அதிகாரம் | : | 4 | அறன் வலியுறுத்தல் | முடிவுரை |
அத்தியாயத்தில் பெற்றவை:
31. அறமே முக்தியையும், செல்வத்தையும் ஒருங்கே தரவல்ல ஒழுங்கு.
32. அறத்தை ஒழுகினால் அதுவே மேன்மை; ஒழுகாவிடின் அதுவே பெருங் கேடு.
33. அற வழிச் செயல்பாடு என்பதே அடிப்படையில் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும். Good deeds must be by default.
34. மாசிலா மனம் கொள்வதே முழுமையான அறமாகும்.
35. நல்ல அறத்திற்குப் பொறாமை, ஆசை, சினம், தீய சொல் ஆகிய நான்கும் ஒழிக்கப்பட வேண்டியவை.
36. இப்பொழுதே நல் அறத்தை ஒழுகுதல் நன்று; அவையே இறப்பிற்குப் பின்னும் மறையாது கூட வரும் துணையாகும்.
37. நல் அறம் ஒழுகினால் நல்ல வாழ்க்கை அமையும்; சுகப்படுவார்கள்; மேன்மை அடைவர். ஒழுகாதோர் துக்கப்படுவார்கள், கீழ்நிலை அடைவர்.
38. ஒரு நாளைக் கூட வீணடிக்காது நல்லறக் காரியத்தை ஆற்றினால்நீண்ட வாழ்வு கிட்டும்; முக்தி கிட்டும்.
39. அற வழி ஒன்றே உண்மை இன்பத்தையும் புகழையும் ஒருங்கே தரத் தக்கது.
40. ஒருவன் எப்போதும் ஆராய்ந்து தீ வினைகளை விடுத்து, நல்வினைகளையே செய்ய வேண்டும்.
குறிப்புரை (Message) :
அறத்தை மட்டுமே எப்போதும் விட்டு விடாது ஒழுகு. மாசிலா மனம் கொள். பொறாமை, ஆசை, சினம், தீய சொல் தவிர். சிந்தித்து ஆய்ந்து நல்வினைகளை மட்டுமே செய். சுகமான வாழ்வும், இறவாப் புகழும், மேன்மையும் அடைவாய்.
***
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...