Tuesday, July 7, 2009

திருக்குறள்: 33

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

33


ஒல்லும் வகையான், அறவினை, ஓவாதே,
செல்லும்வாய் எல்லாம் செயல்.


பொழிப்புரை (Meaning) :
இயன்ற வகைகளில், அறவினையைத், தவிர்க்காதே, அவை செயல்படக்கூடிய இடங்களில் எல்லாம் செயல் படுத்தப்பட வேண்டும்.


விரிவுரை (Explanation) :
அறச் செயல்களை இயன்ற வகைகளில், இயன்ற இடங்களில், இடைவிடாது செயல் படுத்துதல் வேண்டும்.

அறம் என்பதைத் தவிர்க்காமல் இடம், பொருள், ஏவல் அறிந்து பயன் படுத்த வேண்டும் என்பது மறை பொருள். அதாவது எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் அற வழி உகந்ததாக இருக்காமல் போகக் கூடிய தருணங்கள் தோன்றினாலும், முடிந்தவரையில் அற வழியிலே நின்று தவிர்க்காது செயலாற்ற வேண்டும் என்பது கருத்து.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், Perform good deeds by default whenever possible, wherever applicable without any hesitation.


குறிப்புரை (Message) :
அற வழிச் செயல்பாடு என்பதே அடிப்படையில் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும். Good deeds must be by default.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஒல்லுதல் - இயலுதல், இணங்குதல், நிறைவேற்றல், பொருந்தல், அடைதல்
ஓவா - ஒழியாது, தள்ளா, தவிர்க்காது, நீங்கா.


ஒப்புரை (References) :

ஔவையார். மூதுரை: 28
சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்துங்
கந்தக் குறைபடா தாதலால் - தந்தந்
தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று.

ஔவையார். மூதுரை: 30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்க்குமாங் கண்டீர் மரம்.


***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...