Saturday, October 3, 2009

திருக்குறள்: 108 (நன்றியை நினை; அல்லதை மற...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 108
Chapter : 11

Gratitude

Thirukkural

: 108

நன்றியை நினை; அல்லதை மற...

நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

பொழிப்புரை :
[பிறர் செய்த] நன்மையை மறப்பது நன்று அல்ல; [பிறர் செய்த] நன்று அல்லாதவற்றை அன்றே மறந்து விடுவது நன்று.

விரிவுரை :
பிறர் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல, நன்றல்லாதவற்றை யாரேனும் தமக்குச் செய்தால் அதை அன்றே மறந்து விடுவது நல்லது.

இவை இரண்டும் ஒருவர் செய்யவேண்டிய நல் அறமாகும்.

பிறர் செய்த உதவிக்கு நன்றி மறப்பதும் நல்லதல்ல. பிறர் செய்த தீங்கை நினைத்திருப்பதும் நல்லதல்ல. நன்றி மறந்தால் அவருக்கு பிரதி உபகாரம் செய்ய இயலாது. பிறர் செய்த தீங்கை மறக்காது இருந்தால், நிம்மதி இருக்காது; அதை மறப்பின் மேலும் தீமை விளையாது. கெடுவான் கேடு நினைப்பான். எனவே நல்லன அல்லாதவற்றை மறத்தலே நல் வினை பெருக்கும்.

நினைப்பது என்பது கடந்த காலத்திற்கு மட்டுமா? அவை எதிர்காலத்தையும் கருதலாம் தானே. கண்ணதாசன் “அந்த நாலு பேருக்கு நன்றி” என்பார். இறுதி யாத்திரைக்கு உதவும் அந்த நாலு பேருக்குக் கூட நன்றியோடு திகழுதல் இன்னும் பண்பாடோடு நம்மை நடந்து கொள்ளச் செய்யும். குறைந்த பட்சமாக நாலு பேராவது சமூகத்தில் வேண்டும் என்கின்ற இணக்கத்தைத் தரும்.

நல்லதையே நினைப்பது நல்லதையே தரும். தீங்கிழைத்தவரை மறப்பதால் இருக்கும் நன்மை தனது எண்ணம் சீர் படுவது மட்டுமல்ல; அவராலும் கூட பிறகு நன்மைகள் விளையக் கூடும் என்பதே. ஏசு ஒரு கன்னத்தில் அடித்தவனிற்கு மறு கன்னத்தைக் காட்டச் சொல்லியதும், வள்ளுவர் தீங்கிழைத்தவருக்குத் தண்டனை அவர் நாண நன்னயம் செய்யச் சொல்லியதும் (திருக்குறள்:314 ), பொதுவாக தவறுகளை மறக்கவும் மன்னிக்கவும் சொல்லுவதும் இதன் பால்தான். எனவே எண்ணங்கள் எப்போதும் நல்லதாக இருப்பதால் நன்மைகள் தான் கூடும்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்த துன்பத்தையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை. நல்லவை நடக்க அவற்றையே எண்ணுவதில் நட்டம் ஏதுமில்லையே. நடப்பவை நல்லதாகவே இருக்கும் என்னும் எண்ணமும், நம்பிக்கையும் நல்லவற்றைத் தருகிறதோ இல்லையோ கெடுதலை மட்டும் நிச்சயம் தராது என்பதே உண்மை.

ஆக நல்லவற்றையே சிந்திப்போம்; அல்லாதவற்றை அக்கணமே மறப்போம்.

குறிப்புரை :
நன்றியை எப்போதும் மறக்கக்கூடாது; நன்றல்லதை அப்போதே மறக்க வேண்டும்.

அருஞ்சொற் பொருள் :


ஒப்புரை :

பழமொழி:
கெடுவான் கேடு நினைப்பான்
தனக்கே வரும் பெரும் கேடு.

ஔவையார். மூதுரை:
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

பட்டினத்தார். கோயில் திரு அகவல் 1: 1
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!


***

In English: (Thirukkural: 108. Remember Good, Forget bad)

nanRi maRappatu nanRu anRu; nanRu allathu
anRE maRappathu nanRu.

These explanations contain newer and exclusive messages.

Meaning :
Not good to forget the good things others done; Good to forget the not good the immediate day.

Explanation :

Forgetting the good things others done is not good; forgetting the not good things others done the same day is good.

Both of these are good virtues for one to adopt.

Not good to forget the helps done by others and also not good to remember the bad things done by others. When the help received is forgotten, it cannot be reciprocated. When a bad thing by other is not forgotten, there won't be peace; when that is forgotten it won't create anymore harms. Only the bad will remember the bad and brood over to get again bad. Therefore forgetting the not good only can generate more goodness.

Is keeping in mind, thinking, constrained only to the past? It can consider the future too, is it not? Kannadhasan says "Thanks to those four" ("andha nAlu pErukku nandri"). Gratitude for those four pals who would carry us in the last journey of future, nurtures us to be more cultural. It makes to be in congeniality at the least with the four as necessary in the society.

Thinking good renders only goodness. The good thing in forgetting the ill doer is not only straightens one's thinking but also that you may get good things from the ill-doer in the future. Jesus saying "if someone slaps you on the right cheek, let him slap your left cheek too" , Valluvar's saying "The good way to punish the ill-doer is to shame him by doing good thing to him" (Thirukkural:314) and general saying "forget and forgive" are all for this sake only. Therefore thinking good always only increases the chances of benefits.

Whatever thinking if occur no need of the God. Thinking only the sorrow occurred gives no peace ever. In fact there is no any loss in thinking good. Is it not? The thinking and belief of 'whatever happens is only for good' whether yields goodness or not, certainly will never give badness is the truth.

Therefore let us think only the good; and forget the bad instantly.


Message :
Forget never the good; Forget immediately the bad.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...