|
| |
| |
பொழிப்புரை : | |
நடுநிலைமை அற்று [நியாயமில்லாதே தனக்கு உரிமை இல்லாத பிறரின்] நல்ல பொருளை விரும்பினால், அவனது குடியை அழித்து, குற்றத்தையும் ஆங்கே கொடுக்கும். | |
| |
விரிவுரை : | |
தனக்கு உரிமையற்ற பிறரின் நல்ல பொருளை நியாயமில்லாதே தான் விரும்பினால், அஃது தனது குடியைக் கெடுத்து, குற்றத்தையும் ஆங்கே விளைவித்து விடும். நல்ல பொருள் என்பது பிறரின் நியாயமான உரிமைக்குரிய பொருள் என்பதாகும். பிறருக்கு உரிமையான நல்ல பொருளை விரும்புவது என்பது மறுமைத் தீமையை உண்டாக்கக் கூடிய தீவினைக் குற்றம். அநியாயாமான அபகரிப்பு ஆசை என்பது குடும்ப நாசத்தையே உண்டாக்கும். ஒருவருக்குரிய நற்பொருள் என்பது நியாயமான அறவழிகளில் அவர் ஈட்டியதாகவோ அன்றில் பரம்பரையாகவோ வந்திருக்கக் கூடும். அதை அபகரிக்க எண்ணுகின்ற எண்ணமே பாவச் செயல் ஆகும். எனவே அஃது அவ்வாறு விரும்பியவனின் குடும்பத்தையே அழித்து, அவனுக்குரிய வீடு பேறு கொடுக்கும் நல்வழியை அடைக்கும் குற்றத்தை நல்கி விடும். பொறாமை போன்றே, பேராசையும் மனதுக்குள் புகுந்து விட்டால் எண்ணங்களை அழித்து இன்னலை அள்ளி வழங்கும். கெட்ட எண்ணங்களை உற்பத்தி செய்து முன்னேற்றத்தைக் கெடுத்து, ஆவல் மேம்பட்ட பொருள் மீதே எல்லா நேரத்திலும் இலயிக்க வைத்துவிடும். அதால் பிறகென்ன கவனக் குறைவு, வேலை இழப்பு, வாய்பு இழப்பு, பொருள் இழப்பு, தொடர் துன்பம், கோபம், பிரிவு, பிழவு என்று குடும்ப நலன் அழிந்து, இவற்றால் மேலும் குற்றங்களை உண்டு செய்து மொத்த நாசத்தை உண்டாக்கி விடும். தீராத ஆவல் கொள்ளுகின்ற ஆன்மா சாந்தி அடைவதில்லை என்கிறார்கள். எனவேதான் அவை மீண்டும் பிறவி பெறுகின்றன என்று சொல்கிறார்கள். ஆதலினால் பிறர் பொருள் மீது ஆசையோ, அபகரிப்பு ஆசையோ, பேராசையோ கொள்ளாது இருத்தலே நன்மை மற்றும் நல் ஒழுக்கம். | |
| |
குறிப்புரை : | |
பிறரின் நற் பொருளை அபகரித்தல் குல நாசத்தையும், குற்றத்தையும் தோற்றுவிக்கும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
வெஃகுதல் - மிகுதியாக விரும்புதல், அதி ஆசை, பேராசை, இச்சை, பிறர் பொருளை விரும்புதல் பொன்று - கெடு, அழி, இற, பிழைபடு, தவறு | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 56. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. திருமந்திரம்: 175. வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. திருமந்திரம்: 180. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும் கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. மாணிக்கவாசகர். திருவாசகம். 1. சிவபுராணம் : பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 ஔவையார். ஆத்திசூடி: 35. கீழ்மை யகற்று. 36. குணமது கைவிடேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் ஔவையார். நல்வழி: வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். 5 ஔவையார். நல்வழி: உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக் கடல் ஓடி மீண்டு கரையேறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு. 6 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Coveting others righteous wealth unjustly will ruin one's own lineage and leads to evils there. | |
| |
Explanation : | |
Grudging on the un-entitled but others righteous property unjustly, will ruin one's own family descent and lead to evil offenses there on. | |
| |
Message : | |
Coveting others righteous property destroys one’s own lineage and furthers the evil deeds. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...