அதிகாரம்: 5. இல்வாழ்க்கை |
இல்லாளோடு கூடி வாழும் இல்லற வாழ்க்கையே, அறங்களின் முதல் அறமாகவும், நல் அறமாகவும், மேன்மை யானதாகவும் போற்றப் படுகின்றது. சென்ற அதிகாரத்தில் அறன் வலியுறுத்திய வள்ளுவர், அதன் தொடர்ச்சியாக இல்லற அதிகாரத்தை இங்கே வைத்ததிலிருந்து அவர் கொடுக்க விரும்பும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இல்லறமானது மானிட வளர்ச்சிக்கான இயற்கைத் தேவை. மானிடர் இன்றி மானுடம் இல்லை. எனவே இல்லறமே முதன்மை பெறுகின்றது.
ஒப்புரை (Reference)
ஔவையார். கொன்றைவேந்தன்: 3
இல்லறமல்லது நல்லற மன்று.
***
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...