Friday, June 12, 2009

திருக்குறள்: 4. இறையடியில் எப்போதும் துன்பமிலை!

அதிகாரம்

:

1.

கடவுள் வாழ்த்து

திருக்குறள்

:

4.

இறையடியில் எப்போதும் துன்பமிலை!

 

 

 

In English

 


வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கி
யாண்டு மிடும்பை யில.

 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

 

பொழிப்புரை :

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எங்கேயும் எப்போதும் துன்பம் இல்லை.

 

விரிவுரை :

விருப்பு வெறுப்பே துன்பங்களுக்குக் காரணமாக இருப்பவை. ஆகையால் அவை இரண்டும் இல்லாத இறைவனின் பாதங்களை அடைந்தோருக்கு அவ்விதமே எங்கேயும், எப்போதும் எவ்வகைத் துன்பமும் இராது.

விருப்பு வெறுப்பற்ற தலைமையைப் பின்பற்றித் தாங்களும் தன்னலமின்றி இருந்தால் ஒருபோதும் இடர்கள் வருவதேயில்லை.

 

குறிப்புரை  :

தன்நலமற்ற இறைவனின் பாதங்களைப் பேணின் ஒருபோதும் இடரில்லை.

 

அருஞ்சொற் பொருள் (Synonyms):

யாண்டும்: எப்போதும், எவ்விடத்தும், எத்தகையதாகியதும்

 

ஒப்புரை :

இறைவன் அடி சேர்தலையே, பாதங்களைத் தொழுவதையே வைணவர்கள் தங்கள் மதத்தில் முக்கியமாகக் கருதுகிறார்கள். அதைச் சரணாகதி தத்துவம் என்கிறார்கள். எனவே அதை உணர்த்தும்பொருட்டு மதச் சின்னமாக நாமத்தைக் கொண்டார்கள். நாமம் உண்மையில் என்புத்தியில் உன் பாதங்களே, நான் உன்பாதங்களையே சிந்திப்பேன், தொடருவேன், பின்பற்றுவேன் என்பதுவும் உன் பாதார விந்தங்களுக்கே என் புந்தியில் சரணடைந்தேன் என்பதும் ஆகும்.

இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் செயல்களுக்குக் காரணமாகியவராக இருப்பவர். அவருக்கு அல்லது அந்த விதிகளின் ஒழுங்குக்கு விருப்பு, வெறுப்புக்கள் என்பது கிடையாது. எனவே இறைவனாகிய பரம் பொருள் விருப்பு, வெறுப்பற்றவர் என்றாகின்றார்.

உயிர்களுக்குத்தான் விருப்பு, வெறுப்பு உண்டு. அவையே இன்ப, துன்பங்களுக்குக் காரணம். அதனாலேயே உயிர்கள் அவற்றில் உழல்கின்றன. இதில் புத்தரின் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதும் விளங்கும். ஆசை மட்டுமல்ல வெறுப்பும் துன்பத்திற்குக் காரணம் என்பது வள்ளுவரின் நுட்பம்.

சித்தம் தெளியப் பெற்றவர்கள் விருப்பு, வெறுப்பின்றிச் செயல் படுவார்கள். சுயநலமின்றி வாழ்வின் முக்கிய நோக்கமாகிய முக்தியையே எண்ணிச் செயல் படுகின்றவர்களுக்கு இயற்கையாகவே விருப்பு, வெறுப்பற்ற நிலையில், அதாவது பற்றற்ற நிலையில் பயணிக்கத் தோன்றும். இதையே சித்தர்கள் தாமரை இலைத் தண்ணீராய், இறந்தாரைப் போல் வாழ வேண்டும் என்றும் நிலையாமைத் தத்துவம் என்றும் சொல்கின்றார்கள். இறந்தாருக்கு விருப்பு, வெறுப்பு இருக்காது மேலும் புகழ்சி, இகழ்சி அவர்களைச் சஞ்சலப் படுத்தாது.

 


பட்டினத்தார்: பொது: 7
ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மட நெஞ்சே!
செத்தாரைப் போலே திரி.

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை : 13
ஊருஞ் சதமல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல; பெண்டீர் சதமல்ல; பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல; செல்வஞ் சதமல்ல; தேசத்திலே
யாருஞ் சதமல்ல; நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே!

 

•••




 

Chapter

:

1.

The Praise of The God

Thirukkural

:

4.

No affliction ever under the God!

 

 

 

In Tamil

 


 

 

vEndudhal vEndAmai ilAnadi sErndharkku
yAndum idumbai ila.

 

Meaning :

Those who gain the feet of the GOD who has neither likes nor hates will not have any affliction forever.

 

Explanation :

Likes and dislikes are the cause of suffering. Therefore there will be no such misery anywhere and anytime for those who have reached the feet of the Lord that has neither of them.

Risks never come, if they themselves are selfless and are following the leadership which has no likes or dislikes.

 

Message :

Never ever any affliction by cherishing the feet of the selfless Lord.

 

References:

Vaishnavism considers attaining the Lord's feet and the worship of the feet as important in their religion. It is called the Surrender Philosophy. So they adopted Namam as a religious symbol in order to imply it. The Nama signifies really your feet is in my mind, I will think, continue and follow thy feet and I surrender my mind to Lords lotus footsteps.

The Lord is the one who is responsible for the acts of creation, preservation, and destruction. There is no like or hatred to him or to the nature. Therefore, the omnipotent God is considered having no likes and dislikes.

Only living things have likes and dislikes. They are the cause of pleasure and suffering. That is why lives languish in them. This explains the Buddha's concept that the desire is the only cause of sufferings. Valluvar's nicety is that not only desire but also hatred is the cause of sufferings.

Those who have clear mind will act without liking or hatred. For those who selflessly pursue salvation, which is the main purpose of life, it naturally appears to travel in a state of no liking and hatred, that is, the detachment. This is what the Siddhas say like the water on lotus leaf and living like the dead and that it is a philosophy of instability. The dead will have no love or hate, and praise and contempt cannot waver them.

Pattinathar: podhu: 7
Aviyodu kAyam azhindhalum Mediniyil
PAvi endru nAmam padaiyAdhE mEviya seer
VithAramum kadambum vEndAm mada nenje
SethAraip polE thiri.

Pattinathar: thiru Ekamba mAlai : 13

oorunj sadhamalla; utrAr sadhamalla utrup petra
pErunj sadhamalla; pendeer sadhamalla; piLLaikaLunj
seerunj sadhamalla; selvam sadhamalla; dhesathilE
yArunj sadhamalla; nin thAl sadham kachi Ekambsne!

 

•••





























0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...