Wednesday, June 17, 2009

திருக்குறள்: 16


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 16



விசும்பின் துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்பு அரிது.


பொழிப்புரை (Meaning) :
வானின் மழைத்துளி வீழாதே அல்லால், பிறகு அங்கே, பசும்புல்லின் தலையைக் காண்பதும் அரிது.


விரிவுரை (
Explanation) :
வானின்று மழைத்துளி விழாமல் இருந்துவிட்டால் பின்னர் பசும்புல்லின் தலையையும் காண்பது கடினம் அல்லது காண இயலாது. பசும்புல் என்பது ஓரறிவு கொண்ட உயிர். அதாவது ’ஓரறிவு கொண்ட உயிரே காணாமல் போய்விடும் என்றால் மற்றவற்றின் நிலையை என்னவென்று சொல்வது?’ என்பது உட்பொருட் கேள்வி.

எனவே மழையின் இன்றியமையாமை சொல்லாமல் சொல்லப் படுகின்றது.


குறிப்புரை (Message) :

மழையில்லாது பசும்புல்லும் தலை காட்டாது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

விசும்பு - மேகம், வானம், விண்


ஒப்புரை (References) :

ஐம்பூதங்களில் ஒன்றான வான மண்டலமும் இறை அங்கமே.

சிவவாக்கியம்:281
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே.


பட்டினத்தார்: (திருக்கழுமல மும்மணிக்கோவை)
அருள்பழுத்தளிந்த கருணைவான்கனி
ஆராவின்பத் தீராக்காதல்
அடியவர்க்கமிர்த வாரிநெடுநிலை
மாடக்கோபுரத் தாடகக்குடுமி
மழைவயிறுகிழிக்குங் கழுமலவாணநின்
வழுவாக்காட்சி முதிராவிளமுலைப்
பாவையுடனிருந்த பரமயோகி

....

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...