Friday, September 4, 2009

திருக்குறள்: 89

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 89
Chapter : 9

Hospitality

Thirukkural

: 89


உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை, மடவார்கண் உண்டு.

பொழிப்புரை :
செல்வத்தினுள் வறுமை கொண்டு விருந்தோம்பலைப் பேணாதிருக்கும் அறியாமை, அறிவற்ற மூடர்களின் பால் உண்டு.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
செல்வம் படைத்திருந்தும் அதனுள் வறுமை செய்து விருந்தோம்பலைப் பேணாதிருக்கும் அறியாமை, அறிவிலிகளிடம் மட்டுமே உண்டு.

விருந்து ஓம்பலைப் பேணாதிருத்தல் அதுவும் செல்லம் உடைத்தும் இல்லை என்று செய்யாதிருந்தால், அது செல்வத்துள் வறுமை எனும் நிலை மாத்திரமல்ல, அஃது அறிவிலிகாள் பால் இருக்கும் ஓர் அறியாமை.

விருந்தினைப் பேணாமல் சிக்கனம் செய்து விடலாம் அல்லது விருந்து கொடுத்தால் வறுமைப் பட்டுவிடுவோம் என்பது முட்டாள்தனமான காரியம் அன்றி வேறு ஏது? அஃது சிறு மதியாளர் கொள்ளும் அறிவீனமே. அறிவுடையோர் அவ்விதம் விருந்தோம்பலைத் தவிர்ப்பதைச் செய்ய மாட்டார்கள்.

குறிப்புரை :
விருந்தோம்பலைத் தவிர்த்துச் சிக்கனம் தேடுவது அறிவீனம்.

அருஞ்சொற் பொருள் :
உடைமை - வைத்திருத்தல், சொத்து, செல்வம்
மடைமை - அறிவீனம், முட்டாள்தனம், மடத்தன்மை
மடவார் - அறிவற்றோர், முட்டாள்கள்

ஒப்புரை :

ஔவையார். கொன்றைவேந்தன்:
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். 4
சூதும் வாதும் வேதனை செய்யும். 31
நல்லிணக்க மல்லது அல்லற் படுத்தும். 48
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை. 87

ஔவையார். நல்வழி: 8
ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.

ஔவையார். நல்வழி: 22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.

ஔவையார். மூதுரை: 24
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

***

In English: (Thirukkural: 89)

udaimaiyuL inmai virunthu Ombal OmbA
madamai, madavArkaN uNdu.

Meaning :
The stupidity of avoiding treating the Guests due to meagerness though wealthy abundant is found only with the fools.

These explanations contain newer and exclusive messages.

Explanation :

Though possessing wealth but due to meagerness, the stupidity of avoiding treating the Guests, is only found in the fools.

Avoiding hospitality, that too while having wealth in abundance, is not only the sate of poorness within the wealth, but it is the foolishness available only with the stupid.

Is it not the absolute stupidity to save through without hospitality of entertaining the Guests or think that treating the Guests would make one pauper? That is only foolishness of the petty minded. Wise will never do such avoid of the Guests.


Message :
Avoid treating the Guests to save is foolishness.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...