|
|
அன்புடையீர், குறள் அமுதம் மென் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். மகிழ்ச்சியுடன் பயன்படுட்திக் கொண்டிருப்பீர்களென நம்புகின்றேன். இணையத்தளத்தில் விமரிசனங்களைப் பதிவு செய்த திரு. கேசவன் அவர்களுக்கும், குழந்தைகள் தின வாழ்த்தைத் தெரிவித்த நண்பர். தமிழ் நெஞ்சம் அவர்களுக்கும் நன்றி. அனைவரும் குதூகலத்தோடு குழந்தைகள் தினவிழாவைக் கொண்டாட வாழ்த்துக்கள். குறள் அமுதம் இணையப்பக்கத்தில் இணைந்து கொண்ட அனைத்து இதயங்களுக்கும் நன்றி. உங்களின் வரவில் பெருமை அடைகின்றேன். |
சில கேள்வி பதில்கள்: 1. மென்புத்தகத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது? இலவச மென்புத்தகங்கள் என்னும் இணைப்பைச் சுட்டி தேவையானதைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முதலில் தரவிறக்கம் செய்த போது செய்த செயல்பாடுகளை இப்போதும் செய்து கொள்ளுங்கள். அடிப்படையில் உங்களின் கணினியில் இருக்கும் பழைய சுவடி, இப்புதிய கோப்பால் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 2.முதன் முதலில் தரவிறக்கம் செய்வது எப்படி? முதன் முறை தரவிறக்கம் செய்தால் .zip சுட்டியைத் தரவிறக்கம் செய்து, unzip செய்து பயன் படுத்தவும். இம்முறையில் மென்புத்தகத்தின் அகலம், உயரம் போன்றவை ஏற்கனவே நான் அமைத்துள்ளபடி உங்களுக்குக் கிட்டலாம். எனவே இந்தச் சுட்டியைத் தரவிறக்கம் செய்வதையே நான் பரிந்துரைப்பேன். 3. KuralAmutham.chm சுட்டியைத் தரவிறக்கம் செய்து கொள்வது எப்படி? இச் சுட்டியைத் தரவிறக்கம் செய்தால், கீழ்க்கண்ட முறைகளை மேலும் கையாள வேண்டும். முதலில் தரவிறக்கம் செய்த பிறகு இக்கோப்பைச் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வலது மவுஸ் பொத்தானை ஒத்தி, file Properties குச் செல்லவும்.General tab பகுதிக்குச் சென்று Unblock பொத்தானை ஒத்தவும். பிறகு Apply மற்றும் Ok பொத்தான்களை ஒத்தி வெளியேறவும். இவ்வாறு செய்யாவிடின் இவ்விதமாக தரவிறக்கம் செய்யப்பட்ட மென்புத்தகம் பொருளடக்கத்தைக் காண்பிக்காது. எனவே மென்புத்தகத்தில் Unblock அவசியம் செய்து கொள்ளவும். 4. எப்படிக் கமெண்ட் செய்வது? குறள் அமுதம் இணையப் பக்கத்தில் உள்ள கமெண்ட் பாக்ஸைப் பயன் படுத்தி, உங்கள் எண்ணங்களை, பின்னூட்டங்களைப் பதியவும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டிலும் இங்குப் பதியலாம். 5. ”குறள் அமுதம் பக்கத்தில்” ஒரு குறளை எப்படித் தேடுவது? ’Search' எனும் பாக்ஸில் உங்களுக்குத் தேவையான குறளின் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது குறளின் எண்ணை உள்ளீடு செய்து, ‘Search' பொத்தானை ஒத்தவும். பெரும்பாலும் உங்களின் தேடலுக்கான அட்டவணை அல்லது வாய்ப்புக்கள் ஒன்று மட்டும் இருந்தால் நீங்கள் கேட்ட தகவலுக்கான குறளமுதம் பக்கம் காண்பிக்கப்படும். |
|
*** |
In English: (About KuralAmutham eBook)
Dear Friends I extend my thanks to all who have downloaded the "KuralAmutham" eBook. I am sure you are using it happily. Thanks to Mr. Kesavan who has registered his comments in this web page. And also to the friend Mr. TamilNenjam for his wishes on Children's day. I wish all to celebrate joyfully the Children's day. Thanks to all who have registered in Kural Amutham blog spot. I am proud to welcome you all. Thanks |
|
Few Questions and Answers: |
|
1. How to update your KuralAmutham eBook? |
|
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...