அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.
விரிவுரை (Explanation):
உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.
மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.
ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.
குறிப்புரை (Message):
உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.
அருஞ்சொற் பொருள்:
துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.
ஒப்புரை (References) :
திருமந்திரம்:10
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.
திருமந்திரம்:85
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
4 comments:
"இயற்கையின் அமுதசுரபி!"
அமுதம் பருகினால் அழியா வரம்!
இவ்வமுதம் பொழிதலே பெரிய வரம்!
வித்திற்க்கு கணவனாக!
விளைச்சலுக்கு காப்போனாக!
வித்திட்டவனுக்கு கடவுளாக!
வித,வித அவதாரங்களில்,
வந்து,வந்து அரவணைக்கும்,
ஆண்டவனின் அழகிய அமுதசுரபியே!
mmmmmmisisisisisisisisisisisisisisisisisisisisisisisisisisoooooooooooooooooo
This is very great. ...
Super ji
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...