Friday, October 2, 2009

திருக்குறள்: 107 (எக்காலத்தும் போற்றப்படும் உதவி...)



அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 107
Chapter : 11

Gratitude

Thirukkural

: 107

எக்காலத்தும் போற்றப்படும் உதவி...

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர்-தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

பொழிப்புரை :
[நல்லோர்] ஏழேழ் பிறவிக்கும் நினைத்து மதிப்பர் - தமது துன்பத்தைத் துடைத்தவரின் நட்பை.

விரிவுரை :
தமது துன்பத்தைப் போக்கியவரின் நட்பைச் சான்றோர் ஏழேழ் பிறவிக்கும் மறவாது நினைத்துப் போற்றுவர்.

செய் நன்றி மறவாத சான்றோர், தமது துன்பம் நீக்கியவரின் நட்பை இப்பிறவி மட்டுமல்லாது ஏழேழ் பிறவிக்கும் நினைந்து போற்றுவர். துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பை என்றென்றும் மறக்க ஒண்ணாது என்பது உட்பொருள்.

குறிப்புரை :
துன்பம் தீர்த்தவர் நட்பை நல்லோர் எக்காலத்திலும் போற்றுவர்.

அருஞ்சொற் பொருள் :
உள்ளுவர் - எண்ணுவர், நினைப்பர், மதிப்பர்
விழுமம் - துன்பம்

ஒப்புரை :

ஔவையார். மூதுரை:
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 20

ஔவையார். நல்வழி:
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

***

In English: (Thirukkural: 107. Forever praised gratitude...)

ezhumai ezhu piRappum uLLuvar-thamkaN
vizhumam thudaiththavar natpu.

Meaning :
The Wise esteems through sevenfold births, the friendship of those who wiped their tears of distress.

Explanation :

The impertinent esteems throughout for sevenfold of births, the friendship of those who wiped their tears of affliction.

The wise who remembers the helps received, regards high of the friendship of that who wiped out their adversity not only during this birth but also the sevenfold of next births. The friendship of those who wiped out the tears of hardship cannot be forgotten is the message imbibed here.


Message :
Wise esteems forever the friendship of that which helped them in distress.

***

2 comments:

Nallathambi said...

Ayya,

Miha miha rumai.

pala maathangalaaha nan thaediyathai thanthu vitteerhaal.

nandrihal kodi.
Nallathambi

Uthamaputhra Purushotham said...

நன்றிகள் பல நல்லதம்பி அவர்களே.

உங்களின் வருகையும், இணைப்பும், பாராட்டும் ஊக்கப் படுத்துகின்றன.

வள்ளுவத்தில் அனைத்தும் இருக்கின்றதாகவே நானும் நம்புகின்றேன். தேடல்களைத் தொடருவோம்.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...