Saturday, December 19, 2009

திருக்குறள்:168 (பொறாமை எனும் தீய எண்ணம்...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 168

பொறாமை எனும் தீய எண்ணம்...

In English

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்து விடும்.

பொழிப்புரை :
பொறாமை எனும் ஓர் எண்ணம், கொண்டவனின் செல்வத்தையும் சிறப்பையும் சிதைத்துத் தீய நரகில் ஆழ்த்தி விடும்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
பொறாமை என்கின்ற ஒரு தீய ’எண்ணம்’, கொண்டவனின் செல்வத்தைச், சிறப்பை, மேன்மையைச் சிதைத்து தீது நிரம்பிய நரகில் ஆழ்த்தி விடும்.

ஆறறிவு படைத்த மனிதனிற்குச் சிந்தனையே பலமும், பலவீனமும். மனிதருக்கு நேர்மறை எண்ணங்களும், நல்வழிச் சிந்தைகளும், நன்னெறி ஒழுக்கமும் மேம்பாட்டை நல்கும். மாறாக தீய எண்ணமாகிய பொறாமை, ஒரு சிறு தீப்பொறி போலும் அவனது நற் சிந்தனையை முதலில் பாழ்படுத்தி விடும். அதால் கூடவே கிழைத்தெழும் கீழ்மை எண்ணங்களும், பகை, கோபம், ஆசை, களவு, பொய், சூது, சூட்ச்சி, தாபம், வியாதி, நிம்மதி இன்மை, குறுகிய மனப்பான்மை, குறுக்கு புத்தி அனைத்தும் கூடி நின்று கொண்டாடி அனைத்துக் கெடுதல்களையும் அள்ளி வழங்கும்.

ஆதலின் இயற்கையான வளர்ச்சிக்கு மாறாக, முன்னேற்ற எண்ணங்களும், முயற்சிகளும் முடக்கப்பட்டு அவனிடம் உள்ள வளங்களும் அழிந்து போகும். ஒருபுறம் முன்னேற்றங்கள் தடுக்கப்பட்டும், மறுபுறம் இருப்பில் இருப்பவை தீங்கில் செலவாகியும் அவனது வீழ்ச்சி அதி விரைவில் நிகழும். தீய எண்ணத்தால் செயற்படுத்தப்படும் தீய வினைகளால் இருக்கும் பொருளும், நற் பெயரும் அழிந்து, சிறப்புக்களும், சீரும் முழுவதுமாகக் கெட்டுப் போய் விடும். அதால் பொறாமை கொண்டவன் உதவிகளையும் நண்பர்களையும் இழந்து நரக வாழ்வை மேற் கொள்ள வேண்டி வரும்.

எனவே ஒரு சிறு தீப் பொறியாகிய பொறாமை எனும் தீய எண்ணம் அவனது செல்வத்தையும், சிறப்பையும், வாழ்வையும் நரகப் படுத்துவதைத் தொடர் நிகழ்வாய் நடாத்தி மொத்த நட்டத்தில் விரைந்து தள்ளி விடும்.

குறிப்புரை :
பொறாமை எனும் ஒரு எண்ணம் செல்வத்தைச் சிறப்பை அழித்துத் தீமை நரகத்துள் ஆழ்த்தி விடும்.

அருஞ்சொற் பொருள் :
பாவி - கருது, எண்ணு, கருத்து, எண்ணம்
செற்று - செதுக்கு, இழை, பதி, செறிவாகு, அடர்த்தியாகு, அழுந்து
உழி - அலை, இடம், பக்கம், நேரத்தில்
தீயுழி - நரகம்
உய் - செலுத்து, ஆழ்த்து

ஒப்புரை :

திருமந்திரம்: 2684
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே.

திருமந்திரம்: 2685
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

திருமந்திரம்: 2667
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.

திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்:
5.70 திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே. 706

அல்ல லோடரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரற்
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே. 707

ஔவையார். ஆத்திசூடி:
87. மனந்தடு மாறேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

ஔவையார். நல்வழி:
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 168

The evil thought called jealous...




In Tamil

azhukkARu ena oru pAvi thiruch cheRRu,
thIyuzhi uyththu vidum.

Meaning :
A thought called envy, destroys the possessor's wealth and prosperity and immerses him in the hell of evil.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
An idea called jealous devastates the one who conceived it, by destroying his properties, prosperities and the eminence and drowning him in the domain of evils.

Thinking is the strength and weakness for the human beings who have got six senses. For human beings positive attitude, good thinking and good virtues will give progress and betterments. On the contrary, the bad idea called jealous, just like a spark of fire will destroy the good thinking firstly. Then the subsidiary low thinking such as enmity, angry, excess desires, stealing, lie, conspiracy, deceit, self pity, disease, no peace, narrow-mindedness and shortsightedness along with envy will gather together and be more liberal in enduring all evils at grand scale.

Therefore all progressive thoughts and efforts will be stopped against the normal course of development and growth and his resources and belongings will get destroyed. One side all the progress gets stopped and the other side all the reserves gets exhausted and his inescapable fall happens at rapid speed. By all the bad deeds executed due to ill thinking, all belongings and reserves, good name, reputation and eminence get completely destroyed. Because of that one gets devoid of his friends and helps and must lead a life of hell.

Therefore, one simple fire spark like bad idea called envy can destroy his entire wealth, eminence and life and gradually turn it into a hell and drown him to disaster in totality.

Message :
A thought called jealous destroys the wealth and prosperity and immerses one in the hell of evil.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...