|
| |
| |
பொழிப்புரை : | |
தீயினாற் சுட்ட புண் [வெளியே வடுத் தோன்றினும்] உள்ளே ஆறிவிடும்; [வெளியில் வடுவை உண்டாக்காவிடினும்] உள்ளே ஆறாதே நாவினால் சுட்ட வடு. | |
| |
விரிவுரை : | |
தீயினால் உண்டாகிய புண் வெளியில் வடுவைத் தோற்றுவித்தாலும் உள்ளே ஆறிவிடும் தன்மையானது. ஆனால் உடலின் வெளியில் எத்தகைய வடுவையும் உண்டாக்காத நாவினால் சுட்ட வடு, உள்ளே ஆறவே ஆறாது. நெருப்பால் சுட்டுக் குணப்படுத்தும் நோய்களும் இருத்தலால் அதை நன்மைக்குப் பயன் படுத்திய போழ்தினில் தழும்பை உண்டாக்கிய போழ்திலும் உள்ளே குணப்படுத்தி விடும் என்பதை ஒப்பீடு செய்கின்றார் வள்ளுவர். காயத்தை உண்டாக்கிக் காலத்தில் குணமாகிவிடும் தீயினால் சுடுவதைக் காட்டிலும் தீதானது எக்காலத்திலும் ஆறாத காயத்தை உண்டாக்கிவிடும் நாவினால் சுடுவது. நாவினால் சுடுவது மிக எளிது ஆனால் அதன் தீதோ குணப்படுத்த இயலாக் கொடியது. உடல் வலியைக் காட்டிலும், ஆறாத உள வலியைத் தரத்தக்கது. ஆதலினால் நாவை அடக்கி அத்தகைய தீமையைச் செய்யத் தகாது என்பதே இங்குள்ள உட்பொருள். எனவே என்றைக்கும் அழியாத உள வலியைத் தரும் நாவால் சுடுவதான பழித்தல், திட்டுதல், வைதல், ஏளனம் செய்தல், வசை பாடுதல், இழியன பகர்தல் என்பவற்றை யார்மேலும் பயன் படுத்தாத நல்லறத்தை ஒழுகுவோமாக. நா அடக்கம் நல்லதை மட்டுமே பேசும். எனவே தீயினால் சுடவா என்று கேட்கவோ, செய்யவோ முயற்சிக்காதீர்கள். மாறாக எதிரியை, நமக்குத் தீமை செய்தவரை மன்னிக்கவும், மறக்கவும் அவரிடமும் நாவடக்கி இனிய சொல் பேசவும் முயற்சிப்போமாக. | |
| |
குறிப்புரை : | |
தீரா வலியை, ஆறா உளக் காயத்தை நா அடக்கமற்ற சொல் ஏற்படுத்திவிடும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
வடு - தழும்பு | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1817 உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. திருமந்திரம்: 1836 பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்குஅரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. திருமந்திரம்: 1837 ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன் மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. திருமந்திரம்: 1862 ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. திருமந்திரம்: 1864 அழிதகவு இல்லா அரன்அடி யாரைத் தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும் பழுது படாவண்ணம் பண்பனை நாடித் தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. திருமந்திரம்: 1865 பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப் புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும் முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே திருமந்திரம்: 1867 தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம் ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும் ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. திருமந்திரம்: 1874 அகம்படி கின்றநம் ஐயனை ஒரும் அகம்படி கண்டவர் அல்லலில் சேரார் அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. திருமந்திரம்: 1877 துணிந்தார் அகம்படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. திருமந்திரம்: 2130 மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. திருமந்திரம்: 2194 உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம் அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக் கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. திருமந்திரம்: 2239 ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும் மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. இடைக்காட்டுச் சித்தர் பாடல்: அறிவொடு கிளத்தல்: கட்புலனுக்கு எவ்வளவுங் காணாது இருந்தெங்கும் உட்புலனாய் நின்றவொன்றை உய்த்தறிநீ புல்லறிவே! (68) விழித்திலங்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும் செழித்திலங்கும் ஆன்மாவை தேர்ந்தறிநீ புல்லறிவே (69) ஔவையார். ஆத்திச்சூடி: 93. மூர்க்கரோடு இணங்கேல். ஔவையார். கொன்றைவேந்தன்: 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Fire-burnt sore might get cured internally; but the scar of tongue-burnt never heals. | |
| |
Explanation : | |
Though the fire burnt sore might leave scar out but gets healed internally. But the tongue-burnt sore may not create any scar at all but never gets healed internally. Since there are healing methods by burns for few illnesses, they might leave visible scars but heals internally, therefore Valluvar uses them to compare. Burning through tongue which never gets cured anytime is worse than that of burning through fire which heals over period of time. It is very easy to burn through tongue but its harsh impact is incurable cruel one. It induces unbearable and incurable pain to the mind than the bodily pains. Therefore one should control the tongue and not fire such evil and a cruel word is the implicit meaning here. Therefore let us practice the good virtue by not using such tongue burning words of abuses, imprecation, mockery, slander, blame, degrade and improper on any one which otherwise would cause incurable and unbearable scars on them internally. Controlled tongue will speak only goodness. Therefore please don't ever ask or attempt whether to burn through the fire. Instead learn to forgive and forget the opponent who has done ill to you and try use only pleasant words even to them. | |
| |
Message : | |
Abuse of uncontrolled tongue induces incurable internal pain and scar. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...