Saturday, October 17, 2009

திருக்குறள்: 120 (நியாயமான வாணிபம்...)

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 120

நியாயமான வாணிபம்...

In English

வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப்
பிறவும் தம்போல் செயின்.

பொழிப்புரை :
வாணிகம் செய்வாருக்கு [உண்மையான] நடுநிலையான வாணிபத் தொழில் எனப்படுவது - பிறர் பொருளையும் பேணித் தமதே போல் செய்தல் ஆகும்.

விரிவுரை :
பிறர் பொருளையும் தமதே போல் பேணிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வாருக்கு நடுநிலை தவறாத வாணிபப் பணி ஆகும்.

துலாக்கோலைப் பயன் படுத்தும் அடுத்த நபர்களான வியாபாரிகளுக்கும் நடுநிலைமை தவறாதே, பிறழாதே அவர்தம் கடமையைச் செய்தல் வேண்டும் என்பதை இக்குறளில் தெளிவுறுத்துகின்றார். இந்த வியாபாரிகள் என்பதின் கீழ் அனைத்துத் தொழில்களும் அடங்கி விடுகின்றன. எனவே நடுநிலை என்பது அனைத்துத் தொழிலுக்கும் பொதுவானதே.

வள்ளுவர் காலத்தில் வியாபாரம் பண்ட மாற்று முறை. எனவே கொள்முதல் செய்தல் எனும்போது பிறர் பொருளென அதிகமும், மாற்றுப் பொருளைக் குறைத்துக் கொடுப்பதை அநியாய இலாபமாகக் கருதி அது கூடாதென இக்குறள் செய்யப்பட்டுள்ளது. இப்போது நியாயமான ‘வியாபாரம்’ எனப்படுவது பொருட்களை இன்னாரது என்றுக் கொள்ளாமல், அனைத்தையும் தனதாகவே தராசில் சமமாகப் பார்க்க வேண்டிய அவசியம் விளங்கும்.

பண்ட மாற்று முறையில் வியாபாரி தனது பொருளுக்கு மாத்திரம் அல்ல பிறர் பொருளை வாங்கவும், விற்கவும் செய்வார். எனவே அவரது நடவடிக்’கை’ துலாக்கோல் போலவே செயல்பட வேண்டியுள்ளது. எடைக்கற்களும் வந்திராத காலமாக இருந்திருத்தல் வேண்டும். வள்ளுவர் காலத்தில் இலாபம், நட்டம் என்னும் வார்த்தைகளும் கிடையாது. எனவேதான் அவர் அவற்றைப் பெருக்கம், கேடு எனும் வார்த்தைகளால் குறள் 115ல் சொன்னார்.

பண வர்த்தகம், எடைக்கற்கள் என்பவையெல்லாம் பிறகு வந்தாலும் அடிப்படையில் கொள்முதல் செய்வதும், விற்பதும், தேக்குவதும், தர உயற்ச்சி செய்வதும், தயாரிப்பதும் எல்லாம் என்றைக்கும் வியாபரத்தில் உள்ள நடவடிக்கைகளே. இலாபம் என்பது வியாபாரத்தின் தொழில் சம்பந்தப்பட்ட பணிக்கும், காலத்திற்கும், உழைப்பிற்கும், தேக்கத்தின், உயர்ச்சி, போக்குவரத்து, மற்றும் இதரச் செலவுகளுக்கும், ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்பிற்கும், பண மதிப்பு விரையத்திற்கும் ஆன ஒரு பங்கீட்டு விலை ஈடே. அவை தவிர வேறு எதுவும் அநியாயமான இலாபம் கொள்ளும் செயலாகும். குறைந்த விலையில் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்று இலாபம் பெறுதலே வியாபாரம் என்னும் நிலையோடு, சமூகக் கட்டுப்பாடும், பணியும் அதில் இணைந்திருந்தால் வியாபாரம் எனப்படும் தொழிலும் சிறந்த நல் அறமாகும். சமூகம் இனிதே செயல்பட, நிதி நிலைமைச் சீராகச் செயல்பட நியாயமான வியாபாரம் அவசியமாகின்றது.

அதில் பொருளைத் தேக்குதல் (பதுக்கல்), கலப்படம் செய்வித்தல், போலிகளை உருவாக்குதல், அதிக இலாபத்திற்காக மறைவு விலைகளைக் கூட்டி நிர்ணயித்தல், பிறர் பொருள் எனில் அடிமட்ட விலைக்குக் கேட்டல், தமது பொருள் எனில் யானை விலை கூறுதல், ஆளுக்கொரு விலை நிர்ணையித்தல் என்பனவெல்லாம் நடுநிலை தவறிய, நாணயமற்ற, நியாயமற்ற வாணிபமாகும்.

ஆக ‘இலாபம்’ பெறும் வாணிபத்தில் நேர்மையும், நியாயமும், நாணயமும், ஒழுங்கும் அவசியமாகின்றது. அவை ஒவ்வொரு பொருளையும் தமதேபோல் பேணிக் காத்து, ஒழுங்கு, அழகு, ஒப்பனை, தர உயற்சி , மேம்படுத்தல் செய்து சந்தைப் படுத்துதல், உண்மையான நடுநிலை தவறாத வாணிபம் ஆகும். அவற்றிற்கான நியாயமான ஈட்டுத் தொகையை மாத்திரம் விற்பனை விலையில் சேர்த்து நியாயமான இலாபத்திற்கு விற்றல் நடுநிலை தவறாத வாணிபமாகும்.

பெரும்பாலும் ஒரு பொருளைத் தயாரிப்பவர்கள் அதை நேரடியாகச் சந்தைப் படுத்தும் போழ்து, பிற தயாரிப்பாளர்களின் பொருட்களுடன் வியாபராம் செய்வார்கள். அவ்வமயம் பிறர் பொருளை மட்டப்படுத்தி, தமது தயாரிப்பை உயர்த்திக் கூறுதல் வியாபாரத்தில் அன்றாடம் காணும் மனித இயல்பு. அதிலும் பிறர் பொருளைத் தமதாக எண்ணி, அவற்றின் சாதக, பாதகங்களை நடுநிலையாக ஆய்ந்து நுகர்வோருக்குச் சொல்லி, மேலும் அவருக்கு அனைத்துப் பொருட்களின் தன்மையையும் நியாயத்துடன் கூறிச் செய்தலே நடுநிலையான வாணிபம் ஆகும.

எனவே செய் தொழில் எத்திறத்ததாயினும் அதில் நடுநிலை வகிப்பதே அறம்.

குறிப்புரை :
நியாயம் என்பது நீதி மன்றத்தில் மட்டுமல்ல, அனைத்துத் தொழில்களிலும், அன்றாடப் பணிகளிலும் இருத்தல் வேண்டும்.

அருஞ்சொற் பொருள் :
வாணிகம் - வியாபாரம், இலாபம், ஊதியம், பலன், வேலை, தொழில், பணி, கடமை

ஒப்புரை :

திருமந்திரம்: 394
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே

திருமந்திரம்: 554
கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே

திருமந்திரம்: 976
நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 120

The fair business...




In Tamil

vANikam seyvArkku vANikam-pENip
piRavum thampOl seyin.

Meaning :
The virtuous business for the traders is to deal other's interests too as their own.

Explanation :

Consider and maintain others goods as their own is the virtuous business duty for the business people.

The next community which uses the weighing scales, the business people, should also maintain justice in conducting their day-to-day business upholding the righteousness always clarifies Valluvar here in this Kural. Invariably all the industries come under the head of business. Therefore upholding the justice is common to all the jobs and industries.

During the days of Valluvar the business was through the barter system. Therefore for trading in by taking more goods as they are from others, and giving out less of exchanging commodities for the sake of more profit should not be done is the purpose of this kural. Now one can easily understand the relevance of considering the others good as their own while weighing things for the barter.

In the barter system, business men not only exchange the commodities for their goods alone but also for others goods for buying and selling. Therefore their activities must be fair and unbent like the bar of a weighing scale. Those days of business may have been even before invention of weighing stones. During Valluvar period even the words of Profit and Loss would not have been there. That is why he uses the words as in Kural 15, "Perukkam" (increase, proliferation, prosperity etc) and "Kedu" (inadequacy, wrong, harm, damage, poverty, destitution, elision etc).

Though monetary trading, weighing stones, measurements could have been later developments in trading business, however, the basic trading and business have not changed as for as Buying, Selling, Stocking, Manufacturing, Packing and Value adding etc. Profit is the charge for the overheads for the services, time spent, labor, stocking, value addition, transportation and other expenses, research and development, inventions, the exchange rate variances, and the risk value for the monetary and economy variations as a percentage to the base the cost. Other than that whatever included in the price is considered as the act of unfair profit motto. Along with the principles of buying at the lower price and selling at the higher price and yielding the profit as the business, when social responsibilities and duties are included then only the business profession too becomes the good virtue. For proper functioning of the society and smooth run of economies, fair business is an absolute necessary.

In the business, illegal stocking (hoarding), adulteration, faking, inclusion of hidden costs to maximize the profit, if someone's product asking for the lower most price, if it is own product selling at the maximum price, selling at invariant prices to everyone and such all activities are partial and considered as unjust business.

Therefore in the business of profits too it becomes necessary that to conduct it with fairness, justice, honesty and discipline. In that to treat each and every product of them as their own with fairness in securing, modifying, upgrading, costing and marketing becomes good virtue of business. When priced with reasonable charges to compensate the overheads while selling becomes the fair business.

Generally the manufactures of one or fewer product when market it directly, combine it with other manufactures products in the business to sell. That time of sales it would be natural tendency for one to degrade the others product and to talk of high of their own creations. But even in such situations one should not degrade the others goods but should treat them as their own product, and consider fairly their pros and cons and explain the consumer with rational and factual details of all the products equally is the true and fair business.

Therefore whatever is one's business or the job, keeping up the justness in it is the true and good virtue.


Message :
The equity must be not only in the courts but also in all the industries and in all business what human do.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...