Monday, December 14, 2009

திருக்குறள்:163 (பிறர் ஆக்கம் பொறுக்கா பொறாமை...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 163

பிறர் ஆக்கம் பொறுக்கா பொறாமை...

In English

அறன், ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்.

பொழிப்புரை :
அறநெறியையும், அதன் விளைவு ஆக்கத்தையும் வேண்டாதான் என்பவனே, பிறனின் ஆக்கத்தைப் போற்றாது பொறாமையை விளைவித்து அறுவடை செய்வான்.

விரிவுரை :
அறநெறியையும், அதை ஒழுகுவதனால் விளையும் ஆக்கத்தையும் வேண்டாதவன் என்பவனே, பிறரின் ஆக்கத்தைப் போற்றாது, சகிக்காது பொறாமை எனும் நச்சை விளைவித்து அறுவடையும் செய்வான்.

அறநெறியின் ஆக்கங்களான இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய செல்வத்தையும், புகழையும் விரும்பாதவனே, பிறரின் ஆக்கங்களைக் கண்டுப் பொறாமை அடைவான். பொறாமை எனும் நச்சைக் கருவாக்கி, உருவாக்கி, வளர்த்து அதன் பயனையே அறுவடையும் செய்து கொள்வான்.

பொறாமை எனும் நச்சு உருவாகி உருவாக்கியவரைத் தானே அழிக்கும் தன்மையது. எனவே நல்லறத்தைப் பேணாது, பிறர் ஆக்கங்களில், உடைமைகளில், வளர்ச்சிகளில், வெற்றிகளில் பொறாமைப் பட்டவன் தானாகவே அழிந்து கெடுவான் என்பது உட்பொருள்.

நன் நெறிபால் வரும் நல் ஆக்கங்களால் துன்பம் ஏதும் விளைவதில்லை. இம்மைக்கும், மறுமைக்கும் நிற்கும் புகழையும், அமைதியான வாழ்வையுமே அதால் பெற முடியும். சோதனைகள் நேரினும், நல் ஆக்கங்கள் காலத்தை விஞ்சிப் பயன் தரக் கூடியவை.

ஆனால் அத்தகைய நல் அறத்தையும், அதன் ஆக்கத்தையும் வேண்டாது, பிறர் பெற்ற ஆக்கங்களைக் கண்டு பொறாமை அடைதலே தீ ஒழுக்கம். அதன்பால் முன்னேற்றத்தையும், நல் வாழ்வையும் விடுத்து பொறாமைத் தீயால் அமைதி இழந்து, அனைத்து தீய பயன்களையும், தீயவற்றையும், துன்பத்தையும், இன்னலையுமே ஒருவன் பெற்று இக வாழ்விலேயே உழலுவதை மட்டுமே செய்யமுடியும்.

குறிப்புரை :
அறநெறியின் பலனை விரும்பாதவனே பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப் படுவான்.

அருஞ்சொற் பொருள் :
அறுப்பு - அறுவடை, கதிர் அறுத்தல், சலிப்பூட்டும் அறுவை

ஒப்புரை :

திருமந்திரம்: 1496
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மர்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

திருமந்திரம்: 1657
இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்.
19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள்
மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை. 365

ஔவையார். ஆத்திசூடி:
36. குணமது கைவிடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை (பழிச்சொல்)

ஔவையார். மூதுரை:
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27

ஔவையார். நல்வழி:
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 163

Envy of un-bearing other's prosperity...




In Tamil

aRan, Akkam, vENdAthAn enbAn piRan Akkam
pENAthu azhukkaRuppAn.

Meaning :
That who does not like the virtue or its creations is the only one who cannot bear up with others development but grows and harvests the jealous instead.

Explanation :
That who does not wish for the good virtues and its results only not appreciates others prosperity but do cultivates and also harvests the poison called enviousness.

One who does not like the prosperity and renown of the good virtues only develops jealous on others possessions and creations. He will conceive, form and grow the evil enviousness and harvest its yields.

Enviousness is a poison which destroys its own form and the constructor. Therefore who do not follow the good virtues but envies on others creations, possessions and successes will get destroyed by him-self is the implicit meaning.

The yields of the good virtues will not create any afflictions. It can actually create only the elevation of glories and peaceful life for the current and thereafter. Even though test of trials and experiments happen, good deeds can benefit all through and beyond the living time.

But instead of adopting or liking such good virtues, getting envy on others is exactly the bad virtue. Through that one can only destroy his own progress, spoil his own good life and struggle by immersing in the developed fire of envy, losing the peace and succumbing only to the evil results, evilness, afflictions and sufferings.

Message :
That who does not wish the virtuous creations only will be jealous about others developments.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...