|
| |
பொழிப்புரை : | |
அளவால் அறியப்படுவது அன்று, உதவி; [அது] உதவி செய்யப்பட்டவரின் சிறப்பின் அளவைப் பொறுத்தது. | |
விரிவுரை : | |
உதவி அதன் அளவால் அறியப்படுவதில்லை. அது உதவி பெறப்பட்டவர் சிறப்பின், மேன்மையின் அளவால் அறியப்படும். உதவி பெறுபவரின் சிறப்பே செய்யப்பட்ட உதவியின் அளவைத் தீர்மானிப்பது. எனவே ஒரே உதவி அதன் பெறுபவரின் தன்மைக்கேற்ப சிறப்பில் வேறுபடும். பெருந்தகையாளருக்குச் செய்த உதவி பெருமிதத்தையும், சிறுமையாளருக்குச் செய்த உதவி சிறுமையும் பெறும் என்பது கூறாப் பொருள். பெறுநரின் மேன்மை என்பது அவரது சான்றாண்மைக் குணத்தின் மேன்மை பற்றியது; அவரது பொருள் வளத்தால் அல்ல என்பதை அறியவும். நல்லவருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் எழுத்தே போல் நின்று பறை சாற்றும். | |
குறிப்புரை : | |
உதவியின் பெருமை அளவு அதைச் சேர்பவரின் மேன்மையால் அறியப்படும். | |
அருஞ்சொற் பொருள் : | |
உதவி - துணைபுரி, கொடு, நன்மசெய், அறிவி, கூடியதாகு வரை - வரையறு, நிர்ணயி, எல்லை, அளவு, காலம், இடம் சால்பு - சிறப்பு, உயர்வு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை | |
ஒப்புரை : | |
ஔவையார். மூதுரை: நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். 2 | |
*** |
In English: (Thirukkural: 105. Recipient's merit is help's greatness...)
| |
Meaning : | |
Help is not known by its own measure. It depends by the recipient’s loftiness measure. | |
Explanation : | |
Help does not prescribe measure by its own size; it is measured by the receiver's merit and loftiness. | |
Message : | |
Measure of Help's renown is known by it's recipient's majesty. | |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...