|
| |
பொழிப்புரை : | |
கெடுவது தானே என்பதை அறிக - தன் நெஞ்சம் நடுவு [நிலை] ஒழித்து அல்லவை செய்தால். | |
விரிவுரை : | |
தனது நெஞ்சம் நடுவுநிலை விட்டுவிட்டு அல்லது செய்தால், கெடுவது தானே தான் என்பதை அறிக. நடுவுநிலை தவறி ஒரு நியாயத்தை வழங்கவோ அன்றி ஒரு காரியத்தைச் செய்யவோ முற்படும் முன்னர் நெஞ்சமே உணர் ‘கெட்டுப் போகப்போவது தானே’ என்பதை. நியாயத்தைத் திரித்து, நேர்மையை எதிர்த்து வழங்கும் நீதியில் துன்புறப் போவது வாதியோ, பிரதிவாதியோ, நியாயத்தை இழப்பவரோ அல்ல, முதலில் தானே என்பதை நடுவுநிலைமையை நெஞ்சறியத் தவறுவோர் முதலில் உணரட்டும். எனவே அவ்விதமாக அறிந்து நீதி வழுவாது நிற்றல் வேண்டும் என்பது பொருள். மனச்சாட்சியை மீறி ஒருவர் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ள முன் வருவாரா? இக வாழ்வில் அரசியல் வாதிகளுக்கும், அராஜக நபர்களுக்கும் கூலிக்கு விலைபோகின்றவர்களும், நியாயத்தை விற்பவர்களும், மறைப்பவர்களும், பொன்னுக்கும், பொருளுக்கும் நியாயத்தை அடகு வைப்போரும், பொய் சாட்ச்சி சொல்லுபவரும், பித்தலாட்டக் காரர்களும், அராஜகக் கைக் கூலிகளும், அடாவடிக் காரர்களும், அநியாய விலை பேசும் வியாபாரிகளும், நேர்மை தவறும் அரசியல் வாதிகளும், நீதிபதிகளும், ஆசிரியர்களும், ஏனைய அரசாங்க ஊழியர்களும், துரோகமிழைப்போரும், பொய்யரும், கள்வரும் தாங்கள் கெடுவதற்கான செயலைத் தாங்களே தோற்றுவித்துக் கொள்கின்றாகள் என்பதை முதலில் அறியட்டும். | |
குறிப்புரை : | |
நடுநிலை அழித்து அல்லாததைச் செய்தல் தனக்குத் தானே கெடுவதற்கான முதல் படி. | |
அருஞ்சொற் பொருள் : | |
இல் - இடம், வீடு கோடாமை - சாயாமை, வளையாமை, தவறாமை, கொள்ளாமை | |
ஒப்புரை : | |
| |
கணியன் பூங்குன்றனார்: நன்றும் தீதும் பிறர்தர வாரா திருமந்திரம்: 269. செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. திருமந்திரம்: 946. பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப் பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி பரமாய சியநம வாம்பரத்து ஓதில் பரமாய வாசி மயநமாய் நின்றே. திருமந்திரம்: 1459 பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே. ஔவையார். ஆத்திச்சூடி: 38. கெடுப்ப தொழி. 46. சீர்மை மறவேல். 99. வாதுமுற் கூறேல். ஔவையார். கொன்றைவேந்தன்: 31. சூதும் வாதும் வேதனை செய்யும் 54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை 68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர் | |
*** |
|
| |
Meaning : | |
One must discern that the ruin is only the self when heartily doing a thing unjust. | |
Explanation : | |
When the heart is doing an unjust, one must remember that the downfall and the evil are only to the self. | |
Message : | |
Doing unjust by eliminating the just is the first step to get self destruction. | |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...