Sunday, September 6, 2009

அதிகாரம்: 9. விருந்தோம்பல் - முடிவுரை

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

முடிவுரை

Chapter : 9

Hospitality

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

81 இல்லங்களில் வாழ்வது வரும் விருந்தினரோடு கூடி மகிழவே.

Homely life is only to tend and treat the guests.
82 அமிழ்தெனினும், மருந்தெனினும் விருந்தோடு உண்ணுவது பண்பு.

Either nectar or medicine, eat with the guests.
83 விருந்தினரைப் பேணுவதால் வறுமை வாராது; செழுமையே நிறையும்.

Tending the Guests will bring no impoverishment but only prosperity and enrichment.

84 இன்முகத்துடன் விருந்தினரைப் பேணின் திருமகளும் உளம் மகிழ்ந்து வந்து நிறைவாள்.

Pleasing hospitalities extended to Guests brings the Goddess of Luck to smile and dwell in their home happily.
85 விருந்தினருக்கு உணவளித்துப் பின் மிஞ்சியதை உண்பதே சிறந்த விருந்தோம்பல்.

Good hospitality is to treat the Guests first and then eat the rest.
86 இகத்தில் விருந்தினரை மகிழ்விப்போன் பரத்திலே மகிழ்வுக்குரிய விருந்தினனாக இருப்பான்.

That who treats the Guest happily on earth will be a happy guest at heavens.
87 விருந்துணவால் அச்சுறுத்தும், வருத்தம்தரும் நட்புக் கிளைப்பதில்லை.

No friendship of grief nor afraid comes out due to feast with guests.
88 விருந்தோம்பலைச் செய்யாதவர் ஆதரவற்றோராய்ப் புலம்பித் துன்புறுவர்.

Those who never treat their Guests will regret, crave for supports and relations and suffer.
89 விருந்தோம்பலைத் தவிர்த்துச் சிக்கனம் தேடுவது அறிவீனம்.

Avoid treating the Guests to save is foolishness.
90 அகமும் முகமும் மலர விருந்தினரை உபசரித்தல் வேண்டும். அன்றில் அவர் வாடிவிடுவர்.

Guests must be treated with love and compassion in heart and deeds. Otherwise they wither.

குறிப்புரை

வீடு என்பதே விருந்தினருக்கே. மருந்தெனினும் விருந்தினரறிய உண்ண வேண்டும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று, அவருக்கு முதலில் உணவளித்து, மிஞ்சியதை உண்டு, நட்பு பாராட்டி, முகம் மலர்ச்சியுடன் பேணுவதைச் செய்வதால் செல்வம் குறையாது மேன்மேலும் வளம் கூடி, இலக்குமியும் உடன் உறைந்து சுபிட்சமும், இனிமையும் கூடி, வானவரும் போற்றக் காத்திருக்கும் பேற்றைப் பெற்று எந்தக் கெடுதலும், கெட்ட நண்பர்களும் உருவாகாது இன்புறுவர்.

விருந்தோம்பலைச் செய்யாதவர் ஆதரவற்றவராகி, உறவுகள் அற்று வருந்துவர். விருந்தோம்பலைச் செய்யாது சிக்கனத்தை வேண்டும் சிறுமதியாளர் அறிவீனர்களாகி முட்டாள்களாக இருப்பர்.

Message

Home is meant for Guests. Even though medicine eat with Guests. When you welcome Guests with compassion and Love, give them food first and eat the rest, maintain friendship and tend them with sweet smiles, you will not hit by impoverishment but flourish with prosperity, enriched by the God of Wealth with happiness, heavenly hospitality awaiting and no friendships of grief and no animosities crop.

Those who don't extend hospitality to their Guests earn only no supports and relations and sufferings. And that narrow-minded who save avoiding treating the Guests will be foolish and considered as stupid.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...