Friday, September 11, 2009

திருக்குறள்: 94 (இன்சொல்வர்க்கு இல்லை தனிமைத் துன்பம்...)


அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 94
Chapter : 10

Amiability

Thirukkural

: 94


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்-யார் மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு.

பொழிப்புரை :
துன்புறுத்தும் [துணை] இல்லாமை இல்லாது போகும்; யாரிடத்தும் இன்புறுத்தும் இனிய சொல் பேசுபவர்களுக்கு.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
யார் இடத்தும் இன்புறத்தக்க இனிய சொல் பேசுபவர்களுக்கு, துன்புறுத்தும் தனிமை எனும் இல்லாமை இல்லாது போகும்.

இன்பம் தரும் இனிய சொல் பேசுபவர்களை அனைவரும் விரும்புவதால் அவருக்கு துணை இல்லாமை, அதாவது துணை அகலுதல் என்பது எப்போதும் நிகழாது. அவரைச் சுற்றிலும் அன்பர்களும், நண்பர்களும் எப்போதும் இருப்பார்கள் என்பது இயற்கை. அவரிடத்தில் தனிமை எனும் நோய், வெறுமை எனும் இல்லாமை இல்லாமலே போகும்.

உண்மையில் எப்போதும், யாரிடத்தும் இன்புறத்தக்க இனிய சொல் பேசுபவர்களை அனைவரும் சூழ்ந்தும், அண்மையில் இருக்கவுமே விரும்புவார்கள். அவருக்கு ஏதும் துன்பம் வந்தாலும் உதவிகள் செய்து அவருக்குத் துணையாக எப்போதும் வருவார்கள்.

மேலும் இன்பம் தரும் இனிய சொல்பேசும் தன்மையானவர்களுக்கு சோதனைகள் அதிகம் வாராது. எல்லாம் இன்ப மயமாகவே நிகழும் என்பதும் உட்பொருள். நல்லதை எண்ணினால் நல்லது நடப்பது போலவே. இனிமையாக இருப்போருக்குத் துன்பங்கள் தோன்றினாலும் அவை விரைவில் மறைந்து அவர் குணநலனிற்கேற்ப இன்பமே தொடரும். எனவே இல்லாமை எனும் நிலைமை வாராத அளவிலே அவருக்கு நன்மைகளே நடைபெறும், தொடரும். எல்லாம் இன் சொல்லின் பால் வெளிவரும் அவரது இனிய குணங்களின் பயனே.

குறிப்புரை :
இன்புறத்தக்க இனிய சொல் பேசுபவர்களுக்கு துணையற்ற தனிமை எப்போதுமில்லை.

அருஞ்சொற் பொருள் :
துவ்வாமை - இல்லாமை, நீங்காமை

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. 294

தவஞ்செபஞ்f சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே. 557

மாணிக்கவாசகர். திருவாசகம். 7. திருவெம்பாவை :
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158

ஔவையார். ஆத்திச்சூடி:
வல்லமை பேசேல்.98
வெட்டெனப் பேசேல். 104
ஓரஞ் சொல்லேல். 108

***

In English: (Thirukkural: 94)

thunpuRU um thuvvAmai illAkum-yAr mAttum
inpuRU um in solavarkku.

Meaning :
No sorrowful loneliness for those who speak pleasant and sweet word for everyone.

These explanations contain newer and exclusive messages.

Explanation :

Those who talk pleasingly sweet words with everybody will get their deprived loneliness disappear.

As everybody likes to be in company with the pleasing talker of the sweet words, the latter will not lack any company nor will be left alone. Naturally there would be friends and dear ones encircled them always. Therefore they won't have any sickening loneliness or nothingness left with them.

In fact, all will like to be around and nearby to those who talk gladly and pleasantly always with everyone. All will help them in case of any problems and distresses and will come in assistance to them always.

Also for such who speak glad, pleasant and cheerful will not get more troubles in general. Mostly all will go happy and smooth for them always is the innate meaning here. It is like good thinking results in good ones. Even though problem of sorrows crop up for the glad people, it will get cleared very soon for them due to their natural characteristic to continue the happiness. Therefore without getting to the situation of nothingness, good things happen and will continue always for them. All just because of the nature of pleasant talking of sweet words.


Message :
Those who speak pleasant and sweet words will never have paining loneliness.

***
0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...