Saturday, October 10, 2009

திருக்குறள்: 113 (அநியாயத்தை எப்போதும் விட்டுவிடு...)


அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 113

அநியாயத்தை எப்போதும் விட்டுவிடு...

In English

நன்றே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்.

பொழிப்புரை :
[உடனடியாக] நன்றே தரினும், நடுவு [நிலைமை] தவறி ஆகும் ஆக்கத்தை அவ்வமயமே தொலைத்து விடுதல் [நன்று].

விரிவுரை :
நடுவு நிலமை பிறழ்ந்து செய்யும் ஆக்கம் உடனடியாக நன்றே தருவதாய் இருப்பினும் கூட அதை அப்பொழுதே விட்டொழித்து விடுதலே உண்மையில் நன்று.

ஏனென்றால் நன்றே தருவது போலும் போலித் தோற்றத்தை உண்டாக்கி நிற்கும் நடுநிலைப் பிறழ்வு பிறகு உண்மைக் குணமாகிய தீமையையே நல்கும் என்பது கூறாப் பொருள்.

நியாயமின்றி, நேர்வழி அற்றுச் சம்பாதிப்பது சுலபமாகவும், இலாபத்தையும் இன்பத்தையும் தருவது போலும் போலியான மாயத் தோற்றத்தைத் தரும். ஆயின் அவை எல்லாம் இறுதியில் கெடுதலையே நல்கும் என்பது அறத்தின் அடிப்படை விதி.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்! நாம் ஆற்றிய நல்வினை, தீவினைச் சம்பாத்தியங்கள் நிச்சயம் நமது வாழ்க்கையை, குடும்ப அங்கத்தினர்களைப் பாதிக்கின்றது.

கடவுள் நம்பிக்கையும், அறத்தின் பயனும் இதற்கே நம் மனதை வழிநடத்தும் சக்திகளாக இருப்பின் இத்தகைய மயக்கங்களுக்கும், போலிச் சுகங்களுக்கும், கானல் நீர் வருமானங்களுக்கும், கறை படிந்த நிதியத்திற்கும் கை நீட்டி அடிமையாகாது ஒழுக்கத்தின் பால் நின்று, உயர் அறத்தின் உண்மை நலன்களை மட்டும் ஈட்டி நிற்போம். அவை உடனடியாக பலனைத் தராவிட்டாலும் எக்காலத்திலும் கெடுதலைக் கொடாது நின்று நன்மை பயக்கும்.

நியாயங்களும், நேர்மைகளும் நிம்மதியை நிச்சயம் தரும். கவலையற்ற வாழ்க்கை ஆரோக்கியத்தைத் தரும். அது தொடர்ந்து நேர்மறையான எண்ணத்தை நல்கும். அதன்பயனாய் நல் ஆக்கங்களைத் தரும். நல் எண்ணங்கள் என்றும் நன்மையையே தரும். எனவே நியாயமான பொருள் ஈட்டலால் உள நலத்தோடும், சீரும் சிறப்பும் பொங்கி வரும் இல்லறத்தோடும், துன்பம் இல்லா வாழ்வோடும், மங்காப் புகழோடும் பயன் பெறுவோம், உயர்வடைவோம்.

ஆகவே மறந்தும் அநியாயத்தை ஆதரிப்பதோ, கடைப்பிடிப்பதோ கூடாது.

குறிப்புரை :
நல்லதைச் செய்வதைப் போல் தோன்றும் அநியாயத்தையும் தவிர்த்து ஒழுகுதலே எப்போதும் நன்று.

அருஞ்சொற் பொருள் :
இகந்து - பழித்து, தவறுதல், கடத்தல்
ஒழி - தவிர், அழி, விடு, தொலை

ஒப்புரை :

சிலப்பதிகாரம்: 55
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
...

திருமந்திரம்: 323
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

திருமந்திரம்: 450
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

திருமந்திரம்: 1630
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

ஔவையார். ஆத்திச்சூடி:
27. வஞ்சகம் பேசேல்.
38. கெடுப்ப தொழி.
41. கொள்ளை விரும்பேல்.
45. சித்திரம் பேசேல்.
48. சூது விரும்பேல்.

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 113

Abandon the injustice always...

nanRE tharinum, naduvu ikanthu Am Akkaththai
anRE ozhiyavidal.

Meaning :
Although appears to yield goodness, it is better to get rid of the act of injustice instantly.

Explanation :

Though appears to yield the good immediately, getting rid of the unjust act instantly is truly better.

Because the unjust act gives false impression of goodness but it will ultimately show up its true color of sorry and end up in only the badness is the implied meaning here.

Unfair and improper earnings may look easy and yield instance benefits but in fact only gives a deceptive impression. But all such at the end will result only in wrong and trouble is the basic principle of virtue.

Previous actions determine the fate of life. The actions of good and bad and the earnings what we make have certainly impact on our life, family and its members.

Therefore the Beliefs in God, the benefits of virtues when become the guidance force of our life, this kind of bewilderment, delusion, becoming slave to the deceptive income and stained wealth will not happen but makes us to stand on the righteous paths and to earn only the welfare of virtues. Though they may not yield the benefits immediately will give only the good and not the bad for ever.

The fairness and the uprightness certainly bestow peace. No worries in life give good health. That continues to yield positive thinking. Because of that good creations emerge. Good thinking always yields goodness. Therefore by the fair earnings let us benefit the mental health, happy life, excellence, undiminished fame and eminence.

Therefore let us not support or adopt the injustice even by mistake.


Message :
It is always better to abolish the act of injustice though it seems to do only good.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...