|
| |
| |
பொழிப்புரை : | |
பிரதி உபகாரமாகச் செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும், வானகமும் கூட ஈடாகுதல் அரிது. | |
| |
விரிவுரை : | |
தான் எந்த உதவியும் செய்யாமல், தனக்கு ஒருவர் செய்த உதவிக்கு வையகத்தையும், வானகத்தையும் [இணைத்தும்] ஈடாக ஆக்குதல் அரிது. பிரதிபலனாகச் செய்யப் படும் உதவி, நன்றிக் கடனைத் தீர்ப்பதால் அதற்கு ஒப்பீடு இருக்கிறது. ஆனால் பிரதி பலனாக அன்றிச் செய்யப்படும் முதல் உதவிக்கு ஒப்பீடு ஏது? அது ஈடு, இணையற்றது. எனவே அத்தகைய உதவிக்கு பூமியும், வானமும் இணையாகாது. செய்யாமல் செய்த உதவி என்பதற்கு யாரும் செய்யாமல் கைவிட்ட போழ்து செய்த உதவி என்றும் கொள்ளலாம். மேலும் செய்ய இயலாது, சிரமத்தின் ஊடே செய்யப்பட்ட உதவி என்றும் கொள்ளலாம். அனைத்திலும் அத்தகைய உதவிக்கு கைம்மாறாக விண்ணையும், மண்ணையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது என்பதே கருத்து. எனவே செய்யப்பட்ட உதவியின் அளவைக்காட்டிலும் அதற்குக் கைம்மாறு செய்வதற்காகக் காட்ட வேண்டிய நன்றிக்கு அளவே இல்லை என்பது உட்பொருள். உண்மைதானே? எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, சம்பந்தமில்லாத நபர் ஒருவர் கருணை கொண்டு செய்யும் ஒரு சின்ன உதவியினால் வாழ்வில் முன்னேறி இருப்பவர்கள் காலா காலத்திற்கும் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பார்களே. அதற்கு அளவு ஏதும் உளதோ? அன்றில் நன்றி மறந்தவர்கள் உண்மையில் மனிதர்களா? | |
| |
குறிப்புரை : | |
பிரதி பலனன்றிச் செய்யும் முதல் உதவிக்கு பூமியும், வானமும் இணையாகாது. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
ஆற்றல் - தணித்தல், நிறைவேற்றுதல், நிகழ்த்துதல், நடத்துதல், பொறுத்தல், உதவுதல், தேடுதல், வலிமை அடைதல், போதியதாகுதல், நீக்குதல். | |
| |
ஒப்புரை : | |
| |
ஔவையார். மூதுரை: நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். 1 ஔவையார். நல்வழி: புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல். 1 மாணிக்கவாசகர். திருவாசகம். 12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம்: ... கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257 அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258 மாணிக்கவாசகர். திருவாசகம். 20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி : புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும் அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377 | |
| |
*** |
In English: (Thirukkural: 101)
| |
| |
Meaning : | |
The unreciprocated help offered cannot be compensated with Sky and Earth together. | |
| |
Explanation : | |
Having no any help received previously, if one offers the help; such help cannot be equaled with sky and earth together. | |
| |
Message : | |
Sky and earth cannot equalize the unreciprocated help offered. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...