Tuesday, November 10, 2009

திருக்குறள்: 138 (நன்மைக்கு வித்து நல்லொழுக்கமே...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 138

நன்மைக்கு வித்து நல்லொழுக்கமே...

In English

நன்றிக்கு வித்து ஆகும், நல் ஒழுக்கம்; தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

பொழிப்புரை :
நன்மைக்கு விதை ஆகும் நல் ஒழுக்கம்; தீ ஒழுக்கம் என்றைக்கும் துன்பத்தைத் தரும்.

விரிவுரை :
நன்மையெனும் விளைச்சலைத் தர நல் ஒழுக்கம் வித்தாக இருக்கும்; ஆனால் தீ ஒழுக்கம் எக்காலத்திலும் துன்பத்தையே தரும்.

நல் ஒழுக்கம் உடனடியாகப் பலன் தருவதைக் காட்டிலும், நன்மைகளைப் பிறகு தரும் காரணியாகத் திகழும். நல் வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும். இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் தரும்.

தீ ஒழுக்கம் எப்போதும் துன்பத்தையே தரும். தீ ஒழுக்கத்தால் இன்பம் கிட்டுவது போல் தோன்றினால் அஃது போலியானது; நிரந்தரமற்றது. அதன் இறுதிப் பயன் எப்போதும் துன்பமே. துன்பத்தின் தொடர்ச்சியாய் சிரமும், வறுமையும், நோயும் பீடித்து எல்லாக் காலத்திலும் துன்பமே மிகும். தீ ஒழுக்கமானது அனைத்தையும் தொடராக ஒழுங்கீனம் செய்து முழு நாசத்தையே நல்கும்.

குறிப்புரை :
நல் ஒழுக்கம் நன்மையையும் தீ ஒழுக்கம் தீமையையுமே விளைவிக்கும்.

அருஞ்சொற் பொருள் :
வித்து - விதை
இடும்பை - துன்பம், சிரமம், தீமை, நோய், ஏழ்மை.

ஒப்புரை :

திருமந்திரம்: 2108
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே.

திருமந்திரம்: 2109
கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.

திருமந்திரம்: 2110
விடுகின்ற சிவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

திருமந்திரம்: 2111
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

திருமந்திரம்: 2112
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.

ஔவையார். ஆத்திச்சூடி:
88. மனம் தடுமாறேல்.
98. மோகத்தை முனி.
103. உத்தமனாய் இரு.

ஔவையார். கொன்றை வேந்தன் :
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 138

Good discipline is seed for goodness...




In Tamil

nanRikku viththu Akum, nal ozhukkam; thI ozhukkam
enRum idumbai tharum.

Meaning :
Good discipline is seed for the goodness; Bad conduct always renders ill.

Explanation :
Good discipline is the seed for the yield of goodness; but indiscipline or the bad conduct will yield only ill at always.

The Good discipline than giving the yields immediately, will be the cause for the later yield of goodness. It will be the support for the good life. It can give happiness for the current life and thereafter.

Indiscipline always yields affliction. If the happiness seem to be result of indiscipline or bad behavior, that is spurious, deceptive and impermanent. Its final usage or result would be affliction alone. In continuation of affliction, the difficulties, impoverishment and unhealthiness increases and only sorrowfulness remain at always. Indiscipline in succession makes everything disoriented and ends up in complete and total destruction.

Message :
Good discipline yields goodness; bad conduct yields evils forever.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...