தகுதி என ஒன்று நன்றே - பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின். | |
|
பொழிப்புரை : |
[நடுநிலைமை ஆகிய] தகுதி எனப்படும் ஒன்று நல்லதே; - [விருப்பு, வெறுப்பற்றுப்] பகுத்தறிந்து பங்கீடு செய்யும் தன்மையில் ஒழுகப் பெறின். |
|
 | முற்றிலும் மாறுபட்ட புதிய கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன. |
|
விரிவுரை : |
நன்மை, தீமையைப் பகுத்தறிந்து விருப்பு வெறுப்பற்றுப் பங்கீடு செய்யும் தன்மையில் ஒழுகப் பெற்றால், தகுதி ஆகிய நடுநிலைமை எனப்படும் ஒன்று நன்றாகும்.
பங்கு வைப்பதற்கு, பாகப் பிரிவினை செய்வதற்குச் சான்றோருக்கு நன்மை, தீமைகளைக் கருத்தில் கொண்டு, பந்த பாசமின்றி நியாயத்துடன் சீர்தூர்க்கிப் பார்த்துச் செயல்படும் ஒழுக்கம் தேவை. அவ்வித நல் ஒழுக்கத்தை ஒழுகுபவரே ‘நடுநிலைமை’ எனும் தகுதி ஒன்றைப் பெற்றவராகக் கருதப் படுவர்.
தகுதி அற்றவர்களாக வாழுதல் சாதாரண வாழ்க்கை. தகுதி உடையோராய், நடுநிலை வழுவாத சான்றோராய்த் திகழுதலே ஒவ்வொரு மனிதனின் கடமையாக இருத்தல் வேண்டும். அதுவே ஒருவருக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகத்திலும் சிறப்புப் பெறுவதற்கான நல் வழி.
விருப்பு வெறுப்பற்றுப் பகுத்தறியத் தெரியாத நிலையில் நடுநிலைமை என்பது கிடையாது, அது நல்லதுவும் அல்ல. எனவே ஒன்றின் தன்மையின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து, சமூகப் பொறுப்புடனும், நேர்மையுடனும் பங்கீடு செய்வதற்கு ஒருவரின் நடுநிலைமை எனும் தகுதி பயன்படுமானால் அதுவே நல்லது. |
|
குறிப்புரை : |
அறிவுடன் கூடிய நடுநிலைமை எனும் தகுதி மனிதருக்கு நல் நிலைமை தரும். |
|
அருஞ்சொற் பொருள் : |
தகுதி - நடுநிலைமையாளர் எனும் சான்றோராகுவதற்கான அடிப்படைத் தகுதி. பகுதியான் - பகுத்தறிந்து பங்கீடு செய்யும் தன்மை |
|
ஒப்புரை : |
|
திருமந்திரம்: 523 நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும் முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.
திருமந்திரம்: 739 ஆகுஞ்f சனவேத சத்தியை அன்புற .(1). நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப் பல்கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே .(1). நீர்க்கொள நெல்லின்
திருமந்திரம்: 1558 ஒன்றது பேரூர் வழியா றதற்கு என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.
திருமந்திரம்: 1694 சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு ஓதிய நாளே உணர்வது தானென்று நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது ஆதியும் ஏதும் அறியகி லானே.
மாணிக்கவாசகர். திருவாசகம். 49.திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636 ... சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642
மாணிக்கவாசகர். திருவாசகம். 50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம். ... சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 645
கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 646 ...
ஔவையார். ஆத்திச்சூடி: 96. மொழிவ தறமொழி. 102. உத்தம னாயிரு. |
|
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...