|
| |
| |
பொழிப்புரை : | |
எவற்றை [அடக்கிக்] காக்காவிட்டாலும், நாவை [அடக்கிக்] காக்கவும்; [அவ்வாறு அதை அடக்கிக்] காக்காதுவிட்டால், சொல் குற்றத்தில் வயப்பட்டுச் சிறைக்காவல் தண்டனை பெறுவர். | |
| |
விரிவுரை : | |
அடக்கிக் காக்கவேண்டிய ஐம்புலன்களுள் எதை அடக்கிக் காக்காவிட்டாலும் நாவையாவது அவசியம் அடக்கிக் காக்கவும். அவ்வாறு காக்காது போய்விடின் சொற் குற்றம்பட்டுச் சிறைக் காவல்தண்டனை பெறுவர். ‘சோ’ காப்பர் என்பதற்கு அரணைக் காப்பர் என்பது சரியான பொருள். அதாவது நாவைக் காக்காது சொற்குற்றம் இழைத்தோர், தண்டனைக்குரியவராகிப் பிறகு அரணை அதாவது சிறையில் காப்பர் என்பது பொருள். நா அடக்கம் என்பது இங்கே உட்கொள்ளும் உணவுக்கான கட்டுப்பாடைப் பற்றியதல்ல நாவால் பேசும் பேச்சிற்குச் சொல்லப்பட்டது. வாய்க்கு வந்தபடி, நிதானமின்றி, எடுத்தேன் கவிழ்தேன் என்று எதையும் பேசிவிடுதல் கூடாது என்பது உட்பொருள். ஆணவச் சொற்களும், அகந்தைச் சொற்களும் எடுத்தெறிந்து பேசும் தன்மையயும், கேவலப் படுத்தும் தன்மையை வெளிப்படுத்தி இன்னலை விளைவிக்கும். ஒருவரை இழிவு படுத்துவதோ, நக்கல் செய்வதோ, புண்படுத்திப் பேசுவதோ, ஓரம் பேசுவதோ, வஞ்சகம் பேசுவதோ போன்ற சொற்களைப் பயன்படுத்தாது நாவை அடக்கி நல்லனவற்றை மட்டுமே அன்றில் பேசாதிருக்கவோ பழகுதல் வேண்டும். ஓட்ட வாயால் தனது நாட்டின் அல்லது தொழிலின், நிறுவனத்தின் ரகசியங்களைப் பேசுதல் போன்ற தேவையற்ற வரம்பற்ற பேச்சால் எதிரிக்கு அன்றில் போட்டியாளருக்கு உதவி அதன் பயனாய்ச் சிறை போலும் கடும் தண்டனை அனுபவிக்க வேண்டியும் வரலாம். எனவே நாவினைக் காக்க. எப்போதும் நிதானித்துச் சிந்தித்து அளவோடு தேவையானதை மட்டுமே பேசுக. வார்த்தைகளை அரு மருந்தே போலும், செலாவணியைப் போலும் எண்ணிச் செலவு செய்தல் வேண்டும். பேசாத பேச்சிற்கு நாம் எஜமானர்கள். பேசிய பேச்சு நமக்கு எஜமானர்கள். காரியவாதிகள் பெரும்பாலும் அதிகம் பேசுவதில்லை என்பதைக் கவனியுங்கள். எனவே தேவையான இடத்தில், தேவையான அளவில் மட்டுமே பேசும்பழக்கத்தையும், நாவை அடக்கி நல்லவற்றையும், பயனுள்ளவற்றை மட்டுமே பேசவும் பழகுவோமாக. | |
| |
குறிப்புரை : | |
குறைந்த பட்ச நாவடக்கத்தையாவது ஒருவர் மேற்கொள்ளத் தவறினால் சொற் குற்றத்தால் துன்புறுவர். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
யா - எவற்றையும், எதையும் நா - நாவினை சோ - அரண், கோட்டை | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1697 சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச் சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. திருமந்திரம்: 1723 அகலிட மாய்அறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே பகலிட மாம்முனம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. திருமந்திரம்: 1729 கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. திருமந்திரம்: 1735 நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு நடுவு படிகநற் குங்குமவன்னம் அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. திருமந்திரம்: 1736 அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. திருமந்திரம்: 1740 இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. திருமந்திரம்: 1748 உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. திருமந்திரம்: 1767 ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. திருமந்திரம்: 1768 சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபதம் தோயாத தூவொளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. திருமந்திரம்: 2091 ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. திருமந்திரம்: 2094 நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர் நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும் துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில் அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. திருமந்திரம்: 2014 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. இடைக்காட்டுச் சித்தர் பாடல்: மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே! முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக் கோனே! (13) சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே! யாவுஞ் சித்தியென்றே நினையேடா தாண்டவக் கோனே! (14) ஓசையுள் அடங்கு முன்னம் தாண்டவக் கோனே! மூல ஓங்காரங் கண்டறி நீ தாண்டவக் கோனே! (16) பத்திரகிரியார். மெய்ஞானப் புலம்பல்: ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன் காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்? (106) மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் (107) நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம் தான் என்ரு நீ இருந்ததனை அறிவது எக்காலம்? (118) சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ் வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? (137) பொன்னில் பல விதமாம் பூஷணம் உண்டானதுபோல் உன்னில் பிறந்து உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் (169) மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல் என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் (176) தான் என்ற ஆணவமும் தத்துஅமும் கெட்டொழிந்தே ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம்? (219) நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவி ழியால் அறிந்து தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்? (220) தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில் ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்? (221) சிவவாக்கியர்: நீங்குமைம் புலன்களும் நிறைந்த வல் வினைகளும் ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும் ஓங்காரத்தின் உள்ளிருந்த ஒன்பதொழிந் தொன்றிலத் தூங்கஈசர் சொற்படி துணிண்டிருக்க சுத்தமே. (452) ஔவையார். ஆத்திச்சூடி: 75. நொய்ய உரையேல். ஔவையார். கொன்றைவேந்தன்: 80. மோனம் என்பது ஞான வரம்பு ஔவையார். மூதுரை: சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று) அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக் கால். 18 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Control the tongue at the least in senses; otherwise one shall end up in distress for offensive utterances. | |
| |
Explanation : | |
Though not controlling any one of the senses which have got to be controlled, control at the least the tongue. If it is not controlled, by offensive utterances one has to undergo and serve in prison. The correct meaning of word 'so' in Tamil is guard in protection. That means when one not controlling the tongue abuses or uses impropriety words, will get punished and has to serve in prison. Controlling the tongue here means not of controlling the intake of food but is about its delivery. Therefore here the implied meaning is that not to talk loosely or improperly or recklessly. The words spoken in harsh, arrogance, haughtiness, insolent and mockery will lead to troubles. One should learn and practice to control the tongue not to ridicule, mock, hurt, corner or wily at others but to speak only goodness; or not to speak at all. By loose talk, one may speak unnecessarily and uncontrollably on the secrets of the country or business or organization helping the opponent and thus end up in punishments such as serving in jail. Therefore control the tongue. Always think in composure and speak only the necessary within the limits. Spend the words cautiously like a medicine or the currency. We are the bosses for the unspoken words; spoken words are the bosses for us. Note that all successful people speak only less. Therefore let us learn to control our tongue and speak only the good and useful; and learn to speak only the necessary and befitting at the right place. | |
| |
Message : | |
Failing to control the tongue at the least will suffer for uttering offensive words. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...