Friday, June 12, 2009

அறத்துப்பால் & அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து
அறம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்கமே என்று திருவள்ளுவரால் வகுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வொழுக்கமாகிய அறத்தை மேலும் இல்லறம், துறவறம் என்று இருவகை நிலையால் விளக்குகின்றார். இதிலும் இல்லறத்தை முன்னரும் துறவறம் என்பதைப் பின்னரும் கூறியமையும் வள்ளுவனாரின் அறம் பற்றிய ஒப்பற்ற வாழ்வியல் நுண்ணறிவுத் தத்துவம் புலப்படும்.


பாயிரவியல்:


அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்துஅதிகாரம்

: 1

கடவுள் வாழ்த்து

முகவுரை

Chapter : 1

In Praise Of God

Preface

திருவள்ளுவர் இறை வாழ்த்துப் பாடித் துவங்குவது, தாம் எடுத்துக் கொண்ட இலக்கியப் பணி இனிதே வெற்றி பெறவே என்பது மட்டுமல்லாது அவ்வாறே நாமும் எந்தச் செயலையும் துவக்க வேண்டுமென்பதையும் அதில் கடவுள் நெறியாக நமக்குக் காட்டுகின்றார்.

கடவுள் வாழ்த்து என்று எழுதியதிலேயே திருவள்ளுவர் தெய்வ நம்பிக்கை கொண்டவர் மட்டுமல்ல, அதுவே வாழ்வின் அத்தியாவசியத் தேவை என்பதையே இந்த அத்தியாயம் முழுமைக்கும் வலியுறுத்திச் சொல்கின்றார். அதுவே கல்வி, அறிவு, வாழ்வின் நோக்கம் என்கின்றார்.

மதச்சார்பற்ற அவரது கடவுள் வாழ்த்து, படிப்போருக்கெல்லாம் அவரவர் தம் மதங்களையும், கோட்பாடுகளையும் பிரதிபலிப்பதே குறளின் வியக்கத்தக்க தன்மை. அவர்தம் காலத்திலிருந்த மதங்களின் கருத்துக்களை உணர்ந்து, அவற்றில் தமக்கென்று ஒரு நடுநிலைமையைக் கொண்டு கடவுள் வாழ்த்தைச் செய்திருக்கிறார் வள்ளுவர்.

இருப்பினும் ஒன்றே குலம், ஒருவனே தேவன் எனக் கோட்பாடு கொண்ட சித்தர்களின் எண்ணமும், மனதையே கோயிலாகக் கொள்ளும் மாண்பும் பிரதிபலிப்பதால் வள்ளுவர் சைவ சித்த நெறியினின்றே பேசுகிறார் என்றே தோன்றுகின்றது. மேலும் சைவ நெறியே தொன்று தொட்டு இருந்து வந்த சமயமாதலின் அதன் தாக்கமே வள்ளுவரிடம் அதிகம் உள்ளது என்றும் நான் உணர்கின்றேன்.

உதாரணத்திற்கு கடவுள் வாழ்த்தில் முதல் குறள் மூன்றையும் முறையே சிவன், மால், அயனிற்கே வரிசையில் பொருத்தமாகவும் மறைவாகவும் அர்ப்பணித்து இருக்கிறார் என்றும் தோன்றுகின்றது. ஆதிபகவன் என்பது அரனையும், வாலறிவன் என்பது மாலவனையும், மலர்மிசை ஏகினோன் என்பது அயனையும் பொருந்துவது கண்கூடு. பின்னர் தொடரும் குறள்கள் மூவருக்கும் மேன்மையான பரம்பொருளாகிய, பரமசிவனைக் குறிப்பதாகவும் எனக்குத் தோன்றுகின்றது.

மேலும் திருவள்ளுவர் யோகநிட்டையில் அமர்ந்து குண்டலினி யோகத்தைத் தட்டி எழுப்பி வாலைக் குமரியிலிருந்து ஏழு சக்கர நிலைகளுக்கும் ஒவ்வொரு வார்த்தையாக அமைத்தே குறளை ஏழு வார்த்தைச் செய்யுளாக அமைத்தார் என்றே நம்புகின்றேன். எனவே ஏழாம் நிலையின்; சக்கரத்தின் அதிபதியாகிய பரம்பொருளே; பரமசிவனே வள்ளுவரின் இறைவன் என்றும் துணிகின்றேன்.


ஒப்புரை (Reference)

பட்டினத்தார். பொது: 20
ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு! உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு! பசித்தோர் முகம் பார்! நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு! நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு! மனமே உனக்கே உபதேச மிதே.

திருமந்திரம்: 1823
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

பட்டினத்தார்: தலப்பாடல்: 5
ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் - நேரே
உளக்குறிப்பை நாடாத ஊர்மக்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத் தேடுவீர்.

***


In English:

Thiruvalluvar starts with the prayer to the God through this first chapter 'In Praise to the God’ not only to make his literary mission to be a happy success but also to show us the principle how to start any work.

Having written 'In Praise of God' itself made him very obviously a theist, Valluvar, actually emphasizes theism as the mandatory throughout this chapter. He mentions that it as the education, knowledge and the purpose of this life.

His philosophy on God with no mention of any religion makes all the readers to think and reflect of their own religions and doctrines, and that is the amazing aspect of Kural. Having understood and observed all the religions which existed at his time, Valluvar has drawn rationally and chosen his own principles of God mentioned here in this chapter.

However, his views are mostly aligns with the Siddhars, the sages of South India, who had the concept of 'Single Race and Single God', and considering the self itself as the temple of God. Since Kurals more so reflect Siddhar's concepts it looks like Valluvar talks their doctrines only. Valluvar may well be a Siddha by himself is another school of thought. Also, being the first religion or the way of life, the 'Saivam' which has originated long ago, has more impact on Valluvar is my perspective.

For example, in this chapter, first three kurals are seemed to have been dedicated metaphorically and indirectly to Sivan, Maal and Ayan in order respectively. (Siva, Vishnu and Brahma). All the rest of kurals in this chapter are seem to have been pointing the Parama Sivan the primordial and superior God to all the above three is my assumption.

Also I believe that Thiruvalluvar was in yoga and invoked the Kundalini power, and for the each chakkara starting from the Valaaikkumari he has dedicated a word to form the seven words Kural each time. Therefore I conclude that the God of the seventh chakkara, the Primordial God, the Parama Siva is the God of the Valluvar.

***

1 comments:

krshi said...

Nice explanation & Nice voice
Thanku Sir...

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...