Friday, December 4, 2009

திருக்குறள்:157 (பொதுநலன் கருதிச் சகிப்பது மேன்மை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 157

பொதுநலன் கருதிச் சகிப்பது மேன்மை...

In English

திறன் அல்ல தன் - பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று. .

பொழிப்புரை :
நேர்மை அல்லாததைத் தனக்குப் பிறர் செய்யினும், மனம் வருத்தத்தால் தூண்டப்பட்டு அறன் அல்லாததைச் செய்யாமல் இருத்தல் நன்று.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
நல்லொழுக்கம் அல்லாதவற்றைத் தனக்குப் பிறர் செய்யினும், மனம் வருந்தி நொந்து அறன் அல்லாதவற்றைச் செய்யாமல் இருத்தல் நன்று.

பிறர் செய்த துன்பத்திற்காக, மனம் வெதும்பி அவர் பால் அல்லது வேறு எவரின் பாலும், அல்லது வேறு எவற்றின் பாலும் அறன் அல்லாதவற்றைச் செய்யாமை நன்று.

சகிப்புத்தன்மை என்பது தமக்கு நேர்ந்த கொடுமையை மறப்பதும், பொறுத்து விட்டுக் கொடுப்பதுமே. அதை விடுத்து மனதிற்குள் அத்துன்பத்தை எடுத்துச் சென்றால் வருத்தமே மிகும். எனவே அதால் தூண்டப்பட்டுப் பிறகு துன்பம் இளைத்தவருக்கோ அன்றில் வேறு யாரிடமோ அன்றில் வேறு எதிலுமோ கோபத்ததை, ஆத்திரத்தைக் காட்டுதல் என்பது பழி வாங்கும் செயலைக் காட்டிலும் கெடுதலானது. யாரோ தமக்கு இழைத்த தீங்கிற்கு, அவரையோ அவரது உறவினரைத் துன்புறுத்துவதும், ஊருக்குக் கெடுதல் செய்வதும், உலை வைப்பதும், கிளர்ச்சியை உண்டு செய்வதும், மனிதர்களுக்குள் பிழவையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதும், கலவரத்தைத் தூண்டி விடுவதும், பொது உடைமைகளைச் சூரை ஆடுவதும், பொது நீரில் மருந்து கலப்பதும், சின்னஞ் சிறாரைக் கொல்லுவதும், பலவீனமானவர்களிடம் ஆத்திரத்தைக் காட்டித் துன்புறுத்துவதும், மதப் பள்ளிகளை இடிப்பதும்; தீக்கிரையாக்குவதும், கொள்ளை அடிப்பதும், மான பங்கம் செய்வதும், அமைதியைக் குலைப்பதும், பொதுச்சுவரில் அசிங்கங்களை வரைவதும், பொது மக்களை அச்சுறுத்துவதும், சாலைகளைச் சிதைப்பதும், பேருந்துக்களை எரிப்பதும், இவ்விதம் பிற அறமற்ற செயல்களைச் செய்வதும், கோழைகளின், கேவலமானவர்களின், அற்பர்களின் செய்கையாகும். அவற்றால் தீது மட்டுமே மலிவுறும். தனக்கு ஏற்பட்ட வலிக்கு இவை நிவாரணங்கள் ஆகாது.

மாறாக தமக்குப் பிறர் செய்த தீங்கினைப் பொறுத்துப் பெரிது படுத்தாது சகித்துக் கொள்ளுவதால், சமுதாயத்திற்கும், பிறருக்கும், தன் குடும்பத்திற்கும், தனக்கும் நன்மை செய்தவராகின்றார். தீமை செய்தோர் வருந்தித் தம் தவறைத் திருத்திக் கொள்ள வாய்ப்பும் உண்டாகும். பொறுத்துக் கொள்ளும் மேன்மைச் செய்கையால் கெடுதல் ஏதுமின்றி இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாமல் நன்மைகள் தொடரும்.

சகிப்புத் தன்மை என்பது நன்றாக இருப்பவற்றை அவை நன்றாக இருக்கும்படி வைத்துக் கொள்ளுவது மாத்திரம் அன்று. தமக்குக் கெடுதல் இழைப்பவரையும் மன்னித்துப் பொறுத்துக் கொண்டு அதால் மேலும் தீமைகள் தொடரா வண்ணம் காப்பாற்றுவதே. எதையும் வெறுப்பு கொண்டு உமிழாதே இரக்கம் கொண்டு அனுசரணையோடு ஆதரித்துப் போவதே. தமக்கு நடந்த கொடுமையை உலக நலன் கருதிப் பொறுத்துக் கொள்வதே.

பிறர் நலம் கருதித் தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது பொறுமையிலும் பெருமை.

குறிப்புரை :
தனக்கு வரும் துன்பத்தைப் பழி தீர்க்காது, பொது நலன் கருதிப் பொறுத்துக் கொள்ளுவது என்றும் நலம் பயக்கும்.

அருஞ்சொற் பொருள் :
திறன் - திறம், திறமை, ஆற்றல், சக்தி, நல்லொழுக்கம், நேர்மை, சிறப்பு, மேன்மை
நோ - வலி, வருந்து, மனம் புண்படு, குறை கூறு, பிணி
நொந்து - அழி, தூண்டு

ஒப்புரை :

நாலடியார்: 58
தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

திருமந்திரம்: 411.
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே

திருமந்திரம்: 412.
தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே

திருமந்திரம்: 416.
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே

திருமந்திரம்: 418.
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே

திருமந்திரம்: 419.
தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே

மாணிக்கவாசகர். திருவாசகம்:
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்

வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்
பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக்
செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409

மாணிக்கவாசகர். திருவாசகம்:
32. பிரார்த்தனைப் பத்து :

அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487

ஔவையார். ஆத்திசூடி:
74. நொய்ய வுரையேல்.
76. பழிப்பன பகரேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்

ஔவையார். மூதுரை:
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 157

Forbearance for the public cause is great...




In Tamil

thiRan alla than - piRar seyyinum, nO nonthu,
aRan alla seyyAmai nanRu.

Meaning :
Though injustice is made to the self by others and though suffering in the heart due to that, it is good not to do any non virtuous act in retaliation with any the emotional vengeance.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
Though unethical injustice is inflicted on the self by others, it is good not to retaliate by any non virtuous act on them due to sufferings or emerging vengeance in the heart.

Due to afflictions created by someone on the self though it may cause sufferings in one's heart or brain, it is good not to retaliate non-virtuously on them or anyone else.

Forbearance is nothing but to forgive and forget the afflictions made on the self. Instead of that if that distress is taken much in the brain and brood over it, only sorrowfulness grows and remain. Hence with aroused vengeance showing the angry or hate on them or others or any other thing else is worse than the action of revenge. Because of someone's infliction on us, punishing or doing wrong things on them or their relatives or to the place or burning or creating chaos or creating differences, hate and clash among others, looting the public properties, spoiling the public system or poisoning the water, killing innocent civilians, showing the anger and oppressing the weaker sections, demolishing, setting fires or robbing the religion places or institutions, assaulting and raping women, destroying the peace, drawing obscene and filthy things on public walls, threatening the public, destroying the roads, burning the vehicles, and carrying out such as these non virtuous acts are nothing but the acts of mean and shameless cowards. By that only evil and sinful deeds will grow in excess. These cannot be the solution or the healing for one's pain.

Instead of that if one bears with the inflictions by others on the self, it does goodness to the society, others, own family and of course the self too. That also leaves ill doers the opportunity to regret and correct themselves. By the greatness of the forbearance act, the normal life continues with goodness and runs smoothly without any troubles.

Forbearance is not only to keep the good things intact but also to forgive the ill doers and thus to keep stopping furtherance of ill doings. It is to consider others with compassion and kindness and to go in cooperation and proactive without any hate on anything. It is to bear upon the inflictions on self for the sake of public interest and world's safety and well being.

For the welfare and benefit of others, bearing the inflictions on the self is the greatness within forbearance.

Message :
Whatever the sufferings one gets, without revenging for it, showing forbearance for the public cause will certainly yield goodness always.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...