Monday, August 31, 2009

திருக்குறள்: 85

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 85
Chapter : 9

Hospitality

Thirukkural

: 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ-விருந்து ஓம்பி,
மிச்சில் மிசைவான் புலம்?

பொழிப்புரை :
வித்தும் விதைக்க வேண்டுமோ சொல்வீர், விருந்தினரைப் பேணி, அவர் உண்டபின் மிஞ்சிய உணவை உண்பவனின் நிலத்தில்?

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
விருந்தினரைப் பேணி அவருக்கு உண்ணத் தந்து எஞ்சிய உணவினைத் தான் உண்பவனின் நிலத்தின் கண் வித்தும் விதைக்க வேண்டுமோ சொல்லுங்கள்? வேண்டாம். தானாகவே விளையும் என்பது குறிப்பெச்சம், அதாவது சொல்லாது குறிக்கும் பொருள்.

அதாவது அத்தகைய பண்பாளின் நிலத்தில் அவனின் குணத்திற்காக விதைக்காமலேயே தானாகவே விளைச்சல் பெருகிவிடுமாம்.

விதை விதைக்காமல் விளைச்சலா எப்படி? அவன் குணத்திற்கு அரிய புதையல்கள், திரவியங்கள் அவன் நிலத்தின்கண் கிட்டக் கூடும் என்பது உட்பொருள். அன்றையக் காலங்களில் நிலங்களில் கிடைத்தப் புதையல்கள் நிலத்தவருக்குமே சொந்தமென்பதை அறிக. அதாவது, அவன் செய்த நற்காரியத்திற்குப் பலனாய் இந்த வாழ்விலேயே பயன் பெறுமாறு நல்லவை நிகழும் என்பது நுண் பொருள்.

எனவே இதிலிருந்து, வந்த விருந்தினருக்குத் தான் உணவை முதலில் வழங்க வேண்டும். பிறகு இருப்பதை உண்பது என்பது மிகச்சிறந்த விருந்தோம்பல் குணம் என்கின்றார் வள்ளுவர். அதாவது வந்திருக்கும் விருந்தினரை இருக்கும் உணவைக் கொண்டு முதலில் பசியாறச் செய்வதும் பின்னர் மீதம் இருந்தால் உண்பது என்பதும் மிகச் சிறந்த பண்பு.

குறிப்புரை :
விருந்தினருக்கு உணவளித்துப் பின் மிஞ்சியதை உண்பதே சிறந்த விருந்தோம்பல்.

அருஞ்சொற் பொருள் :
வித்து - விதை
கொல்லோ - சொல்லும்...
மிச்சில் - மீதமாகிய, எஞ்சிய, மிஞ்சிய
மிசைதல் - உண்ணுதல்
புலம் - விவசாய நிலம், மண்.

ஒப்புரை :

ஔவையார். கொன்றைவேந்தன்:
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். 59
போனகம் என்பது தானுழந்து உண்ணல். 69

ஔவையார். மூதுரை: 11
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல்.

ஔவையார். மூதுரை: 2
நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துபோற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர்.

***

In English: (Thirukkural: 85)

viththum idalvENdum kollO-virunthu Ombi,
michchil misaivAn pulam?

Meaning :
Does the sowing required in the field of those who treat the guests first and eats the rest?

These explanations contain newer and exclusive messages.

Explanation :

For the fields of that who tends the Guests and provides food for them first and then eat only the left over, does the sowing required, please tell? No. Automatically things will grow there, is the hidden message here.

It is to say that in such a kind of person's field, for his qualities, without sowing itself, yields would flourish.

How the yield is possible without sowing the seed? As reward for his character and qualities, rare underground treasures and wealth will popup or strike as if the yield in his field. That is the yield without sowing for himself. That is the message here. Those days whatever treasures struck at the field belong to the owner himself. It is a kind of reward or award for his good work and given to him to enjoy within his current life. By this all good things will occur to him is also the hidden message here.

Treat the Guests visited first then eat only the rest, is therefore the great trait in the hospitality says Valluvar. That is it is good culture to feed the Guests first to quench their hungry and then to satisfy oneself if any thing left over.


Message :
Good hospitality is to treat the Guests first and then eat the rest.

***

1 comments:

Uthamaputhra Purushotham said...

Nakesh on Sep 1, 2009:

விதை விதைக்காமல் விளைச்சலா எப்படி? அவன் குணத்திற்கு அரிய புதையல்கள், திரவியங்கள் அவன் நிலத்தின்கண் கிட்டக் கூடும் என்பது உட்பொருள். அன்றையக் காலங்களில் நிலங்களில் கிடைத்தப் புதையல்கள் நிலத்தவருக்குமே சொந்தமென்பதை அறிக.
அதாவது, அவன் செய்த நற்காரியத்திற்குப் பலனாய் இந்த வாழ்விலேயே பயன் பெறுமாறு நல்லவை நிகழும் என்பது நுண் பொரு


So you are expecting something in return for the service ?

Vallvular is informing >>>>Some X will pay the expense incurred for serving A isn't it ?


Good nature without prudence, is foolishness

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...