Sunday, October 4, 2009

திருக்குறள்: 109 (அல்லதை மறக்க நல்லதை நினை...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 109
Chapter : 11

Gratitude

Thirukkural

: 109

அல்லதை மறக்க நல்லதை நினை...

கொன்றன்ன இன்னா செயினும், அவர் செய்த
ஒன்று நன்று உள்ள, கெடும்.
பொழிப்புரை :
[ஒருவர்] கொல்வதைப் போன்ற கெடுதலைச் செயினும், அவர் [முன்] செய்த ஒரு நன்மையை நினைக்க அக் கெடுதல் கெட்டு [நீங்கி]விடும்.
விரிவுரை :
ஒருவர் கொல்வதைப் போலும் கெடுதலை, துன்பத்தைச் செய்தாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையினை நினைத்த மாத்திரத்தில் அக் கெடுதல் கெட்டு மறக்கப்பட்டுவிடும்.

ஆக ஒருவர் செய்த நன்மையை நினைக்கவே அவர் செய்த கொடுங் கெடுதல் தானாகவே மறக்கப்படும் திறம் கூறப்பட்டது. ஒன்றை நினைக்க நினைக்க மற்றவை தானகவே மறையும் என்பது இயற்கை எனினும், அதில் நல்லதை நினைக்க அல்லாதவை அது கொலை போன்ற கொடூர பாதகமாயினும் மறக்கும் தன்மையை நல்குவதை வள்ளுவர் உணர்த்துகின்றார்.

அதாவது ஒருவர் செய்த உதவியை மறவாது இருத்தலின் உச்சம், அவர் பிறகு செய்யும் கொலைபோன்ற பாதகத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ள வழிவகுக்குமாம். உண்மைதான், அன்பு இதயங்களுக்கும், நன்றி உள்ள மனங்களும் பிறர் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை அடைந்து விடுகின்றன. அவர் கொலையே செய்திருப்பினும் கூட ,அவர் செய்த முன் நன்மையால் அவரை மன்னிக்கும் மனதைத் தந்து விடுகின்றது.

கொலையே அல்ல, கொலை போலும் துன்பம் என்பது ஒரு சிறு நுணுக்கம். அதாவது அத்தகைய கொடிய துன்பத்தையும் அலசி, ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து மறக்கவும், மன்னிக்கவும் ஒரு மனம் வேண்டுமே அதை அவர் முன்னர் செய்த நன்மை வழங்கி விடுகின்றது. பாவம், நல்ல மனிதர் இவர் ஏன் இதைச் செய்தார் என்று எண்ணவும், அவர் அதைச் செய்ததற்கான நற் காரணத்தைக் கற்பிக்கவும், அவரது தீச்செய்கையை முழுவதுமாக மன்னிக்கவும், மறக்கவும் நன்றி உள்ள உள்ளம் செய்யும்.

இதையே
கொடிது, கொடிது
உயிர்க்கொலை கொடிது
அதனினும் கொடிது
செய்நன்றி மறத்தல்
அதனினும் கொடிது
செய்நன்றி கொல்லல்

என்றும் சொல்லலாம்.

கொலை போலும் தவறுக்குத் தண்டனை என்ன என்பதையோ, நியாயப் படுத்தலோ இங்கே சொல்லப்படவில்லை. மாறாக அத்தகையக் கொடுமையையும் மன்னிக்கும் மனத்திற்கு அவர் முன் செய்த நன்மையை நினைக்க கெடுதலும் கெட்டொழிந்து அகன்று மறக்கப்படும் என்பதே வலியுறுத்தப் பட்டுள்ளது. இது உள நலன் காப்பீடு செய்ய உகந்த ஓர் அடிப்படை உத்தி.
குறிப்புரை :
நல்லதை நினைக்க அல்லாதது மறையும்.
அருஞ்சொற் பொருள் :
உள்ள - இருக்க
உள்ளு - நினைக்க
ஒப்புரை :
ஔவையார். மூதுரை:
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

***

In English: (Thirukkural: 109. Remember the Good to forget the bad...)

konRanna innA seyinum, avar seytha
onRu nanRu uLLa, kedum.
Meaning :
Though a deadly harm is induced by one, is dismissed just by the remembrance of his single goodness done prior.
Explanation :

Though one makes a deadly harm, is dismissed and forgotten simply by just remembering one of his goodness done earlier.

Therefore, the remembrance of one's one of the goodness causes automatically to forget his deadly harm is explained hereby. Though it is natural that over a period of time repeated recollection of a thing withers the other (Time heals the wounds), Valluvar explains the process and significance of remembrance of the good to forget over the bad however deadly though it is.

It is the height of remembrance of one's help that which makes to bear with even the deadly injuries one may cause later. It is true that the heart with Love, compassion and thankfulness emerges with forbearance for others mistakes and harms. Even when others make deadly harm or killing like act, because of their prior goodness makes one to have a kind heart to forgive the same.

Not the killing indeed here but a killing like act per se with a minute difference in it. It is to emphasize that such a deadly harm to get weighed and analyzed, to forgive and forgotten there must be a heart which is provided by the goodness done by the causer earlier. It, the thankful heart, makes one to think "Oh, he is a nice man, why did he do this" and also tries to reason it out, justify, forgive and forget.

The same thing can be said also as “Bad is to kill, still worse is to forget the help and still worst is to kill the help”.

There is no justification done here for a murder or killing nor discussed the deserving punishments. On the other hand, it is emphasized that to get the forgiving heart to forget such deadly harms is to remember the goodness carried out by the one in prior. This is a basic technique to keep up and protect one’s own mental health.

Message :
Remembrance of the good causes the bad to fade away.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...