Thursday, December 3, 2009

திருக்குறள்:156 (குற்றம் பொறுத்தால் குன்றாப் புகழ்...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 156

குற்றம் பொறுத்தால் குன்றாப் புகழ்...

In English

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.

பொழிப்புரை :
[தமக்குத் துன்பம் இழைத்தவரைப் பொறுமை அற்றுத்] தண்டிப்போர்க்கு ஒரு நாளை இன்பம்; [மன்னித்துப்] பொறுத்தோருக்கு உலகம் அழியும் வரைக்கும் துணை நிற்கும் புகழ் [கிட்டும்].

விரிவுரை :
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டிப்போருக்கு அந்த ஒரு நாளைக்கு மட்டுமே இன்பம் கிட்டும். அவரை மன்னித்து அத் தீங்கைப் பொறுத்தோருக்கு, உலகம் அழியும் காலம் வரைக்கும் துணை வரும் புகழ் எனும் அழியா இன்பம் கிட்டும்.

தமக்குத் துன்பம் இழைத்தவரை பொறுமையிலாது உடனே தண்டிப்பது பழி வாங்குதல் போல் ஆகும். எனவே அது பழி தீர்த்தோம் எனும் அப்போதைய அன்றில் ஒரு நாளை இன்பத்தை மட்டுமே கொடுக்கும். மேலும் தவறிழைத்தவர் திருந்துவதற்கு மாறாக மீண்டும் பழி கொண்டு தீங்கினைத் தொடரும் வாய்ப்பு இருக்கின்றது. பழிக்குப் பழி என்பது எப்போதும் தொடர் கதை ஆகி விடும். ஒரு தவறை இன்னொரு தவறால் குணமாக்க முடியாது. உண்மையில் தவறுகள் தொடரக்கூடாது என்றால், தவறினைச் செய்தவரைத் திருத்துதல் முக்கியமே தவிர அவருக்குத் தண்டனை தருவதல்ல என்பது நுணுக்கம்.

அதே சமயத்தில் தவறினைப் பொறுத்து தவறு இழைத்தவரை மன்னிப்பது என்பது பெருந்தன்மை. அதனால் நன்மைகள் அதிகம். முதலில் தவறு செய்தவர் எதிர்வினையால் தன்னைத் தாக்காது மன்னித்ததைக் கண்டு தன் தவறுக்கு வருந்துவார். இனி ஒருமுறை இத்தவறைச் செய்தல் ஆகாது எனும் நல் வழிக்கு வருவார். மேலும் மன்னித்தவரின் நற் குணத்தை உளமாற உணர்ந்து மெச்சுவார். அதே போல் பார்ப்பவரும், கேட்பவரும் மன்னித்தவரின் பெருந்தன்மையை நிச்சயம் பாராட்டுவார்கள். ஆக மனித நேயமும், மன்னித்தலும் தான் சாதாரண மனிதரை உயர்ந்தவராக ஆக்குகின்றது. அவ் உயர்ச்சியின் புகழ் காலா காலத்திற்கும் நின்று அவருக்குத் துணை புரியும் என்பதில் ஐயம் இருக்க முடியுமா?

பொறுமையுடன் மன்னிக்கின்ற மனது, துன்பத்தின் வலியை உடனடியாக மறந்து விடும். ஏன் துன்பம் இழைத்தவரைக் கூட மறந்து விடும். அதால் நற் சிந்தனையை மட்டுமே எண்ண முடியும். எனவே எப்போதும் நேர்மறை எண்ணத்தோடு, ஆக்கங்களை மட்டுமே சிந்தித்து அவரால் எளிதாக மேம்பட முடியும் என்பது பொறுமையின், மன்னித்தலின், மன்னிப்பாருக்குக் கிட்டும் நன்மைகளே.

முதலில் பொறுமையுடன் எதையும் அணுகும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், எளிதில் உணர்ச்சி வயப்படாத மனோ நிலையும், சாதக பாதகங்களை அலசி நன்மை, தீமைகளை அறியும் அறிவும், நற் சிந்தனையும், பிறரின் தவறுகளைக் கண்டு மன்னிக்கும் குணமும், தவறுகளைச் சரி செய்யும் ஆக்க எண்ணமும், தீதை மறக்கும் தன்மையும் தானாகவே தோன்றிவிடும். தீதினை மறந்த நேர் மறை எண்ணத்தாலும், ஆக்க பூர்வமான சிந்தனைகளாலும், தொடரும் செயல்களாலும் வெற்றியும், புகழும் அவரை எப்போதும் பற்றிக் கொள்ளும். இதைத்தான் “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றும் சொல்வார்கள்.

குறிப்புரை :
குற்றவாளியைப் பொறுத்து மன்னிக்கும் குணம் அழியாப் புகழைத் தரும்.

அருஞ்சொற் பொருள் :
பொன்றும் - கெடு, அழி, இற

ஒப்புரை :

திருமந்திரம்: 280.
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. 1

திருமந்திரம்: 1556.
ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7

திருமந்திரம்: 1576.
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 4

திருமந்திரம்: 1578.
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணிவாரே. 6

திருமந்திரம்: 1579.
உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே. 7

மாணிக்கவாசகர். திருவாசகம்:
33. குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம்
(திருப்பெருந்துறையில் அருளியது -
அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)


குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே

ஔவையார். ஆத்திசூடி:
65. நன்மை கடைப்பிடி.
72. நேர்பட வொழுகு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்

ஔவையார். மூதுரை:
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 156

Undying Fame for Forgiveness...
In Tamil

oRuththArkku oru nALai inpam; poRuththArkkup
ponRum thuNaiyum pukaz.

Meaning :
Those who punish the ill doer impatiently get pleasure for only a day; those who forgive considerately with patience get praise until the end of the world.

Explanation :
Those who punish the ill doers to them they get the happiness only for that day. But when they forgive them for their ill doing with patience, they get the happiness called praise till the end of this world,

Punishing the ill doer to them instantly without patience is like retaliating. Hence it could give the happiness as if won on the revenge lasting just for that day. Also that makes room for the ill doers to continue their ill doing instead of getting them corrected. Revenge deeds will continue as serial with no end. One mistake cannot be corrected through another mistake. Sincerely if a mistake should not continue, it is important that the wrong doer must be corrected and not necessarily the punishment for the crime is the implied meaning here.

At the same time, bearing the ill doing, forgiving the ill doer is really greatness. Because of that goodness is more. Firstly the ill doer regrets for his act because of the reaction of forgiveness and not a retaliation or attack. He will come to a conclusion that the ill doing should not be made again. Also he will appreciate heart fully the forgiver's goodness. Similarly the onlookers and others who hear also will continue to appreciate and praise the forgiver's magnanimity. Therefore the humanity and forgiveness are the things which make the ordinary men to be great and noble. Can there be any doubt about such praises and fame standing and helping them forever?

The heart which forbears and forgives also forgets the pain of affliction instantly. Even it might forget the ill doer. It can only think on good things. Therefore those who forbear, forgive and forget always can get the benefits and betterments of the natural positive and creative thinking and can succeed in their deeds.

Firstly when forbearance is taken as the habit for approaching anything, emotion free of mind and the mind to analyze the pros and cons and also to know the good and bad things, mind for good thinking, mind to forgive other’s mistake, creative mind to rectify the mistakes, mind to forget the bad things and such all will automatically happen. By the positive mind of forgetting the ill deeds, by the creative thinking and by the continued actions only success and fame will reach them at always. This is what emphasized rightly in the saying "the people of patience will rule the earth".

Message :
The trait of forbearance and forgiving the offender yield undying glory.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...