Friday, October 9, 2009

திருக்குறள்: 112 (நியாயவானின் சொத்து கெடாது...)

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 112

நியாயவானின் சொத்து கெடாது...

In English

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி,
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

பொழிப்புரை :
நடுநிலைமை உடையவ[னி]ன் உண்டாக்கம் சிதைவு இன்றி அவனது வாரிசினருக்குச் சிறப்பையும், காவலையும் தரவல்லதாய் இருக்கும்.

விரிவுரை :
நடுநிலைமை உடையவனின் உருவாக்கங்கள் (செல்வம், நற்பெயர், வருமானம்) அனைத்தும் சிதைந்து அழிவுறாது அவனது வழித்தோன்றல்களுக்குப் பெருமையையும், களிப்பையும், காவலையும் வழங்குவதாய் இருக்கும்.

நேர்வழியில் நியாயத்தின்படி சம்பாரித்தவை வாரிசுகளுக்குச் சிதைவின்றிச் சிந்தாமல் சிதறாமல் சென்று சேர்ந்து நன்மை பயக்கும். அல்லாதவை அவன் காலத்திலேயே அழிந்து போய் விடும்; ஒருவேளை மிகுந்து இருந்த போழ்தினும் அவர் வாரிசுகளுக்குச் சேராமல் போகலாம்; சேர்த்தவை அவர்களுக்குப் பாதுகாப்பு நல்காமல், நன்மை செய்யாமல் தீய பயன்பாடுகளை வழங்கி, தீதே செய்யலாம்.

நேர்வழியில் சம்பாதிக்காதவை அழிந்து போவது மட்டுமல்லாமல் மேலும் தீமைகளை வழங்கிவிட்டே செல்லும் என்பது மறை மொழி.

சான்றோர்களின் ஆக்கங்கள், சம்பாதனைகள் செல்வமாய் இல்லாது போயினும், அவர்களது பெயர்கள் கூட அவர்களின் வாரிசுகளுக்கு நன்மை செய்து நிற்கும் என்பது கண் கூடு. எனவேதான் வள்ளுவர் ‘செல்வம்’ என்றுச் சொல்லாது ஆக்கம் என்று கூறிச் சென்றார்.
நல்ல பெயர் ”சம்பாதித்தல்” காலங்களைக் கடந்து நன்மை பயக்கும் என்பது அவர்தம் வழித்தோன்றல்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்பதே எச்சங்கள் என்னும் எஞ்சியோருக்காகும்.

நீதி வழுவாது நிற்போரின் சொத்துக்களை, தீயவர்கள் தீண்டவும் அஞ்சுவர். எனவே அனைவரும் போற்றும்படி இருக்கும் அவரது சொத்துக்கள் அழிந்து படாமல் வாரிசுகளுக்கு உதவும்படி இருக்கும்.

ஆட்சியில், அதிகாரத்தில் அநியாயமாகச் சம்பாரித்தவை பேரழிவையே தரும் என்பது கூறாப் பொருள்.

குறிப்புரை :
நியாயவானின் சொத்துக்கள் நாசமாகாது அவனது சந்ததியைச் சார்ந்து பயனளித்துப் பெருமையும் பாதுகாப்பும் வழங்கி நிற்கும்.

அருஞ்சொற் பொருள் :
செப்பம் - இணக்கம், ஒப்புரவு, செவ்வைத் திருத்தி, நடுநீதி, மாப்பு, வழி, வீதி
எச்சம் - உண்மை, எச்சில், காரியம், குறை, சந்ததி, சேடம், பிள்ளை, மரணசாதன ஈவு, யாகம், எஞ்சி நிற்பவை
ஏமாப்பு - கருத்து, காவல், செருக்கு, மிகு களிப்பு, வலியாதல்.

ஒப்புரை :

சிலப்பதிகாரம்: 55
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
...

திருமந்திரம்: 267.
இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே.

திருமந்திரம்: 1069.
ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல்
சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே.

திருமந்திரம்: 1648
முன்னின் றருளு முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

ஔவையார். ஆத்திச்சூடி:
1. அறஞ்செய விரும்பு.
30. அறனை மறவேல்.

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 112

Assets of the Justness ruin not...

seppam udaiyavan Akkam sithaivu inRi,
echchaththiRku EmAppu udaiththu.

Meaning :
The creations of the man with justice go un-ruined to his descendants and secure them honor and protection.

Explanation :

All the earnings such as wealth, goodwill, income of the man of justice go un-ruined to his offspring and stand honoring and protecting them with happiness.

The fair and righteous earnings reach the descendants without any deterioration and do goodness to them. The other in his own life time will get destroyed; by chance even if exists it may not go to his offspring; or it may not provide security to them and instead may provide bad usage and yield only ill things.

Unfair earnings not only get destroyed but also make only bad results before it goes away is the implied meaning here.

Though the makings and earnings of the wise may not be of great wealth, their goodwill and fame helps their offspring is widely known. That is the reason Valluvar did not use the word 'wealth' and instead used the word makings. Good name earned will stand against time and will help and do the good to their descendants and family members.

The bad too will be afraid to touch the properties of the just. Therefore their properties appreciated by all and without any destruction will be of help to their descendants.

In the government or in the power whatever earned illegal or in wrong ways will end up always in great loss is the imbibed meaning here.


Message :
Properties of the just man pass on un-distortedly to his descendants securing honor and protection to them.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...