Wednesday, December 16, 2009

திருக்குறள்:165 (பகையினும் கொடிய பொறாமை...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 165

பகையினும் கொடிய பொறாமை...

In English

அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.

பொழிப்புரை :
பொறாமை உடையார்க்கு அதுவே போதும்; பகைவர் தவறினாலும் கேட்டைத் தோற்றுவிப்பதற்கு.

விரிவுரை :
பொறாமை உடையவர் கெட்டுப் போக அவரின் பகைவர் தவறினாலும் கூட அந்தப் பொறாமையே போதிய கேட்டை உண்டாக்கிவிடும்.

ஒருவருக்கு இன்னல் கொடுத்து வீழ்த்த பகைவர் மறப்பினும் கூட கொண்ட பொறாமையே வஞ்சமின்றி தீதை வழங்கி வீழ்த்திவிடும். ஒருவர் கெட்டுப் போக வெளிப்பகை எதுவுமே தேவையில்லை அவர் கொண்ட பொறாமையே போதுமானது என்பது உட்கருத்து. ஆகப் பொறாமை எனும் குணம் பகையைக் காட்டிலும் மோசமனாது; தீதைத் தவறாது, மறக்காது நல்குவது.

சீர் கேட்டைச் சிறப்புடன் தருவது பகைவரினும் கெடுதலான பொறாமையே. பொறாமையினால்தான் எத்தனைத் துன்பங்கள் கூடவே பிறக்கின்றன. பகை, கோபம், ஆசை, களவு, பொய், சூது, சூட்ச்சி, தாபம், வியாதி, நிம்மதி இன்மை, குறுகிய மனப்பான்மை, குறுக்கு புத்தி அனைத்தும் பொறாமையோடு கூடிப் பிறந்து அனைத்துக் கெடுதல்களையும் அள்ளி வழங்கிவிடும்.

சென்ற குறளிலே சொன்னது போன்றே, பொறாமை என்பது சிந்தனைப் புற்று நோயே. அதனால் தோன்றும் அனைத்து நல் எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்டு அழிந்து கெட்ட எண்ணங்களாகவே மாற்றம் கொள்ளும். எனவே ஒருவரின் எண்ணத்தில் பொறாமை எனும் தீவிர நோய் தோன்றிய பிறகு அவர் நலமிழந்து கெட்டுப் போக வேண்டும் என்பது நோக்கமாயின் வெளிப் பகை என்று ஒன்று தேவையா?

குறிப்புரை :
பொறாமைக் குணம் பகையினும் கேட்டைத் தரும்.

அருஞ்சொற் பொருள் :
சாலும் - போதும்
ஒன்னார் - பகைவர்

ஒப்புரை :

திருமந்திரம்: 2693
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

திருமந்திரம்: 2721
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.

திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்:
4.23 கோயில் - திருநேரிசை :

மனத்தினார் திகைத்து நாளும்
மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ
கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பான்
அடியனேன் வந்த வாறே. 236

நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று
அழகநீ யாடு மாறே. 237

ஔவையார். ஆத்திசூடி:
53. சோம்பித் திரியேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

ஔவையார். மூதுரை:
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

ஔவையார். நல்வழி:
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 165

Envy is worst than the enemy...
In Tamil

azhukkARu udaiyArkku athu sAlum - onnAr
vazhukkiyum kEdu Inpathu.

Meaning :
For those who possess the enviousness that itself is enough to devastate themselves, even though their enemies fail to inflict upon.

Explanation :
For those who possess the envy that itself causes enough adversity to them-selves, even if their enemies fail to damage though.

Even though their enemies forget to inflict upon the devastation, the jealous possessed itself can cause unhindered damages in abundance to bring down the possessor to a greater adversity. For one to get spoilt there is no need of outside enemies at all, their inner envy itself is enough is the implicit meaning here. Therefore the trait of enviousness is worst than enemies, which brings the afflictions in abundance without fail or any gratitude.

The greater devastation is caused only by envy than enemies. How many types of hardships come along with it? Enmity, anger, lie, treachery, fraud, theft, self-pity, disease, no peace, narrow-mindedness, bewilderment all gets started with envy and brings all kinds of miseries possible.

As mentioned in the previous Kural explanation, envy is a kind of cancer disease to thinking. Therefore all the good ideas born also get affected by it and turnout as bad thoughts. Therefore when one is filled with enviousness does he require any outside enemy to get spoilt without any goodness if that is what after all his determination is all about?

Message :
The enviousness inflicts more damages than the enemies.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...