Monday, December 21, 2009

திருக்குறள்:170 (போட்டியும் பொறாமையும்...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 170

போட்டியும் பொறாமையும்...

In English

அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

பொழிப்புரை :
பொறாமையுற்று வளர்ந்தாரும் இல்லை; அஃது இல்லாதவர் ஆக்க மிகுதியில் குறைந்தாரும் இல்லை.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
பொறாமையுற்று வளர்ச்சி அடைபவரும் இல்லை. அஃது இல்லாதவர் தமது வளர்ச்சியில் குன்றியதும் இல்லை.

பொறாமை இன்மை வளர்ச்சியைப் பெருக்கும். பொறாமை வளர்ச்சியைக் கெடுக்கும் என்பது உட்பொருள்.

மனிதர்கள் தமது வாழ்வில், தொழிலில், கல்வியில், உடைமையில் என்று அனைத்திலும் பிறரை ஒப்பீடு செய்தே தமது வளர்ச்சியை அளக்கிறார்கள், அடையவும் செய்கிறார்கள். இத்தகைய ஒப்பீடு என்பது போட்டியாக இருக்கும் வரையில் அது வளர்ச்சிக்கு உதவும்; ஆனால் அதே ஒப்பீடு பொறாமை என்று ஆகும் போது வளர்ச்சியைக் கெடுக்கும் என்பதே இங்குள்ள மறை பொருள்.

எனவே முன்னேற விளைபவர்கள் போட்டி மனப்பான்மைக்குப் பதிலாக பொறாமை அடைவதால் கேடே விளையும். எனவே அவர்கள் வளர்ச்சி அடைவதும் இல்லை. போட்டியை மட்டும் சிந்தித்து பொறாமை இன்மையைக் கொண்டவர்கள் முன்னேற்றங்களில் குறைப்படுவதும் இல்லை. அவரது முன்னேற்றங்கள் நேர்மறை எண்ணத்தால் வளர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர குறையாது.

போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுவே. போட்டி மனப்பான்மை என்பது போட்டியாளருக்குக் கெடுதல் எண்ணாமல், செய்யாமல் தன் உழைப்பால் தான் முன்வருதல் என்பதே. மாறாக பொறாமை என்பது போட்டியாளருக்குக் கெடுதல் எண்ணுவதும்; செய்வதும் அதன் மூலம் தான் உயர நினைப்பதும் ஆகும்.

ஓட்டப் பந்தயத்தில் மனத்தைச் செலுத்தி அருகில் ஓடுபவரைக் காட்டிலும் வேகமாக முன்னேற நினைப்பது போட்டி. அவர் வென்றாலும் அதைப் பாடமாய்க் கொள்ளுதல், அவரை வாழ்த்துதல் என்பவை அனைத்தும் நன்னெறிகள். அவர் அடுத்த நிலையில் வென்றினும் கூடப் பாராட்டுதல் என்பது நேர்மறையான நல் ஒழுக்கம்.

மாறாக அவருக்குத் தொந்தரவு கொடுத்தல், காலை இடறுதல், வாரி விடுதல், அன்றில் தடம் மாற்றி இடர் கொடுத்தல், வயதையோ அன்றில் வேறு காரணங்களைக் காட்டிக் குறை சொல்லுதல், அவரைத் தகுதி இழக்க முயற்சித்தல் எனும் செய்கைகளால் அன்றில் எண்ணத்தால் தான் முதன்மை வர நினைத்தல் பொறாமை. அவர் எந்த நிலையில் வென்றினும் அவரது வெற்றியைப் பாராட்டது பகை கொள்ளுதல் என்பது பொறாமையினால் விளையும் தீ நெறியே.

போட்டியாளன் நம்பிக்கையாளன். பிறரின் முன்னேற்றத்தால் இயற்கையாகவே தனக்கும் முன்னேற்றம் வரும் என நம்புபவன். பிறரின் வெற்றியை ஆராய்ந்து பயின்று நல்லவற்றைத் தனது முன்னேற்றத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளுவான். பிறர் வளருவதால் தானும் வளர்கிறோம் என்று நம்புவான். நல் இணக்கத்தோடு முன்னேற்றத்தை மட்டுமே சிந்திப்பான்.

பொறாமையாளன் நம்பிக்கை அற்றவன். பிறர் முன்னேறிவிட்டால் தான் தோற்றுவிடுவோம் என எதிர்மறையாக நினைப்பான். நம்பிக்கை இழப்பான். எனவே பிறரின் நலனில் மனம் புழுங்குவான். தீய வழிகளையும், தீதையுமே எண்ணுவான். எனவே இயற்கையான வளர்ச்சியையும் விடுத்துப் பின் தங்குவான். ஆகையினால் அவனுக்கு முன்னேற்றம் என்பதே இருக்காது.

போட்டியாளன் பொறாமை அற்றவன். எனவே அவனுக்கு முன்னேற்றத்தில் குறைவே இருக்காது.

எனவே மனிதர்கள் வாழ்வில் முன்னேற போட்டிகளே வேண்டும். பொறாமைகள் அல்ல.

குறிப்புரை :
பொறாமையால் வளர்ச்சியும் இல்லை; பொறாமை இன்மையால் வளர்ச்சியில் குறைவும் இல்லை.

அருஞ்சொற் பொருள் :
அகன்று - விரிந்து
பெருக்கம் - அளவில் மிகுதி, எண்ணிக்கையில் மிகுதி, நிறைவு, வெள்ளம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 2688
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே.

திருமந்திரம்: 2689
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே.

திருமந்திரம்: 2690
உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

திருமந்திரம்: 2691
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே.

திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்:
6.67 திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்௿
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை௿
நற்பான்மை அறியாத நாயி னேனை௿
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்௿
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்௿
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்௿
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 672

ஔவையார். ஆத்திசூடி:
102. உத்தம னாயிரு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

ஔவையார். நல்வழி:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 170

Competition and Enviousness...




In Tamil

azhukkaRRu akanRArum illai; aHthu illAr
perukkaththin thIrnthArum il.

Meaning :
Bearing jealous none have grown great; by not bearing it none have gone down in their prosperity.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
By holding envy none grow higher. By not holding it none grow lesser in their progress either.

Un-enviousness increases the growth. Enviousness spoils the growth is the implied meaning here.

Human beings only by comparing with others measure their growth and also achieve progress in their life, profession, education, properties and prosperities. As long as this comparison stands within the limits of competition it would help to progress. However the same comparison when turns as envision that would destroy completely the progress is the message concealed here.

Therefore those who wish to progress instead of competitive mind when they conceive enviousness it would mean only destruction. Hence they never progress. Those who strive by thinking only competition without any jealous have never grown lesser in their goals. Their growths aided by the positive attitude only progresses and prosper and they never decline.

This is the main difference between the competition and enviousness. Competitive mind means not thinking any evil for the competitor but focusing only on progress and to succeed and elevate through one’s own sincere efforts. On the other hand, the enviousness is to think and inflict evil on the competitor and through that to advance and succeed.

In a running race by concentrating to run beyond the running neighbor and running so to come forward is the competition. Though the competitor won in that race, taking that as the lesson, congratulating and appreciating him all are good virtues and habits. Though the competitor won in the next levels too appreciating him is again a positive and good virtue.

On the other hand, giving troubles to the competitor, slipping his legs, pulling him or his legs or tripping out into his track or pushing him down, trying to topple him through tricks or blaming his age or other reasons and trying to disqualify him through all possible ways of perturbing by thinking or doing all these kind of evil deeds and by which to come top is complete enviousness. In whatever level the competitor wins instead of appreciating getting enmity on him is again all due to the evil practice of enviousness.

The competitive one is the believer of self confidence. He would believe that his growth comes naturally when others grow. He will analyze and study the success of others and use them to grow and better himself. He will believe that he advances through others progresses. With positive thinking and cooperative mind he will think only about the progress and success.

The envy one is unbeliever and has no confidence in his own self. He will think negatively that when others grow he will fail. And he will lose confidence. Hence he will be annoyed by others success. He will think only evil and ill. Hence he will stay back even without any natural advancement or growth. Therefore he will not have any progress at all.

The competitive one is without any enviousness. Therefore he will not have any shortfall in his progress at all.

Therefore the human beings need only competition to succeed in life. Not the enviousness.

Message :
There is no growth through envy; and there is no lesser growth due to non enviousness.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...