Thursday, October 15, 2009

திருக்குறள்: 118 (சமநிலைக் கருவி...)

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 118

சமநிலைக் கருவி...

In English

சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்
கோடாமை-சான்றோர்க்கு அணி.

பொழிப்புரை :
சமன் செய்து எடைத் தராசைத் தூக்கி நிற்கும் துலாக் கோல்போல், யாதொரு பக்கத்தின் பாலும் சாயாது நிற்றல் சான்றோருக்கு அணியாகும்.

விரிவுரை :
எப்போதும் சமநிலையில் இருந்து எடைத் தராசைத் தூக்கி நிற்கும் துலாக்கோல் போல், எத்தப் பக்கத்தின் பாலும் சாயாமை சான்றோருக்கு அழகாகும்.

சமநிலையிலுள்ள துலாக்கோல் தனது கடமையை யாதொரு பக்கத்தின்பாலும் சாய்ந்து, சார்பு காட்டி செயல் படுத்துவதில்லை. அஃது உயிரற்ற, உணர்ச்சிகளற்ற இயந்திரம். அதைப்போலவே சான்றோரும் நடுநிலைக் கருவியாக இருத்தல் வேண்டும். அவர் யாதொரு பக்கமும் உணர்வின் பால், அல்லது பிரியத்தின் பால், அல்லது நன்றி, அன்புக் காரணங்களால் அன்றில் வேறு யாதொரு காரணத்தினாலும் சார்பு நிலை கொள்ளாது நடு நிலையைப் போற்ற வேண்டுமென்பதே ‘நீதிக்கு’ உரிய இலக்கணமாகும்.

சாதக, பாதக உணர்ச்சி வசப்படாது, வேண்டியவர் வேண்டாதவர் எனும் பேதங்கள் காட்டாது, நல்லவை, கெட்டவை அறிந்து, கோப தாபமின்றிக் காட்டும் நடுநிலைமையையே போற்றப்படும். அஃதே சான்றோருக்கு அணியாக நிற்கும்.

குறிப்புரை :
நடுநிலையில் துலாக்கோல்போல் நிற்பதே சான்றோருக்கு அழகு.

அருஞ்சொற் பொருள் :
சீர் - மாறாமை, நிலைத்திருத்தல், அளவு
கோடாமை - சாயாமை, வளையாமை, தவறாமை, கொள்ளாமை

ஒப்புரை :

திருமந்திரம்: 337
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

திருமந்திரம்: 955.
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்திதந் தானே.

திருமந்திரம்: 1209.
சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞானம் உருவநின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே. 35

ஔவையார். ஆத்திச்சூடி:
72. நேர்பட வொழுகு.

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 118

The instrument of justice...




In Tamil

saman seythu sIr thUkkum kOlpOl amainthu, orupAl
kOdAmai-sAnROrkku aNi.

Meaning :
Like the stand of a weighing scale without bending any side showing impartiality is the ornament for the wise.

Explanation :

Similar to the stand of a weighing scale which always shows the equity unbent, the justness shown with no partiality by the wise stands as the ornament to themselves.

The bar on the weighing scale with parity never fails in its duty by taking sides or any support in its execution. That is an instrument which has no life and emotions. Likewise the wise also should act as instrument for the justice. They should not take any sides in their stand by emotions of love or gratitude or affection or for any reasons. And that is the grammar of the ‘Justice’.

With no emotions for pros and cons, and no difference for the dear or the hate, understanding the good and bad, with no anger or kindness, shown justness will be appreciated. That would stand as the ornament for the wise.


Message :
Showing unbiased impartiality like a weighing scale is the pride for the wise.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...