|
| |
பொழிப்புரை : | |
தக்க சமயத்தில் செய்த உதவி [அளவில்] சிறிது எனினும், [அது] உலகைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது. | |
விரிவுரை : | |
உற்ற காலத்தில், காலம் தவறாது செய்த உதவி அளவில் சிறிதே எனினும், அஃது உலகைக் காட்டிலும் பன் மடங்கில் பெரியதாகும். இக்கட்டான, நெருக்கடியான, அவசரமான, உடனடியாகத் தேவைப்பட்டக் காலங்களில் செய்யப்படும் உதவியே, நன்மையே பல வேளைகளில் உயிரை, உடலை, உடைமையை, வாய்ப்பை, விபத்துக்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும், வழுவுவதிலிருந்தும், நழுவுவதிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அத்தகைய உதவி அளவில் சிறிதாக இருக்கலாம், ஆனால் அது செய்யப்பட்ட இடம், காலப் பொருத்தங்களின் பால் உலகைக் காட்டிலும் பல மடங்குகள் பெரியதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படும். ஓர் உயிரைக் காப்பாற்றச் செய்யப்படும் அவசரகால இரத்ததானம், உறுப்புத் தானம், விபத்தில் அகப்பட்ட ஒருவரை மருத்துவ மனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் உதவி, அவருக்குச் செய்யும் முதல் உதவிச் சிகிச்சை, மகப்பேற்று வலியில் துடிக்கும் பெண்டிருக்குச் செய்யும் உதவிகள் போன்றவை காலத்தினால் செய்யப்பட்ட உதவிக்கு உதாரணங்கள். உயிரைக் காப்பாற்றச் செய்யப்படும் உற்ற நேரத்து உதவிகள். அதைப்போலவே இடருற்ற காலத்தே, கால வரையறைக்குள் செய்யப்பட வேண்டிய அவசிய உதவிகள் எண்ணற்றவை. அவ்வாறு செய்யப்பட்ட உதவிகள் சில துளி நேரங்களையும், பொருளையும், முயற்சியையும் கொண்டு செய்யப்பட்டு இருந்தாலும் அவை செய்யப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து அவை நிச்சயம் முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும், உலகைக் காட்டிலும் பன் மடங்கில் பெரியதாகவும் கொள்ளப்படும். அவ்வாறு அவற்றைக் கருதி, மதிக்க வேண்டும் என்பதே கருத்து. | |
குறிப்புரை : | |
உற்ற காலத்துச் செய்த உதவி உலகைக் காட்டிலும் மிகப் பெரிது. | |
அருஞ்சொற் பொருள் : | |
நன்றி - நன்மை, உதவி மாண் - மேன்மை, சிறப்பு, தகுதிபெறு, நிறைய, மாட்சிமை, பெருமை, தடவை, மடங்கு | |
ஒப்புரை : | |
ஔவையார். மூதுரை: நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 ஔவையார். நல்வழி: எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4 | |
*** |
In English: (Thirukkural: 102)
| |
Meaning : | |
Timely rendered help though small is greater in multitudes than the world. | |
Explanation : | |
Appropriately offered help in the need of the hour, though may be trivial is indeed greater in many folds than the world. | |
Message : | |
Help rendered in the need of the hour is much greater than the world. | |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...