Friday, December 11, 2009

அதிகாரம்:17. அழுக்காறாமை - முகவுரை

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

முகவுரை

Chapter : 17

Un-enviousness

Preface

பிறரின் நலன் அல்லது வளர்ச்சி அல்லது வெற்றி கண்டு மனம் பொறுக்காமையே பொறாமை எனப்படும். அத்தகைய பொறாமை எனும் அழுக்காறு அற்றமை அதாவது இன்மையே அழுக்காறாமை.

மற்றவர்களின் நலனில், வளர்ச்சியில், அழகில், பொருள்களில், உடைமைகளில் நம்மிடம் அவ்வாறில்லையே என்றும், அவருக்குப் போய் இப்படி கிடைக்கின்றதே அன்றில் நிகழ்கின்றதே, இவருக்கெல்லாம் கிடைக்கின்றதே எனும் சிந்தனை “அழுக்கு” பொறாமை மனத்திலே பொறுக்காத, தாங்கிக் கொள்ளாத தன்மையால் உண்டாவதே. நமக்கும் அவ்விதம் நடக்காதா எனும் ஏக்கமும், நம்பிக்கை இன்மையும், தம்மிடம் இல்லையே எனும் தாழ்மையுணர்வும், அன்றில் அவருக்குக் கிடைக்கலாமா எனும் போலி உயர்வு மனப்பான்மையும், காழ்ப்புணர்ச்சியும் இந்த அழுக்கு உருவாகவும் வளரவும் காரணமாகின்றது.

அவரவர் செய்த வினைப் பயனிற்கு ஏற்பவே நல்லவை கெட்டவை ஒவ்வொருவருக்கும் நிகழ்கின்றன என்ற நம்பிக்கையும்; நாம் விரும்பியதை வென்றெடுக்க முடியும், எண்ணியதைச் செயலாக்கி அடைய முடியும் எனும் சுய நம்பிக்கையும், உழைப்பில் உறுதியும், அது அவருக்குப் பொருத்தமானது, அன்றில் அவருக்கு இன்னும் கிட்ட வேண்டும் எனும் வாழ்த்தும் குணமும் ‘பொறாமை’ எனும் அழுக்கை உண்டாகாதவாறு தடுத்து விடும்.

தேவையற்ற அன்றில் அதிகமான ஆசைகள், தேவையற்ற ஒப்பீடல்கள் பொறாமையை வளர்க்கின்றன. அறியாமையைக் காட்டிலும் கேடான பொறாமைக்கு அரைகுறை அறிவும் ஒரு காரணம்.

பிறரின் நலனால் நமக்குக் கேடு ஏதும் இல்லை எனும் நம்பிக்கையும், பிறர் நன்றாக இருந்தால் நல்லதுதானே எனும் பரந்த மனப்பான்மையும், மற்றோரின் வெற்றிகளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ‘பொறாமை’ ப் பேயை அண்டவிடாததோடு, நமக்கும் நல்லவை நடக்க வழி வகுக்கும்.

பிறர் பால் நாம் எதைத் தருகிறோமோ, எதை வாழ்த்துகின்றோமோ அவையே நமக்கும் நடக்கும் என்பதே உண்மை. காரணம் அதுவே நமது ஆழ்மனத்தின் உட் கிடக்கை. நாம் எதை அதிகமாக எண்ணுகின்றோமோ அதே நமக்கு நடக்கும் என்பது விதி. எனவே எப்போதும் நல்லவற்றை எண்ணுவதோடு மட்டுமல்லாது, பிறருக்கு , அறிந்தவர், தெரிந்தவர் அனைவருக்கும் எல்லாம் நன்மை கிட்ட உளமாற வாழ்த்துங்கள். பிறரின் வெற்றிகளைப் பாராட்டுங்கள். தோல்வியுற்றவரை தேற்றி உற்சாகப் படுத்துங்கள். பொறாமை தன்னாலேயே அழிந்து விடும்.

அடிப்படையில் அன்பும், கொடுக்கும் தன்மையும், ரசிக்கும் தன்மையும், பகிர்ந்து கொள்ளும் தன்மை மனதை இலேசாக ஆக்குவதுடன் பொறாமை எனும் உணர்வே வராமல் தடுத்துவிடுகின்றது. பகிர்வதும், இரசிப்பதும் மகிழ்வைத் தருவன. பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதிலேதான் மகிழ்வு அதிகம் என்பதையும், பிறரை மகிழ்விப்பதால் நமக்கு இன்பம் அதிகம் என்பதை தமது செய்கைகளால் அறிந்து விட்டால் பொறாமைத் துயரம் வருவதில்லை.

சோம்பலும், முடக்கமும் அடைந்து கிடக்கும் மனதில் வியாதிகளாக பொறாமை, களவு, பொய், சூது, வஞ்சகம், சூட்ச்சி, வாதம், குறுக்குப் புத்தி, ஆத்திரம், சுய பச்சாதாபம், மயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாய்ப் பின்னிப் பிணைந்து உருவாகும். சுறுசுறுப்பும், உற்சாகமும் பொங்கும் மனதில் மகிழ்ச்சியும், நல் எண்ணங்களும் உருவாகும். பிறரின் வளர்ச்சியில், வெற்றியில், மகிழ்ச்சியில் உற்சாகம் கொண்டு பங்கேற்பதால் இவ்விதமான கெட்ட எண்ணங்களும், தூற்றலும், துன்பமும் இராது. நாமும் நல்லெண்ணத்தால், துன்பமற்ற உள்ளத்தால் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் நம்மை அறியாமலேயே தொடர்ந்து கொண்டிருப்போம் உற்சாகத்தோடு.

பிறரின் வளர்த்தி, வெற்றி, மகிழ்ச்சி, உடைமை இவற்றைப் பொறுக்கும் தன்மை மாத்திரமல்ல, அதைப் பொறுக்காவிடின் உண்டாகும் ‘பொறாமை’ எனும் அழுக்கு தம்மைப் பற்றாத தன்மையைக் கொண்டு வாழ்வில் உய்ய, ’பொறையுடைமை’ அதிகாரத்தைத் தொடர்ந்து வள்ளுவர் இங்கே ‘அழுக்காறாமை’ எனும் இந்த அதிகாரத்தின் மூலம் உணர்த்துகின்றார்.


ஒப்புரை (Reference)

கணியன் பூங்குன்றனார்:
நன்றும் தீதும் பிறர் தர வாரா.

திருமந்திரம்: 556.
தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே

திருமந்திரம்: 210.
பொய்க்குழி தூர்ப்பான் புலா஢ புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

ஔவையார். கொன்றை வேந்தன்:
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு (பொறாமை)
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். நல்வழி:
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

***


In English:

Un-bearableness for the others growth or success is the enviousness. Having the clean mind with no such dirty jealous is what unenviousness is all about.

Grudging for others well being, development, charm, possession and things with a feeling that such that are not with us, how come they are getting these good things or happening or how can these things happen to them; and such dirty thoughts and un-bearableness in mind are the reason for creation of evil enviousness. Longing for such developments for the self, unbelief, no confidence in self with inferiority complex and dubious superiority complex to mock such development for others, malice and hate are also the causes for this envious dirty to born and grow.

The belief that depending on their past deeds goodness or badness occur to everyone; the self confidence to win what we wish; self trust to accomplish and achieve what we think, prowess in work, mind to believe and appreciate that others deserve their possession and the wishing mind for others to get the success, will stop the mind from enviousness enduring.

Unnecessary and unwanted excess desires and unnecessary comparisons develop the enviousness. Also the immature wisdom is another reason for the enviousness which is worse than the ignorance.

Confidence that others goodness are not any harm, and the wisdom to accept that when others are in goodness that is also good for others, and the true joy in others success will all help to keep away the envy from us and instead help us to get better.

The truth is that whatever we offer or wish to others is that what we get. Reason is that, that is what we have it in our inner mind. The destiny is that whatever we keep thinking in deep shall happen to us. Therefore we must keep not only thinking goodness always but also heartily wish others such as known and friends at always for all goodness. Always appreciate others on their success. Console and encourage the failed ones. Enviousness will automatically get destroyed.

Basically the love, compassion, giving, enjoyment and sharing makes the mind free and keeps away completely from enviousness feelings. Sharing and enjoyment makes happy. When we understand through practice that giving is more joyful than receiving and making others happy in turn make us happier, the afflicting enviousness never occurs.

The lazed and dormant brain develops interconnected jealous, deceit, lie, fraud, conspiracy, argument, narrow-mindedness, anger, remorse, self pity and bewilderment. Enthusiastic mind with vigor creates good thinking and happiness. By enjoying enthusiastically and appreciating others success and growth all these bad emotions, blasting and afflictions go away. We also continue our development and happiness through our good thinking and goodness subconsciously without to our knowledge but with greater zeal.

Not only bearing with others growth, success, happiness and possession but also to keep away the un-bearing dirty enviousness and to succeed in life, Valluvar rightly continues this chapter on 'Unenviousness' after the previous one on 'Forbearance'.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...