Tuesday, September 8, 2009

திருக்குறள்: 92 (ஈதலினும் இனியது...)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 92
Chapter : 10

Amiability

Thirukkural

: 92


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே-முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப்பெறின்.

பொழிப்புரை :
மனம் உவந்து ஈதலின் நன்றே, முகம் மலர்ந்து இனிய சொலன் ஆக இருத்தல்.

விரிவுரை :
ஒருவருக்கு மனம் உவந்து ஒன்றைக் கொடுத்தலினும் நல்லது, அவரிடம் முகம் மலர்ந்து இனிய சொல் பேசுபவனாக இருத்தல்.

மனமுவந்து கொடுக்கும் ஈகைக் குணம் சிறப்பானது. அதைக் காட்டிலும் சிறப்பானது, நல்லது முகம்மலர இனிய சொல் மொழிவது. ஒன்றைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, நல்ல வார்த்தையாவது பேசலாமே என்பார்களே அது இதைத்தான்.

மனமுவந்து கொடுப்பவர் இனிய முகத்தோடுதான் இருப்பார். வாங்கிக் கொள்பவருக்கு எதிர் பார்ப்புக்கள் இருந்தால் அவருக்குக் கிட்டும் மகிழ்ச்சி முழுவதும் இருக்க முடியுமா என்பது கேள்விக்குரியது. அதுபோலவே பொருள் உடைமையை விட்டுக் கொடுக்க இருக்கும் தன்மையைக் காட்டிலும், இன் முகத்தோடு இனிய மொழியைத் தருவது எளிது மேலும் மேன்மை உடைத்து என்கின்றார்.

அதாவது இனிய மொழி உறவைத் தருவது, இதயம் நிறைக்கச் செய்வது, மீண்டும் தொடரச் செய்வது. இனிய மொழி தருவதில் இழப்பு ஒன்றுமில்லை. பேசுபவர் மற்றும் கேட்பவர் இரு பாலார் மனங்களும் குறைகள் ஏதுமின்றி இன்புறச் செய்யும் தன்மையானது இனிய சொல்.

சுலபமான இனிய மொழியைப் பேசுவதால் யாருக்கும் குறை ஏதும் இராது, இனிமையே சேரும்.

இன்முகத்தோடு இனிய வார்த்தை சொல்லி, மனமுவந்து ஈவது என்பது எல்லாச் சிறப்புகளிலும் மிகச் சிறப்பானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

குறிப்புரை :
ஈதலைக் காட்டிலும் இன் முகத்தோடு பேசும் இனிய சொல் நல்லது.

அருஞ்சொற் பொருள் :
அகன் - உளம், மனம்
அமர்ந்து - நிறைந்து, உவந்து, மலர்ந்து
ஈதல் - கொடுத்தல்
பெறின் - பெற்று இருப்பின்

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே. 698

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் .(1). ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. 699
.(1). ஐம்பதொ டொன்றுடன்

மாணிக்கவாசகர். திருவாசகம். 5.திருச்சதகம்.
2. அறிவுறுத்தல்.:
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19
...
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

ஔவையார். ஆத்திச்சூடி:
ஞயம் பட உரை. 17
இணக்கமறிந்து இணங்கு. 19
தெய்வம் இகழேல். 60

***

In English: (Thirukkural: 92)

akan amarnthu Ithalin nanRE-mukan amarnthu
insolan AkappeRin.

Meaning :
A sweet word with beaming smile is more gracious than the heartiest gifts.

Explanation :

It is better than offering a heartfelt gift to one is to talk pleasantly with smiling face.

Giving gifts heart fully is great. But still better would be to talk pleasantly with a smiling face. That is what they say as even if nothing given is all right, instead at least talk a pleasant word.

Heart fully who offers would be having smiling face only. But when receiver has expectations it is questionable whether he is glad and completely satisfied. Similarly, than in the state of giving of the ownership of a thing, it is easy to utter a sweet word with a smiling face, says Valluvar.

That is the sweetly spoken language yields relationship, fills the heart and makes to continue again. There is no loss in offering the sweet words. The talker and the listener, both person's hearts get the joy without any inhibitions is the nature of the sweet words.

Speaking with easy pleasant words cause none any problems but only grow happiness.

Is it necessary to tell that heartfelt offering with pleasant face and sweet words is greater than any other great things?


Message :
Sweet words with a pleasant smile are better than gracious gifts.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...