Wednesday, December 2, 2009

திருக்குறள்:155 (பொறுமை தரும் பெருமை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 155

பொறுமை தரும் பெருமை...

In English

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்,
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

பொழிப்புரை :
[பொறுமையற்று] வெறுப்பை உமிழ்பவரை [யாரும் ஒன்றாகச் சேர்ந்து கூடி] வைத்துக் கொள்ளமாட்டார்கள்; ஆனால், பொறுமை கொண்டவரைப் பொன்போலும் [அடர்த்தியாய்க்] கூடி நின்று வைத்துக் கொள்வர்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
பொறுமையற்று வெறுப்பவரை யாரும் சேர்ந்திருக்கவோ, பிறர் சேர்வதையோ விட மாட்டார்கள். ஆனால் அதே சமயத்தில், பொறுமையுடையவரை எல்லோரும் பொன்போலும் அடர்த்தியாய்ச் சேர்ந்து, விரும்பித் திரண்டு, கூடி வாழ்வதையே தங்கள் வழக்கமாய் வைத்துக் கொள்வர்.

பொறுமையற்றுத் தண்டிப்பவரையோ, வெறுப்பவரையோ, அன்பற்றவரையோ யாரும் விரும்பி உடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். முடிந்தால் பிறர் அவரைச் சேர்வதையும் தடுத்து வைத்து விடுவர். சகிப்புத்தன்மையற்றுக் கடுகடுப்பதையும், சிடுசிடுப்பதையும், சீறுவதையும், பொருமுவதையும், தூற்றுவதையும், சபிப்பதையும், சலித்துக் கொள்வதையும் யார்தான் விரும்புவார்கள்? அத்தகை மனிதருடன் அண்மையை, நட்பை யார்தான் வைத்துக் கொள்வார்கள்?

ஆனால் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு திருத்துபவரை, திருந்தும் வரை பொறுமையுடன் இருப்பவரை, அறியாது செய்யும் பிழையைச் சகித்துக் குற்றம் களைபவரை, இடையூறுகளைத் தாங்கி ஏற்றங்களைத் தருபவரைப் போற்றுவதுடன் அவருடன் இணங்கி இருக்கவே மனிதர்கள் விரும்புவார்கள். நல்லாருடன், நற் குணத்தாருடன் இணங்கி வாழ்வதையே வையகத்தார் வைத்திருக்க விரும்புவர். பிறரின் இன்னலுக்குப் பொறுமையுடன் தோழமைத் தோள் கொடுத்துத் தாங்கி நிற்கும் தூயவரை, காய்த்தலிலும், உவத்ததலிலும் புன்னகை காட்டி பொறுமையுடன் இன்முகத்துடன் மாற்றங்களைச் செய்து காட்டும் புண்ணியரை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

மேதமை என்பது விலகி நிற்பதல்ல, தனது மேம்பட்ட அறிவைச் சாதாரண மனிதர்களோடு பொறுமையுடன் பகிர்ந்து அவர்களை நல்வழிப் படுத்தி அவர்களோடு கூடி நின்று இயல்புடன் வாழ்வதே. சகிப்பின்றி ஒதுங்கி ஓடுதல் கோழைத்தனம்; சலிப்பின்றிச் சகிப்புத் தன்மையுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

வள்ளுவர் இங்கே ’பொன்போலும்’ என்றது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று அதை விலை மதிப்பு மிக்க பொருளாக எண்ணி விரும்புவது. இரண்டாவது பொன் என்பது மற்றைய உலோகங்களைக் காட்டிலும் அடர்த்தி மிக்கது எனும் காரணத்திற்காக.

பொறுமை மிக்கவரை வைரம் போலும் பொன்னில் பொதிப்பர் என்றால் அவரை அவ்விதமாகத் தனித்து மதித்துப் போற்றுவர் என்று பொருள் வரும். ஆனால் ‘பொன்போலும் பொதிவர்’ என்பதால், ’தங்கத்தின் தன்மை போலும் அடர்ந்து திரண்டிருப்பர்’ என்பதே சரியான பொருள். அதாவது பொறுமை மிக்கவரை மற்றையோர், ஏனைய சமூகத்தோர் விரும்பிச் சேர்ந்து, சார்ந்து, கூடி நிற்பதுவும், நட்போடும், உறவோடும் திரண்டு அடர்த்தி மிக்கோராய் இருக்கும் இயல்பிற்காகச் சொல்லப்பட்டது. எனவே இதன்பால் வள்ளுவரின், அவர்தம் காலத்திலேயே மக்களின் உலோக இயற்பியலின் அறிவையும், அவர்கள் பெற்றிருந்த தெளிவையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே, பொறுமையற்று வெறுப்பவரை மதித்துச் சேரார் மக்கள், மாறாக பொறுமை மிக்கவரைத் தம்முள் சேர்ந்து, இணைந்து அவரை பொன்போலும் போற்றிச் சிறப்புடன் வைத்துக் கொள்வர் என்பதே இக்குறளின் சரியான பொருளாகும்.

குறிப்புரை :
பொறுமையற்று இகழ்பவரை யாரும் விரும்புவதில்லை; பொறுமையுடன் திகழ்பவருடன் எல்லோரும் விரும்பிச் சேர்ந்து இன்புறுவதோடு மதித்துப் போற்றுவர்.

அருஞ்சொற் பொருள் :
ஒறு - அடக்கு, அலை, தண்டி, கடிந்து கொள், வெறு, குறை
ஒறுத்தல் - அலைத்தல், கடிதல், குறைத்தல், நோய்செய்தல், வருத்துதல், வெறுத்தல், தண்டித்தல்
பொதிதல் - நிறைந்திருத்தல், சேமித்திருத்தல், சேர்த்துவைத்தல், உள்ளடக்குதல்
பொதி - நிறைவு, நிரம்பியிரு, உள்ளமைந்திரு, உள்ளடக்கு, பொட்டலமாகக் கட்டு, சேமி, மறை, கடைப்பிடி, கட்டு, பிணிப்பு, தொகுதி, திரட்டு, கொத்து

ஒப்புரை :

திருமந்திரம்: 251
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.

திருமந்திரம்: 1386.
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.

திருமந்திரம்: 1387.
நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

திருமந்திரம்: 1551
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

திருமந்திரம்: 1555.
மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

ஔவையார். ஆத்திசூடி:
61. தேசத்தோ டொத்துவாழ்.
63. தொன்மை மறவேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
40. தீராக் கோபம் போராய் முடியும்

ஔவையார். நல்வழி:
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 155

Honor of Forbearance…




In Tamil

oRuththArai onRAka vaiyArE; vaippar,
poRuththAraip ponpOl pothinthu.

Meaning :
No one keeps staying together with those who hate with impatience. But everyone esteems high those with patience and likes to keep together with them mass tightly like the Gold.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
Nobody likes to stay with those who show impatience and hate. But at the same time they love to crowd with those with patience as close as the mass of gold forever.

No one likes to be with those who punish them with no patience, or who hate or who is loveless to them. If possible they may also stop others joining them. Who will like the people with impatience, scowl, anger, frown, infuriation, smoldering, slandering, scolding and cursing? Who will go near them or have friendship with them?

But everybody likes to be with those who bear with their mistakes and do not punish them but tell how to correct it and bear with them till it gets corrected. They would be interested to stay with those who endure their mistakes unknowingly cropped in and who resolves it regardless of the problems whatever come on their way. Generally all wish to be in good association and to live with good characterized people only. Who will not like those pure hearts that show forbearance with smile and shoulder them in their own distresses without any apprehensions?

Genius is not to stand away or apart, it is to share patiently the great intelligence with ordinary people to make them better and to be among them to live normally. Impatiently running away is cowardice; without exhaustion but with the patience living in harmony with the coexistent will do zillions of goodness.

Valluvar is using the term 'Like Gold' here for two reasons. One is to point the desire for its high value. The other one is for the reason that Gold is the metal which has more density than other metals.

When it is said that the people with the patience will be embedded like diamond in the Gold, would mean that they will be appreciated so exclusively. But when it is said as 'ponpOlum pothivar’, it means only that they will be dense like the nature of the Gold. That is actually to describe the nature of gathering to people of patience as mass by others such as other society people, wishfully, depending, joining together with friendship, relationship. Therefore through this, it is more evident that Valluvar and the people at his time have had the knowledge of metallurgy.

Therefore, people won't regard or join the impatient and hateful but will join those who have patience and treat and esteem them high as gold among them is the correct meaning for this Kural.

Message :
No one likes those who reproach with impatience; everyone likes the company with those who have patience and also esteem them high.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...