Friday, August 21, 2009

திருக்குறள்: 76

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 76
Chapter : 8

Love

Thirukkural

: 76


"அறத்திற்கே அன்பு சார்பு" என்ப, அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

பொழிப்புரை :
அறத்திற்கு மட்டுமே அன்பு சார்புத் துணையானது என்பார் அறியாதார்; [உண்மையில்] மறத்திற்கும் அதுவே துணை.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
அன்பானது அறவழிகளுக்கு மாத்திரமே துணை நிற்கும் என்று கொள்வார் அறியாதவர். அதுவேதான் அறமற்ற மறச் செயல்களுக்கும் துணை நிற்பதாகும்.

மற வழியில் நடப்பதற்கும் கூட அன்பே காரணாமாக நிற்கிறதாம். எப்படி? ஒருவரின் மறச் செயல்களுக்குக் காரணம் வெறுப்பும், நம்பிக்கை இன்மையும், கெட்ட எண்ணங்களுமே, பிறர்பால் அன்பின்மையுமே. அவற்றுக்கு அடிமுதல் காரணம் அவரது மனம் புண்படும்படி அல்லது அமைதியுறா வண்ணம் அல்லது துன்பம் தரும் ஏதோ ஒரு நிகழ்வு, அடிப்படையில் அன்பை மறுதலித்து நிகழ்ந்திருக்கும். எனவேதான் அவரது தீய செயல்களுக்கும், அவர் பால் வழங்கப்படாத அன்பே தூண்டுகோலாய்த் துணை நிற்கின்றது.

ஆக கெட்டவர்கள் என்பவர் எவரும் கிடையாது. அன்பற்றவர்களே, அன்பு காட்டப் படாதவர்களே அவர்கள் என்பது உட் கருத்து. அதாவது அன்பு செய்தால் கெட்டவர்களைக் கூட நல்லவர்களாக மாற்றிவிட முடியும் என்பது தெளிவு. அன்பினால் தீராத நோயையும் குணப் படுத்தலாம்; தீவிர வாதியையும் குணப் படுத்தலாம்.

அன்பு என்பது அனைத்தையும் சீர் செய்யும் அற்புத மருந்து; ஆதரவைத் தரும் ஒப்பற்ற விருந்து.

அன்பை அறிவோம்!





(1) வலியவரும் எளியவர்முன்
மண்டியிடும் மந்திரமும்
வீழ்த்தவரும் வேங்கையரும்
தாழ்ந்துவிடும் தந்திரமும்
அறிவுடை மேதையரும்
அண்டிவரும் விந்தையதும்
(4) கல்லும் கரைந்துவிடும்
காளையும் மடிதுயிலும்
நல்லவழிச் சாலைதேடி
அல்லவையும் ஓடிவரும்
முள்ளும் மலராகும்
முடிநாரும் மணமாகும்!




(2) இன்பமுற இன்னுயிர்கள்
ஈண்டுதமை நாடுவதும்
அன்புநெறி மாந்தர்பெரு
வாழ்வுநிலை கூடுவதும்
அன்புதரு இன்பநிலை!
இயற்கையது ஐயமிலை!
(5) மண்ணில் பிறக்கையில்
யாவரும் கேடில்லை;
அன்பைப் பெருக்கிவிடின்
யாவதும் கேடில்லை;
அன்பே இறையாகும்
அறிவோம் நலமாகும்!




(3) யாவரையும் அன்புநிறை
ஆதரவில் பேணிவரின்
கோபமும் அற்றுவிடும்
குறைகளும் இற்றுவிடும்
பைத்தியம் தெளிவாகும்
பார்வைகள் விரிவாகும்
(6) இன்பமும் துன்பமும்
அன்பின் விளைச்சலே;
உள்ளம் சுரக்கும்
உணர்வுக் கரைசலே;
அன்பேநம் அறிவும்;
அனைத்தும் அஃதே!

***


குறிப்புரை :
அன்பே நல்லவை, கெட்டவை அனைத்திற்கும் காரணம்.

அருஞ்சொற் பொருள் :
மறம் - அறமற்றது, கெட்டவை, வலியவை, வீரம்

ஒப்புரை :

திருமந்திரம்: 279
அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.


திருமந்திரம்: 280
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

***


In English: (Thirukkural: 76)

"aRaththiRkE anpu sArpu" enpa, aRiyAr;
maRaththiRkum aHthE thuNai.

Meaning :
Love only guides the virtue say the unwise; In fact it is for the wicked as well.

These explanations contain newer and exclusive messages.

Explanation :

The unwise say that Love guides only the virtue, but it also guides the vice indeed.

Love is the guide for the wicked too. How? The reasons for one’s evil doings are hatredness, unfaithfulness, no beliefs, ill treatments and no Love to others. Basic reason for all this could be that some ill treatment or heart paining incident or abuse or insult which lead to be not peaceful or any such occurrence or circumstance in which the Love is denied. Therefore the Love not shown becomes the cause for all the ill doings.

Therefore there is nobody born as vice. Those are either the Loveless in heart or whom others denied of Love. Hence if the Love is bestowed and provided, even the wicked can be rectified and made good. Love can cure even any incurable disease; Love can cure even the terrorists.

Love is a wonderful medicine that cures all. Love is a great incomparable treat that gives the support.


Let's Know the Love


The Strong bends to the Simple
The leaping Tiger bows in humble
The brainy too wants to mingle

The Livings approach for their joy
The Loving climb high and they enjoy
All for the Love, the natures rejoice!

Shower the Love to everyone
Sure will there be anger in none
Madness go and views will grow

Stones melt and Bulls quiet
Vice would seek the virtuous path
Thorns bloom and the fibers smell!

None ever born earth as evil
Grow more Love; that never kill
God is true Love; know that well

Happy and sorrow; The Love’s yield
Heartening pour; that’s the feel
Love is the wise and the winning deal.

***


Message :
Love is the cause for everything either good or bad.

***

11 comments:

Uthamaputhra Purushotham said...

On Aug 22, Nakesh wrote:
அன்பு :தீவிர வாதியையும் குணப் படுத்தலாம்
Do you contempt capital punishment ? Terrorist are like mad dogs, tell me how it is
possible to change them ?
Verse 553 Unless the king day-to-day seeks out and punishes unlawful acts, His country will day-by-day fall to ruin
SO never say show love to terrorist

Uthamaputhra Purushotham said...

Replied on 22 Aug:
நண்பர் நாகேஷ் அவர்களே,

தீவிரவாதி என்பதும் ஒரு வியாதியே. அதைக் குணப்படுத்தச் சிறந்த மருந்து அன்பு ஒன்றே.

ஒருவன் கண்ணை எடுத்தான் என்பதற்காக கண்களைப் பழிவாங்க ஆரம்பித்தால் உலகமே குருடாகி விடும் என்று சொல்கிறார்களே இதற்காகத்தான்.

தீவிரவாதிகள் நச்சாக ஊறி இருப்பினும் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? அவர்களை மாற்றவே முடியாது என்று சொல்ல நாம் படைத்தவர்கள் அல்லவே?

மாற்ற முடியும் என்பதும் தீவிர நம்பிக்கையே. ஒன்றே ஒன்று அன்பினால் எதுவும் சாத்தியமே.

சட்டங்களும் மானுடர்கள் இயற்றிக் கொண்டவையே. அவை காலங்களுக்கு ஏற்ப மாறவும் கூடும்.

திருடர்கள், கொள்ளையர்கள் மனம் மாறி இலக்கியம் படைத்திருக்கிறார்கள். கொலைகாரர்கள் மனம் மாறி சாமியார் ஆகி மானுட மேம்பாட்டிற்கு உழைக்கிறார்கள்.

செய்த குற்றத்திற்குத் தண்டனை பெறுவது என்பதும், சட்டம் தன் கடமை செய்வது என்பதும் நமது விவாதமல்ல. அன்பு எதையும் குணப்படுத்த வல்லமை கொண்டது என்பதே.

Uthamaputhra Purushotham said...

Nakesh again on 22 Aug:

tell me whether you contempt capital punishment or not ?


The same argument is used by some to oppose capital punishment. I feel it is foolish to


stop capital punishment.I am not sure what Thirukural say about this

Uthamaputhra Purushotham said...

Reply to above on 22 Aug:

I won't contempt it per se because I respect the laws of the country wherever I live.

But in general if you ask my opinion on Capital Punishment, I think it should be stopped. Simple reason is any punishment given by the co human is only to rectify the mistake and make the punished to make live normal.

Capital Punishment as stated by others, is nothing but the legalized murder. Therefore I won't support it.

Another logic is, men should not eliminate a thing if we cannot restore it back.

Legalities, laws, judgment all by human beings are prone to change person-to-person, time-to-time. There is nothing proven that as the exact ways of life. We have lost so many forefathers to understand a poison as poison. It does not mean that we should not attempt to find a new medicine. In the process when we go beyond the norms sometimes it will look as if we have crossed ethics or by laws. So if you take it in good sense, even law may justify a murder, which is committed by a person, for instance the mercy killings.

Don't take that I support the killings in one hand by human beings and talking against capital punishment in another. Point, which I drive, is, legally no one should be made to death, even if he is a terrorist. You can punish him his rest of life to be in prison. That is ok but not eliminating him.

Who are we to decide about the future of the accused after death? Will terminations solve the problems? Except the mercy killings, never it will.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.

Uthamaputhra Purushotham said...

Nakesh on 23 Aug:

Will terminations solve the problems?
A large number of studies indicate that the more certain the punishment, the fewer the crimes committed. The death penalty execution rate accounts for about 12 to 14 percent of the overall drop in murders.
http://www.foxnews.com/story/0,2933,313310,00.html
1. So fear factor is vital to reduce the crime
2. Reduce the cost of maintaining hard core criminals

Dogs are friends of Man; but an exceptional dog sometimes goes mad and runs amok through the streets, biting and infecting everybody it comes across. Fond as we may be of dogs we must kill it on the spot, by gun or bludgeon.
Nobody thinks of these liquidations as punishments, nor expiations, nor sacrifices, nor anything but what they really are: sheer necessities.
Precisely the same necessity arises in the daily-occurring cases of incorrigibly mischievous human beings. They are vermin in the commonwealth, ferocious wild beasts on our highways, robbers and crooks of all sorts.
CAPITAL Punishment - by George Bernard Shaw
http://www.theatlantic.com/unbound/flashbks/death/dpenshaw.htm

Uthamaputhra Purushotham said...

Replied on 25 Aug:

//1. So fear factor is vital to reduce the crime
2. Reduce the cost of maintaining hard core criminals //

Thanks for your response and links to know the issues more.

Here is my summary:

1. Regarding the fear:

Kannadhasan:
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

Bharthydhasan:
கொடுவாளினை எடடா இது
அறவோர் செயல் அலவே

Subramanya Bharathy:
பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்திடடி பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்திடடி பாப்பா

Pattukkottai Kalyanasundharam:
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்று ஆடுதுண்ணு - நீ
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தை முளையிலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணரின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து
வெம்பி விடாதே!

For the first two years in US I did not believe in the concept that you can raise the kids without beating or shouting at them. Because I have been brought up my parents and teachers in such a manner that I had to believe that
அடிக்காத பிள்ளை படிக்காது.

அடிச்சு வளர்க்காத பிள்ளை உருப்படாது...

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்

இப்படிப் பல, and they had shown on me in my childhood all this.

ஆத்தீன்னு பயமில்லாம வளர்ந்தீன்னா, என்ன ஆவே?
ஆத்தீன்னு கொஞ்சமும் பயம் மனசில இல்லைன்னா, நீ எப்படிறா உருப்படுவே?

அதாவது சமூகத்திற்கு அஞ்சி வாழ வேண்டும் என்பதற்கு இவற்றையும் சொல்லித்தான் என் தந்தை என்னை அடித்து வளர்த்தார்.

இன்று அமெரிக்காவில் குழந்தைகளைத் திட்டக் கூட முடியாத வகையிலும், அடிக்கக் கூடாது என்பதைச் சட்டமாகவே ஆக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். குழந்தைகள் அப்படி ஒன்றும் கெட்டுப்போனதாகவோ, அவர்கள் பயமின்றி வளருவதால் சமுதாயத்தில் முன்னேற முடியாதவர்களாகவோ இருக்கிறார்களா? என்றால் நிச்சயம் இல்லை. எனவே ‘பயம்’ என்கின்ற உணர்வு அது நல்லதற்குச் சொல்லப்பட்டாலும் கூடத் தேவையற்றது.

பயமற்று வாழுதலே ஒருவருக்குச் சமூகம் தரவேண்டிய அவசியம். ஒன்றைப்பற்றிய அறிவை மட்டும் பெற்றால் போதும், பயம் தேவை அற்றது. அதாவது தீ சுடும், பாம்பு கடிக்கும் எனும் அறிவு போதும். அவற்றைப் பிரயோகப் படுத்தித்தான் ஒருவர் உணரவேண்டும் என்பது கிடையாது.

சட்டங்களை நாம் அறிந்திருத்தல் அவசியம். சட்டத்திற்கு உட்பட்டு வாழுவது மிக அவசியம். ஆயின் சட்டத்திற்குப் பயப்படுதல் என்பது தேவையற்றது. சட்டத்தை மதிக்காவிடின், ஒழுகாவிடின் தண்டிக்கப்படுவீர்கள் என்கின்ற அறிவு மட்டும் போதுமானது. பயம் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதும் வள்ளுவர் சொல்லி இருக்கிறார். அவை முட்டாள்தனமாக சிங்கத்தின் முன் போய் நிற்பதோ, பாம்பின் முன் போய் நிற்பதோ அறிவற்ற செயல் என்று கொள்ளச் சொல்லப் பட்டது. புயலை எதிர்க்க முடியாது, அதற்கு ஒதுங்கி, திசை திருப்பி, காலம் கூடும்போது மரக்கலத்தை சரியான வழியில் செலுத்த வேண்டுமென்பது அஞ்சிச் செய்ய வேண்டிய அறிவுடைய செயல் என்பது பொருள்.

(தொடரும்)

Uthamaputhra Purushotham said...

தொடர்ச்சி...

2, Capital Punishment - by George Bernad Shaw:

Till we got the independence in the year 1947 by Mahathama Gandhi, the world had never seen any thing like 'non-violence' method before. So we were able to show the rest of the world that without shedding any blood or raging any war, in a non-violence method too one can achieve their independence for their country.

Who is terrorist? And what is terrorism? The definitions seem to change to the context of the interested parties, person-to-person, country-to-country. For instance, Veerapandiya Kattabomman and Subhash Chandra Bose were terrorists for British. British, the fellows who came for business to India, were turned out to be the terrorists and robbers of India for the Indians. Velupillai Pirabhakaran is a terrorist for India, Rajiv Gandhi, a terrorist for Ealam Tamils. Saddham Hussein was a terrorist for USA, and George Bush was for Iraq.

But for the humanity all these are terrorists regardless of their origin, because they were the cause for someone's death directly or indirectly. There is no rule to say that if by the Government or elected or appointed person's verdict to execute someone is correct but if it is by an organization it is wrong. Killing a person if it is a crime, then it is crime as well by the judges or the democratically or otherwise any government or anybody. Period.

Well mad dogs think that the humans are danger to them. So killing it saves the human and others but not the dogs. We hear about the atrocities by the wild elephants in TN. But no body will dare to kill them but will request the guards to push or guide them into the forest. Same way, one must be considerate in dealing with lives.

Societal and Legal makers first intention should be to protect and prevent from such incidents occurring. That means find the cause for the Terrorism and remove it rather than punishing or cribbing about the terrorists or shooting any one who is not in accordance to your laws or ethics. Except the insane all must have been done for some reason, therefore understand what the real causes and try to solve them and address them. Still if the culprit is a ruthless, mass killer then banish and exile him in the reign. Before terming one as incorrigible, be conscious about the number of times you tried. Is the cost of maintenance of the culprit is problem? Well, find out a method how to utilize him as inmate. Make him to roll some device to produce electricity or something like that to make him productive. Give food only when he does the job. மனம் இருந்தால் மார்க்கம் கிட்டும்.

(தொடரும்)

Uthamaputhra Purushotham said...

தொடர்ச்சி...

கைதியின் உயிரை எடுப்பது மிகவும் சுலபம். குற்றமற்றவன் என்று ஒரு வேளை நிரூபித்துவிட்டால் உயிரைத் திருப்பிக் கொடுக்க இயலுமா? இந்தப் பிரச்சினையை இன்று, நேற்றல்ல 2000ம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டவன் தமிழன். அதை இலக்கியமாக்கி ‘சிலப்பதிகாரம்’ என்று வைத்தான்; புளுகுப் புராணங்களை அல்ல.

சித்திரவதை செய்யும் கணவனைக் கொன்றவளை நியாயப்படுத்தி ‘குண்டலகேசி’ என்று இலக்கியம் படைத்தான். அன்பையே பரிமாறும் ‘மணிமேகலை’ யைப் படைத்தான். இவையெல்லாம் சமூகப் பிரச்சினைகளைச் சந்தித்து, சிந்தித்து அவற்றிற்கு வழிமுறை காண விளைந்ததின் வரலாறே. பசியின் பிடியில் பிள்ளைகளைக் கொன்ற தாய் நளாயினி. அவளை இன்றைய உலகம் என்ன செய்யும்? காரணங்களைக் களையாமல், கருவிகளைக் களைவதால் என்ன பயன்?

மனிதர்கள் சுய நலவாதிகள். அதிலும் ஆங்கிலக் கலாச்சாரத்திய மக்கள், மிகவும் சுய நல வாதிகள். மனித மேம்பாடு, neighbouthood, culture, civilized society என்று வக்கணை பேசி, இயற்கை மனிதநேயத்தைத் தொலைக்க மட்டுமே கண்டவர்கள். மாறாக நமது கலாச்சாரத்தில், புறாவிற்குச் சதை கொடுத்தவனும், பசுவின் கன்றைக் கொன்ற பசுவிற்கு நீதி வழங்கும் அரசனும், கொடிக்குப் படர தேரைக் கொடுக்கும் மனம் கொண்டவர்களையெல்லாம் நாம் பதிவு செய்து வைத்துள்ளோம்.

பிச்சைக் காரர்கள் அதிகம் இந்தியாவில் தானே என்ற கேள்விக்கு, குமுதம் அரசுவில் அட்டகாசமான பதில் பார்த்தேன். ”ஆம், பிச்சை போடுபவர்களும் இங்குதான் அதிகம்”.

மனித நேயம் என்பது வாழ்வை இன்னும் ஆழமாகப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு எளிதில் புரியும். நிலையற்ற வாழ்வையும், நோய் நொடியின்றிக் கிட்டிய தேகத்தையும் பாராட்டும் மனம் அதைச் சிந்திக்க சிந்திக்க மற்றதன் வலியும், உயிரின் மதிப்பும் புரியும். அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதிலும் கூன், குருடு, செவிடி நீங்கிப் பிறத்தல் அரிது என்று போற்றும் போதாவது நாம் அதன் மதிப்பை உணர வேண்டும் என்பதே ஔவையின் நோக்கம்.

குஷ்ட ரோகப் பசங்களையெல்லாம் சுட்டுத் தள்ள வேண்டாமா? ஒத்து வாராத ஜென்மங்களைப் போட்டுத் தள்ள வேண்டாமா? Gas Chamberல் போட்டு மொத்தமாக எரிக்க வேண்டாமா? எனும் நாசி தத்துவம், ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்த ஜெனரல் டயர் உத்தமர் என்று கொள்ளும் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம், தங்கள் சுய நலத்திற்காக இன்னொரு நாட்டில் கன ரக ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்று பேசி, மூக்கை நுழைத்து, அவர்களின் மற்றையப் பிரச்சினைக்கு நீதி சொல்லி ஆட்சியாளரைத் தூக்கிலிடும் நியாயமும், நேற்றுவரை உதவிய இன்று ரேசில் தோற்ற குதிரையை சுட்டுத்தள்ளும் கலாச்சாரமும், மனித நேய செயல்பாடுகளில் சேர்வதில்லை. வந்தவரை வாழ வைக்கத் தெரிந்த நம் கலாச்சாரத்திற்கு, இவ் வாழ்வைக் கடைத்தேறி கிட்ட வேண்டிய மோட்சமே முக்கியம் என்று சொல்லி எழுதப் படாத சட்டமாக மனித நேயம் வைக்கப் பட்டிருக்கிறது.

எனவே உயிர்களை எடுப்பது மனித நேயமும் அல்ல, மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் செய்யும் காரியமும் அல்ல.

***

Uthamaputhra Purushotham said...

Nakesh on 27 Aug 2009:

@UthamaPuthra
Really you have a superb explanation, but today no one has the time nor patience to analysis the root cause

Uthamaputhra Purushotham said...

Nakesh on 27 Aug 2009: continued...

Everyone is so busy & self centered

Uthamaputhra Purushotham said...

Replied on 28 Aug 2009:

Thank you guys for your comments. Keep reading the blogs.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...