Tuesday, December 1, 2009

திருக்குறள்:154 (நிறைமை நிறைக்கும் பொறுமை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 154

நிறைமை நிறைக்கும் பொறுமை...

In English

நிறை உடைமை நீங்காமை வேண்டின், பொறை உடைமை
போற்றி ஒழுகப் படும்.

பொழிப்புரை :
நிறைமை உடைமை நீங்காது இருக்க வேண்டின், பொறுமை உடைமையைப் போற்றி ஒழுகப் படவேண்டும்.

விரிவுரை :
ஒருவர் முழுமைத் தன்மை கொண்டிருப்பதை நீங்காது இருக்க வேண்டின், பொறுமை எனும் உடைமையைப் போற்றி ஒழுகுதல் வேண்டும்.

அதாவது நிறை எனும் முழுமை, பொறுமை என்பது இல்லாது போயின் குறை உடைமை ஆகிவிடும் என்பது மறை பொருள். பொறுமை எனும் குணம் நிறைமை எனும் மாந்தரின் முழு நிலைமைக்கு இன்றி அமையாதது.

அள்ளக் குறையாது அனைத்துக் குண நலனும் நிறையுடை மாந்தர் பொறுமை எனும் குணத்தை இழப்பாராயின், அவரிடம் குறை ஏற்பட்டு நிறையுடை எனும் தகுதி இழப்பு ஏற்படுகின்றது.

எனவே நிறை குடம் தழும்பாது என்பதே போல், நிறையுடை மாந்தர் எதிலும் பொறுமை இழத்தல் கூடாது.

குறிப்புரை :
பொறுமை இழக்காத மாந்தரே நிறைவுறு மாந்தராய்த் திகழ முடியும்.

அருஞ்சொற் பொருள் :
நிறை - நிரம்பு, மிகு, பரந்திரு, முழுமை, முழுமையடை, சிறப்பு, பெருமை, மாட்சிமை, எடை, தராசு,
நிறுத்துதல், நிலைப்படு, உறுதிப்படு, திண்மை, கற்பு நெறி, வலிமை, மனத்தை ஒருமைப் படுத்துதல்.

ஒப்புரை :

திருமந்திரம்: 542.
வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே.

திருமந்திரம்: 1199.
சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

திருமந்திரம்: 1234.
சத்தியி னோடு சயம்புவம் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

திருமந்திரம்: 1244.
தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

திருமந்திரம்: 1385.
மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை
கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
3. திருவண்டப் பகுதி

உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே

ஔவையார். ஆத்திசூடி:
47. சுளிக்கச் சொல்லேல்.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
31. சூதும் வாதும் வேதனை செய்யும்

ஔவையார். மூதுரை:
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 154

Integrity Integrating patience...




In Tamil

niRai udaimai nIngkAmai vENTin, poRai udaimai
pORRi ozukap padum.

Meaning :
Should you wish your integrity to be intact, your patience must be upheld and preserved.

Explanation :
If one wishes not to evade but retain his integrity, then he should upheld and preserve his patience.

The implied meaning is that without patience the integrity is incomplete and becomes short fallen. The patience is the most necessary quality for those wise with integrity to keep it complete.

Those who have all the qualities in full with integrity when they lose the patience fall short in the fullness of their integrity.

Therefore, as in the saying "full pot does not shake", people of integrity should not lose their patience in anything.

Message :
One who does not lose the patience only can stand as the person of integrity.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...