|
மனிதர்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும், மனதில் எண்ணியதை வெளிப்படுத்தவும் இனிமையான உரையாடல் முக்கியமாகின்றது. எனவே விருந்தோம்பலின் தொடர்ச்சியாய், உரையாடலில் இன்சொல் கூறுவதன் அவசியத்தை இங்கே பேசுகின்றார். அகத்தின்பால் இருக்கும் அன்பை முகம் காட்டிவிட, முகந்திரிந்து பார்த்தாலே வாடிவிடக் கூடிய மனித இயல்பில், பேசும் மொழி கடுமையாகி விட்டாலோ, சுடு சொற்களைக் கொட்டிவிட்டாலோ அவை ஆறாக் காயங்களை ஏற்படுத்திவிடுமல்லவா? எனவே இனிமையான பேச்சு, இனிய சொற்கள் என்பது மிக அவசியம். | |
இனிமையே யாரும் விரும்பத்தக்கது, இணக்கமானது. அன்போடு கூடிய இனிய வார்த்தைகள் ஆறுதல் அளிக்கும். இன்னும் பேச மாட்டார்களா என்று ஏங்க வைக்காதா? கேட்கக் கேட்கத் தித்திப்பாய் இருக்கும் உரையாடல்களை மனம் எண்ணிப் பார்த்து இன்புறாதா? வள்ளுவர் வாய்மொழி என்னவென்று கேட்போமா? ஊன் உருக்கும் தமிழ் தேன் திருவாசக அமுதத்தை அதிகம் ஒப்புரையில் தெளித்துள்ளேன். பொருத்தத்தை மீறிய அதன் இனிமைச் சொல் ஆக்கத்தை அனுபவிப்பீர்களென நம்புகின்றேன். | |
| |
ஒப்புரை (Reference) | |
| |
மாணிக்கவாசகர். திருவாசகம். சிவபுராணம். நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 ... ... அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 | |
| |
*** | |
| |
In English: | |
| |
For Human beings to share the Love, to express whatever they think, pleasant conversation become important. Therefore in continuation with the Hospitality, Valluvar speaks about the importance of the sweet words in the conversations here. While face shows of the Love inside in the heart, even a slight change in the look makes one withered naturally, the speaking language when becomes tough and harsh can make un-healing wounds in one, is it not? Therefore, polite, pleasant talk and sweet words are very important. Pleasure is the want for every one and that is positive. Sweet words with Love will be always soothing and consoling. Won't that make one to long for continue of the talk? Won’t the heart cherish the sweet talks again and again? Shall we listen to the Valluvar voice on the subject now? | |
| |
*** |
1 comments:
it is use full
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...