Monday, September 7, 2009

திருக்குறள்: 91 (இனிய சொல் என்பது...)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 91
Chapter : 10

Amiability

Thirukkural

: 91

இன் சொல்-ஆல் ஈரம் அளைஇ, படிறு இல ஆம்
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்.

பொழிப்புரை :
இனிய சொல்லாவது, அன்பெனும் ஈரம் கலந்த, பொய்யற்றதாம்; உண்மைப் பொருள் கண்டார் வாய்ச் சொல்.

விரிவுரை :
உண்மைப் பொருளைக் கண்டுணர்ந்தவரின் வாய்ச்சொல், அன்பு கலந்து, பொய்யற்றதாய் இருப்பின் அதுவே இனிய சொல்லாகும்.

ஆக உண்மையை உண்மையாக, அன்போடு பேசினால் அதுவே இனிய சொல்.

உண்மையைப் பொய்மை கலந்து அன்றில் வஞ்சனையோடு அன்றில் அன்பற்றுப் பேசினால் அது இனிமையற்றது. மேலும் காணாததை அன்றில் உணராததைச் சொல்லுவதும் இனிமையற்றதே என்பது உட்பொருள்.

எனவே கற்பனை கலந்து உண்மை போலும் பேசும் பேச்சுக்களும் இனியவை அல்ல என்பது தெளிவு.

குறிப்புரை :
இனிய சொல் எனப்படுவது உண்மையை உண்மையாக அன்போடு பேசுவதே.

அருஞ்சொற் பொருள் :
அளைஇ - கல, துளாவு, தழுவு
படிறு - பொய், வஞ்சனை, ஏமாற்று
செம்பொருள் - நேர்பொருள், உண்மைப்பொருள், சிறந்தபொருள்.

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர் கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே. 635


நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. 637

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே. 676


மாணிக்கவாசகர். திருவாசகம். 5.திருச்சதகம்:
...
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7


ஔவையார். ஆத்திச்சூடி:
குணமது கைவிடேல். 36
சித்திரம் பேசேல். 45
சீர்மை மறவேல். 46

***

In English: (Thirukkural: 91)

in sol-Al Iram aLai i, padiRu ila Am
semporuL kaNdAr vAych chol.

Meaning :
Pleasant words are primarily the truth uttered kindly and sincerely.

Explanation :

The words from those who understood the Truth, when mingled with Love and uttered truthfully that are the pleasant words.

Therefore talking truthfully the truth with Love is the pleasant words.

Speaking the Truth with lies or deceitfully or loveless is unpleasant. And telling the unrealized or unseen is also unpleasant. That is the implicit meaning.

Therefore it is clear that the fake and dubious talk mixed with the imagination which looks like the Truth is also a not the pleasant one.


Message :
Pleasant words are truths spoken truly and lovely.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...