Thursday, October 1, 2009

திருக்குறள்: 106 (நல்லாரை, உதவியோரை மறுக்காதே...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 106
Chapter : 11

Gratitude

Thirukkural

: 106

நல்லாரை, உதவியோரை மறுக்காதே...

மறவற்க, மாசு அற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு.

பொழிப்புரை :
மறவாதீர் மாசு அற்றார் நட்பை; துறவாதீர் துன்பத்தில் ஆதரவு நல்கியோர் நட்பை.

விரிவுரை :
மாசு அற்றார் நட்பை மறக்காதீர்; துன்பக் காலத்தில் ஆதரவு செய்தவரின் நட்பைத் துறக்காதீர்.

மாசற்றார் நட்பு எக்காலத்திலும் நன்மையும், இன்பமுமே பயக்கும். துன்பத்தில் ஆதரவுக் கரம் கொடுத்து நல் உதவிகளைச் செய்தோர் எக்காலத்திலும் துறந்து விடக் கூடாது. துன்பத்தில் உதவி செய்தவரின் உதவியையும், நட்பையும் மறக்க ஒண்ணாது, துறத்தலும் கூடாது. அதைப் போலவே குற்றமற்றவர் நட்பையும் மறக்கவோ, துறக்கவோ கூடாது.

நல்லோரின் நட்பு சமூக வாழ்க்கையில் நல்லவை தொடர என்றும் தேவை.

குறிப்புரை :
நல்லோரையும், உதவி செய்தோரையும் மறக்கவோ, துறக்கவோ கூடாது.

அருஞ்சொற் பொருள் :
துப்பு - ஆதரவு, நலன், நன்மை, உணவு, தகவல், தூய்மை, (உமிழ், எச்சில்)
ஆய - செய்த

ஒப்புரை :

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

***

In English: (Thirukkural: 106. Abandon not the good and the helpers...)

maRavaRka, mAsu aRRAr kENmai; thuRavaRka
thunpaththuL thuppu AyAr natpu.

Meaning :
Forget not the friendship of the blameless; nor forsake the friendship of those who helped in your hardship.

Explanation :

Never forget the friendship of the pure; never abandon the friendship of those who helped in your adversity.

The friendship of the unimpeachable always yields goodness and happiness. Those who helped during the hardship should never and ever be omitted. Never forget the help and omit not the friendship of those who assisted in the bad times. Likewise never forget nor forsake the friendship of the blameless.

Good one's friendship is ever required to continue the goodness in the social life.


Message :
Never forget nor forsake the friendships of the pure and the helped ones.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...