Monday, November 2, 2009

திருக்குறள்:131 (உயிரினும் உயர்ந்தது ஒழுக்கம்...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 131

உயிரினும் உயர்ந்தது ஒழுக்கம்...

In English

ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.

பொழிப்புரை :
ஒழுக்கம் [வாழ்க்கை] மேன்மையைத் தருதலான், அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணி ஒழுகப்படும்.

விரிவுரை :
ஒழுக்கம் மேன்மை உயர்வினைத் தருதலான், அவ்வொழுக்கம் உயிரினும் முக்கியமானதாய்ப் பேணப்படும்.

வாழுவதற்கு உயிர் இன்றியமையாதது. ஆயின் வெறும் உயிரோடு, பிறந்தோம் இறந்தோமென மனிதர்கள் இருந்து விட்டால் வாழ்க்கைக்குத்தான் அர்த்தமேது? எனவே வாழ்வு சிறக்க, புகழுடன் பயனுற வாழுதலே, உயிர்தரித்தலிலும் இன்றியமையாதது. மனிதர்கள் அவ்வாறு பிறருக்கும், உலகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏன் தனக்கும் பயனுற, புகழுடன், இனிமையுடன், நற் காரியங்கள் சாதித்து உயர்வுற அர்களுக்கு ஒழுக்கம் அத்தியாவசியமான, அடிப்படைக் குண நலன். நல் ஒழுக்கத்தை இடையறாது பேணாது, நன் நெறியை மறவாது ஒழுகாது யாரும் வாழ்வில் உயர்வு என்பதை நிச்சயம் அடைய முடியாது.

எனவே வாழ்வின் மேன்மைகளை, உயர்வுகளைத் தரும் ஒழுக்கத்தைத் தமது உயிரினும் மேலானதாகக் கொண்டு பேணிக் காத்தல் வேண்டும் என்பது பொருள்.

ஒருவர் வாழுவதற்கு உயிர் அத்தியாவசியமானது, அவர் வாழ்வை முழுமைப் படுத்த அதைக் காட்டிலும் ஒழுக்கம் மிக அவசியமானது.

குறிப்புரை :
உயிரைக் காட்டிலும் முக்கியமானது ஒழுக்கம்.

அருஞ்சொற் பொருள் :
விழுப்பம் - விழுமம், மேன்மை, உயர்வு, சிறப்பும், பெருமை, நன்னிலை
ஓம்புதல் - பாதுகாத்தல், பேணுதல்

ஒப்புரை :

திருமந்திரம்: 2068
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

திருமந்திரம்: 2069
பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.

திருமந்திரம்: 2070
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

திருமந்திரம்: 2071
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

திருமந்திரம்: 2072
கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.

திருமந்திரம்: 2073
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்புஅறி யாரே.

ஔவையார். கொன்றை வேந்தன் :
9. ஐயம் புகினும் செய்வன செய்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 131

Discipline is superior to Life...




In Tamil

ozhukkam vizhuppam tharalAn, ozhukkam
uyirinum Ombappadum.

Meaning :
Discipline gives excellence to life therefore such discipline must be upheld more than the life.

Explanation :
As the good discipline gives excellence in life it must be upheld more importantly than one's own life.

Life is important to live. But when one considers just the Life is meant to live and die then what is the purpose of it? Therefore to make the Life eminent, it should be made useful and honored and hence those qualities are more important than just living with the Life. Human beings to be useful to one and all, to the world, to the society, to one's own self, to live with glory, to extol, to be happy, to accomplish greater deeds and to grow, discipline is important and necessary trait. Without practicing continuously the good discipline un-forgetting the good virtues one cannot certainly achieve greatness at all.

Therefore one should consider the excellence and eminence giving good virtues and discipline above their own life, practice and preserve them forever.

Life is important to live for one; to make the Life complete in its sense more important is good discipline.

Message :
Discipline is essential than Life.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...