| : | 1. | கடவுள் வாழ்த்து | |
| தலைப்பு | : | 
 | அதிகாரத்தில் பெற்றவை! | 
| 
 | 
 | 
 | 
| குறள் எண். | குறள் குறிப்புரைகள் | 
| 1. | அனைத்து எழுத்துக்களும், மொழிகளும் இறைவனை முன்னிறுத்தியே உலகில் படைக்கப்பட்டு உள்ளன. 
 | 
| 2. | கல்வியின் நோக்கம் இறைவனின் நற் பாதங்களைத் தொழுது அவர்தம் மெய்யறிவைப் பெறுதலே. 
 | 
| 3. | இறைவனின் பாதங்களை இதயப் பூர்வமாய்ப் பேணினால் இந்நிலத்தே நீண்டு வாழலாம். 
 | 
| 4. | தன்நலமற்ற இறைவனின் பாதங்களைப் பேணின் ஒருபோதும் இடரில்லை. 
 | 
| 5. | இறையெனும் மெய்ப்பொருளைப் போற்றுவோருக்கு நல்வினை, தீவினை எச்சங்கள் இல்லை. 
 | 
| 6. | ஐம்புலனைக் கட்டுப்படுத்திய இறை நெறியில் ஒழுகினால் நீண்டு நிலைத்து வாழலாம். 
 | 
| 7. | ஒப்பற்ற இறைவனைத் தொழுதலே மனக் கவலைக்கு மாமருந்து. 
 | 
| 8. | அறக் கடலாகிய இறைவனைப் பேணியே பொருள், இன்பம் எனும் கடல்களைக் கடக்க இயலும். 
 | 
| 9. | எண் குணத்து இறைவனைச் சிந்தித்துப் பணியாத தலை அர்த்தமற்றது. 
 | 
| 10. | இறைவன் அடியைப் பேணியே இப்பிறவி வாழ்வைக் கடைத்தேற இயலும். 
 | 
| : | 1. | கடவுள் வாழ்த்து | |
| தலைப்பு | : | 
 | அதிகாரக் குறிப்புரை! | 
| 
 | 
 | 
 | 
| கடவுளை நம்பு, பணி, தொழு, பேணு. வெற்றி பெறுவாய்! | 
| 
 | 
| ••• | 
. 
| Believe in GOD. Bow, pray, follow and you will win. | 
| 
 | 
| ••• End of Chapter: 1 ••• | 
 
 
 
 

0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...