|
| |
பொழிப்புரை : | |
[தனக்குப்] பயன் நோக்காமற் செய்த உதவியின் நற்பயனை நோக்கினால், அதன் நன்மை கடலினும் பெரியது. | |
விரிவுரை : | |
தனக்கு இன்ன பயன் தரும் எனக் கருதாது செய்த உதவியின் நற்பயனின் பண்பை ஆராய்ந்து நோக்கின், அதன் நன்மை கடலைக் காட்டிலும் பெரிது. காலத்தில் செய்யப்பட்ட உதவி உலகைக் காட்டிலும் எப்படிப் பெரிதோ அதைப் போன்றே அதிலும் சுய இலாபம் கருதாது செய்த உதவியிலுள்ள நற் பண்பு கடலைக் காட்டிலும் பெரிதாம். தனக்கு பயனுள்ளதா என்று ஆராயமல் ஒருவருக்கு நன்மைதரும் உதவியைச் செய்பவரின் மனமும், குணமும், அன்பும், பரிவும் கடலை விட விசாலமானதே. அதற்கு எவ்வளவு கைம்மாறு செய்தாலும் தகும் என்பது உட்பொருள். சுய இலாபத்தை எண்ணாது செய்த உதவி என்றால், நொடிப்பொழுதில் உடனடியாகச் செய்யப்பட்டது என்றும் தெளியவும். உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களையும் உதவி என்பது உயரிய அன்பின் செயல்பாடு, வெளிப்பாடு. அதை அளக்கத்தான் இயலுமோ? எனவே அஃது கடலினும் பெரிதென்பதில் அளக்க இயலாதது என்பது உட்பொருள். | |
குறிப்புரை : | |
சுய இலாபத்தை எண்ணாது செய்யப்பட்ட நல் உதவி கடலினும் பெரிதே. | |
அருஞ்சொற் பொருள் : | |
நயன் - உறவு, பரிவு, பண்பு, கனிவு, இனிமை, அருள், நற்பயன், நியதி, கொள்கை | |
ஒப்புரை : | |
ஔவையார். மூதுரை: மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். 12 | |
*** |
In English: (Thirukkural: 103)
| |
Meaning : | |
The merit of the help bestowed without weighing the benefits for the self is vaster than the sea. | |
Explanation : | |
The merit of the Help rendered without intending for self-benefit is vaster than the sea. | |
Message : | |
The help rendered without weighing the self benefit is vaster than sea. | |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...