Friday, December 18, 2009

திருக்குறள்:167 (திருமகளும் பொறுக்காத பொறாமை...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 167

திருமகளும் பொறுக்காத பொறாமை...

In English

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொழிப்புரை :
[பிறரிடத்தே] பொறாமை கொண்டவனைத் திருமகள், [தாம்] பொறுக்க இயலாது, [தமக்கு மூத்த] தமக்கையாகிய மூதேவிக்குக் காட்டி [விட்டு தான் நீங்கி] விடும்.

விரிவுரை :
பொறாமை கொண்டவனின் பேர் ஆசைகளையும், இழி செயல்களையும் பொறுக்க இயலாது திருமகளும் அவனைப் பேணும் பொறுப்பை அவளது தமக்கையாகிய மூதேவியிடம் காட்டிவிட்டு முழுவதுமாக அவனை விடுத்து அகன்று விடுவாள்.

திருமகளே பொறுக்காது அகலும் பொறாமை என்பதிலிருந்து பொறாமையின் தீமை விளங்கும். ஆக்க பூர்வமான நோக்கங்களுக்கும், ஆசைகளுக்கும் அருள் பாலிக்கும் அன்னைத் திருமகள், விருந்தினரைப் பேணுவோர் இல்லத்திலே குடியிருக்கும் திருமகள், பொறாமை எனும் குணம் ஒருவன் கொண்டான் என்றாலேயே பொறுக்காது பொறுப்பைத் தமது தமக்கை மூதேவியாரிடம் ஒப்படைத்து விட்டு அக்கணமே அகன்று விடுவாராம். அதாவது பொறாமை கொண்டவனை தரித்திரமே பீடிக்கும் என்பது பொருள். அதை செல்வத்தின் கடவுளாகிய திருமகளே செய்விப்பாள் என்பதிலிருந்து பொறாமையின் தீமை எத்தகையது என்பது ஈண்டு பெறத் தக்கது.

ஒருவரின் ஏழ்மையின் உச்ச நிலையாகிய தரித்திர நிலைக்கு அவரின் முன் வினைக் காரணம் மட்டுமல்ல, அவர் இம்மையில் கொள்ளும் பொறாமையும் என்பதும் தெளிவு.

குறிப்புரை :
பொறாமை கொண்டவனின் பேராவலையும், குற்றங்களையும் பொறாது திருமகளும் பொறுப்பை மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கி விடுவாள்.

அருஞ்சொற் பொருள் :
அவ்வித்து - பொறாமை கொண்டு
செய்யவள் - திருமகள், இலக்குமி
தவ்வை - மூத்த தமக்கை, தாய், மூதேவி.

ஒப்புரை :

திருமந்திரம்: 2682
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே.

திருமந்திரம்: 2683
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே.

திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்:
4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை

செத்தையேன் சிதம்ப நாயேன்
செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்
புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்
இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே. 669

திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்:
4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை

காயமே கோயி லாகக்
கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
நிறையநீர் அமைய வாட்டிப்
பூசனை ஈச னார்க்குப்
போற்றவிக் காட்டி னோமே.739

வஞ்சகப் புலைய னேனை
வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டாய்
அதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டேன்
நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா
என்னென நன்மை தானே.740

ஔவையார். ஆத்திசூடி:
58. துன்பத்திற் கிடங்கொடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
9. ஐயம் புகினும் செய்வன செய்

ஔவையார். மூதுரை:
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29

ஔவையார். நல்வழி:
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 167

Fortune Goddess’s unbearable Jealous...




In Tamil

avviththu azhukkARu udaiyAnaich seyyavaL
thavvaiyaik kAtti vidum.

Meaning :
The Fortune's Goddess unbearably points out that who possess jealous to misfortune and deserts him instantly.

Explanation :
By unable to take up anymore of the greed and gross desires and evil deeds of the envy, the Goddess of luck will point him to her sister, the Goddess of bad luck and desolates him instantly.

The unbearable to Goddess itself shows the extent of gross evil deeds of the enviousness is understandable.
The Goddess that who bestows the good luck, welfare and wealth for the creative thinking, good determinations and desires, that who dwells at those who treat well their guests leaves instantly those who get greedy with envy by handing over them to the misfortune. The implied meaning is thus that the envy will be impoverished and pauperized. That too pointed by the Goddess of luck is to show how grave the ill of enviousness is more obvious.

The reason for one's destitution is not only his previous birth deeds but also his enviousness in the current life is more evident through this.

Message :
Unbearable by the greed and sins of the jealous, the Fortune Goddess points those with envy to the misfortune and deserts forever.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...