Tuesday, October 6, 2009

அதிகாரம்: 11. செய்ந்நன்றி அறிதல்- முடிவுரை

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

முடிவுரை

Chapter : 11

Gratitude

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

101 பிரதி பலனன்றிச் செய்யும் முதல் உதவிக்கு பூமியும், வானமும் இணையாகாது.

Sky and earth cannot equalize the unreciprocated help offered.
102 உற்ற காலத்துச் செய்த உதவி உலகைக் காட்டிலும் மிகப் பெரிது.

Help rendered in the need of the hour is much greater than the world.
103 சுய இலாபத்தை எண்ணாது செய்யப்பட்ட நல் உதவி கடலினும் பெரிதே.

The help rendered without weighing the self benefit is vaster than sea.

104 உதவி சிறிதெனினும் அதை உணர்ந்தோர் மிகப் பெரிதென மதிப்பர்.

Though the help is small, that who realizes shall regard it as big.
105 உதவியின் பெருமை அளவு அதைச் சேர்பவரின் மேன்மையால் அறியப்படும்.

Measure of Help's renown is known by it's recipient's majesty.
106 நல்லோரையும், உதவி செய்தோரையும் மறக்கவோ, துறக்கவோ கூடாது.

Never forget nor forsake the friendships of the pure and the helped ones.
107 துன்பம் தீர்த்தவர் நட்பை நல்லோர் எக்காலத்திலும் போற்றுவர்.

Wise esteems forever the friendship of that which helped them in distress.
108 நன்றியை எப்போதும் மறக்கக்கூடாது; நன்றல்லதை அப்போதே மறக்க வேண்டும்.

Forget never the good; Forget immediately the bad.

109 நல்லதை நினைக்க அல்லாதது மறையும்.

Remembrance of the good causes the bad to fade away.
110 செய்த உதவிக்கு நன்றி மறந்து கொல்பவருக்கு உய்வே இல்லை.

That who kills the gratitude for the help received will never prosper.

குறிப்புரை

ஒருவர் பதிலிற்குச் செய்யாமல் செய்த ஆரம்ப நல் உதவி ஈடு இணையற்றது; உற்ற நேரத்தில் செய்த உதவியோ உலகையும் விஞ்சி நிற்பது; தன்னலமற்ற உதவியோ அளப்பதற்கரியது. உதவியை உணர்பவரே அது உண்மையில் சிறிதாயினும் அதைப் பெரிதாக மதிக்கும் பண்புமிக்கவராவர். ஆகவே தான் உதவியின் பெருமை அதை அடைபவரின் மேன்மையால் அறியப்படும்.

பெறப்பட்ட உதவியையோ, உதவி செய்தவரையோ, நல்லவரையோ, துன்பம் தீர்த்தவரையோ எக்காலத்தும் மறக்கவோ, துறக்கவோ செய்யாது எப்போதும் நினைந்து போற்றுதல் வேண்டும். நல்லதை நினைந்து, அல்லாதவற்றை அப்போதே மறக்கவும் உறுதி கொண்டு நல்லதையே நினைந்தால் அல்லாதவை தானாகவே மறைந்துவிடும். ஒருவர் செய்த நல் உதவியை மறந்து, கொல்லும் இழுக்கைச் செய்பவர் உய்யவே இயலாது.

Message

Unreciprocated help offered by one is inequitable; timely help done is incomparable; selfless help is immeasurable. Only who realizes the value of the help consider it as huge and precious though it may be trivial in reality. Hence the greatness of help is measured not by its actual size if any but by the recipient's merit.

One should never forget, ignore, abandon and deceive the help received or that who helped or that who wiped the distress or the goodies. Instead should appreciate and be thankful and show the gratitude to them. One should determine to think of good things alone and not the bad things and practice it such that to remember the good so that all the bad will automatically fade away. Those who forget the help and do the deadly harm to the helper will never prosper and never get any salvation forever.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...