of covetousness since there is no glory through its usage.

Explanation :

Desire not the earnings of the covetousness since its utilization does not have any glory.

Covetous act by itself does not carry any glory. Then how the usage of its yields carries it either?

Amassing through robbery will not give any goodness, glory or peace. That only creates sufferings to others and in fact it inflicts ill fame to the stealer. Therefore by its yields no honor or eminence or fame comes. Instead it brings only disrespect, dishonor and discourtesy from the society.

When the income comes through improper way it does not stay as well. Even if stays it does not create any goodness. Even if they appear doing goodness it does not last long. It can never give the happiness, peace, respect and peace openly.

Also covetousness is not the conquest and not a victorious act. Also cheating and deceiving acts are not appreciated by the society ever. And such earnings do not bring prosperity to life either. And that is not useful to any good work as well.

Therefore trying to prosper through covetousness is foolishness. Not desiring such ill deeds is only good.


Message :
Desiring not the glory through the wealth of coveting others is only good.

***