|
| |
| |
பொழிப்புரை : | |
பகை, பாவம், அச்சம், பழி என்னும் இன் நான்கும் விலகாதாம்; பிறன் மனையாளிடத்தில் நெறிதவறிக் கிடப்பவன் கண். | |
| |
விரிவுரை : | |
பிறன் இல்லத்தரசியின் கண் நெறிதவறிக் கிடப்பவனித்தே, பகை, பாவம், அச்சம், பழி என்னும் இன் நான்கு குற்றங்களும் ஒருபோதும் விட்டு விலகாது. பிறன் மனைவியைப் பெண்டாளுபவனுக்கு எந்த நேரத்தில் உண்மை வெளிப்பட்டு விடுமோ எனும் அச்சமும், வெளித்தெரிந்தால் அன்றில் இடைஞ்சல்களால் வரும் பகையும், அவன் செய்வித்த இந்த தீயொழுக்கத்தால் விளைந்த பாவமும், அதன்பால் உண்டாகிய பழியும் எப்படி விலகும்? அவனது உள்ளம் எப்போதும் இன் நான்கு குற்றத்தால் நிறைந்து, ஓயாது இன்னல் தரும். இன் நான்கு குற்றங்களும் தம்மைத் தொடர விரும்பாதோர் நல்லறத்தைப் பேணி, மனத்தாலும் பிறன் மனை விழையும் எண்ணத்தை விட்டு விடவேண்டும். | |
| |
குறிப்புரை : | |
பிறன் மனை விழைபவனிடத்தே பகை, பாவம், அச்சம், பழி எனும் நான்கும் விடாது குடியிருக்கும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
இகவா - கடக்காது, தாண்டாது, நீங்காது. | |
| |
ஒப்புரை : | |
| |
நாலடியார்: 82 அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்றாராம் நச்சுவார்ச் சேரா - பிறன்றாராம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் றச்சத்தோ டிந்நாற் பொருள். நாலடியார்: 83 புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துக்கு இடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம் எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ வுட்கான் பிறனில் புகல். நாலடியார்: 84 காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும் ஆணின்மை செய்யுங்கா லச்சாமாம் - நீணரியத் துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட இன்ப மெனக்கெனத்தாற் கூறு. திருமந்திரம்: 207 வையகத் தேமட வாரொடும் கூடியென் மெய்யகத் தோடும் வைத்த விதியது கையகத் தேகரும் பாலையின் சாறுகொள் மெய்யகத் தேபெரு வேம்பது வாமே. ஔவையார். ஆத்திச்சூடி: 102. உத்தம னாயிரு. ஔவையார். கொன்றை வேந்தன்: 78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு 91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 28 சொல்லால் வருங்குற்றஞ்சிந்தனை யால்வருந்தோடம் செய்த பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவும்மற்று எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்! கச்சி ஏகம்பனே! சிவவாக்கியர்: 452 நீங்கும் ஐம் புலன்களும் நிறைந்த வல் வினைகளும் ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும் ஓங்காரத்தின் உள்ளிருந்த ஒன்பதொழிந் தொன்றிலத் தூங்கஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே. | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Hatred, sin, fear and disgrace - these four will never get away from the adulterers of other's wife. | |
| |
Explanation : | |
Hatred, sin, fear and disgrace never go away but remain with the culprit who surrendered with desires and does adultery with other's wife. That who does adultery with other's wife will have always the guilt and fear whether the truth will come out at anytime. When the truth comes out or through the interruptions he will always carry angry with him; Therefore through this heinous and unfaithful act the sin and disgrace created how will it go away from him? His mind and heart will be with all these defective traits and his conscience will be killing him ever. Those who do not want these four defects to follow them, should follow the good virtues and should never think of the adultery with other's mate. | |
| |
Message : | |
With the adulterers of other's wife, hatred, sin, fear and disgrace - these four will dwell for ever without leaving. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...